இன்றைய பதிவில் “உலகமயமாதல் கட்டுரை” பதிவை காணலாம்.
எதிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கும் என்பதனை உணர்ந்து அனுகூலங்களையும் தீமைகளையும் நன்குணர்ந்து செயற்பட்ட வேண்டும்.
உலகமயமாதல் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலகமயமாதல் என்றால் என்ன?
- உலகமயமாதலின் தோற்றம்
- உலகமயமாதலின் விளைவுகள்
- உலகமயமாதலும் பண்பாடும்
- முடிவுரை
முன்னுரை
உலகமயமாதல் வரலாற்றில் ஒரு தொடர் நிகழ்வு ஆகும். உலகில் எந்தவொரு அரசியல் பொருளாதார உறவிலும் இல்லாத ஒரு நாடு கூட இல்லை. அந்தளவு உலகமயமாதல் மனித வாழ்வியலோடு கலந்துள்ளது.
உலகமயமாதல் மூலம் பல நன்மைகளை அடையப் பெற்றுள்ள போதிலும் எதிர்மறையான விளைவுகளையும் உலகம் சந்திக்கத் தவறவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். உலகமயமாதல் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
உலகமயமாதல் என்றால் என்ன?
உலகமயமாக்கல் என்பது பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப, சமூக மற்றும் கலாச்சார துறைகளில் உலக ஒருங்கிணைப்பின் ஒரு வரலாற்று செயல்முறையாகும், இது நாடுகளை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இடமாக மாற்றியுள்ளது.
இந்த அர்த்தத்தில், இந்த செயல்முறை உலகை உலகளாவிய கிராமமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது.
மேலும் உலகமயமாக்கல் என்பது ஒருங்கிணைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதற்கான வழிமுறையாகும்.
உலகமயமாதலின் தோற்றம்
உலகமயமாக்கல் என்பது ஒரு தெளிவான நிகழ்வு, குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கொலம்பஸின் வருகையுடனும், உலகெங்கிலும் உள்ள ஐரோப்பிய சக்திகளால் காலனித்துவமயமாக்கலுடனும் உலகமயமாதலின் ஆரம்பம் இருந்தது என்று பொதுவாக சுட்டிக்காட்டப்படுகிறது .
இந்த செயல்முறை 19 ஆம் நூற்றாண்டின் தொழில்துறை புரட்சி மற்றும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிலிருந்து அதிவேகமாக வலியுறுத்தப்பட்டது, மேலும் இது 20 நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து முழு வடிவத்தையும் பெற்றது.
உலகமயமாதலின் விளைவுகள்
உலகமயமாக்கல் காலப்போக்கில் பல தொடர்ச்சியான நன்மைகள் மற்றும் தீமைகளை உருவாக்கியுள்ளது. மனித உறவுகள் வலுப்பெற்றுள்ளன, உலகமயமாதல் மூலம் பொழுதுபோக்கு வாய்ப்புகளும் விரிவடைந்துள்ளன, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவியுள்ளது, தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளவும் பங்களிப்புச் செய்கின்றது.
இவ்வாறு பல நன்மைகளுடன் பல தீமைகளையும் தந்துள்ளது என்பதும் மறுக்க முடியாததாகும்.
பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் வேலையின்மை அதிகரிக்கிறது, காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அலுவலகங்களைத் திறக்கின்றன.
ஏனெனில் அங்கு கிடைக்கும் உழைப்பு மற்றும் மூலப்பொருட்கள் மலிவானவை என்பதால் வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பல அறிமுகம் செய்யப்படுகின்றன.
நாடுகளுக்கிடையிலான தொடர்புகள் அதிகரிப்பதன் விளைவாக தேசிய அடையாளம், பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றில் கலப்பு ஏற்படுகின்றது. இதனால் பல பழங்குடி மரபுகள், பழக்கவழக்கங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. சமூக சமத்துவமின்மை ஏற்படுகின்றது.
உலகமயமாதலும் பண்பாடும்
உலகமயமாதலால் இன்று பயன்பாட்டுத் தனித்துவம் மாற்றமடைந்து வருவதைக் காண்கிறோம். உலக மக்களுடையேயான தொடர்புகள் அதிகரித்து வருவதே இதற்குக் காரணமாகும்.
இந்திய தேசங்களைப் பொறுத்த வரையில் தனித்துவமான பல பண்பாடுகளைப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேணிக்காத்து வந்த பெருமைக்குரியது. உலகமயமாக்கலால் இந்தத் தனித்துவம் சிதைவடைகின்றது.
என்னதான் மாற்றங்கள் எதிர்வந்த போதிலும் நமது மக்கள் நமது பண்பாட்டை இழத்தல் ஆகாது. குறிப்பாக மேலைநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் நமது பண்பாட்டைப் பேணிக்காப்பவர்களாக விளங்க வேண்டும்.
உலகமயமாக்கலினால் நமது பண்பாடு சீர்குலையக் கூடாது. அதனைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை என்பதை மறத்தல் ஆகாது.
முடிவுரை
உலகமயமாக்கலினால் வளர்முக நாடுகளே அதிகம் பாதிப்படைகின்றன. இருப்பினும் சில நன்மைகளும் கிடைக்கின்றன.
ஆகவே எங்கும் எதிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கும் என்பதனை உணர்ந்து அனுகூலங்களையும் எதிர் விளைவுகளையும் நன்குணர்ந்து செயற்பட்டால் நற்பலன் அடையலாம்.
உலகத்தோடு ஒத்து வாழ்வோம். நமது தனித்துவத்தை பேணிக் காப்போம்.
You May Also Like : |
---|
சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை |
அன்றாட வாழ்வில் அறிவியல் கட்டுரை |