உலக இசை தினம் | ஜூன் 21 |
இசை என்பது கலை மட்டுமல்ல. நமது எண்ணங்கள், நினைவுகள் அடங்கிய ஒரு உணர்வுபூர்வமானது. பெரும்பாலான மனிதர்களின் கவலையைத் தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழும் இசை உலகின் பொது மொழியாகத் திகழ்ந்து வருகின்றது.
இசைக்கு மயங்காதவர்கள் இல்லவே இல்லை. நாடு, மொழிகளிற்கு அப்பாற்பட்டது இசை. எங்கும், எதிலும் இசை நிறைந்துள்ளது. இசையின் அசைவுகள் இயற்கையோடு பல இடங்களில் சங்கமித்துள்ளது.
இயற்கையின் படைப்புக்கள் எழுப்பிய ஒலிகள் மூலமாக உருவான இசைக்கு மயங்காத ஆட்களே இல்லை. மகிழ்ச்சி, துக்கம், கொண்டாட்டம் என இசை நாம் இந்த உலகத்தில் தவழ ஆரம்பித்த காலம் முதல் மீண்டும் மண்ணுக்கு செல்லும் காலம் வரை நம்முடன் இணைந்து பயணிக்கிறது.
இசை உருவான வரலாறு
ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்பே இசை தோன்றிவிட்டது என கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இசை மனிதன், இயற்கை, பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலமாகவே தோன்றியது.
இசை தினம் கொண்டாடப்படும் நாள்
ஜூன் மாதம் 21 ஆம் திகதி உலக இசை தினம் கொண்டாடப்படுகின்றது. இசை தினம் உலகெங்கிலும் உள்ள 120ற்கும் மேற்பட்ட நாடுகளில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இசை தினம் உருவான வரலாறு
1982-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் கூடினர். அந்த நாளே ‘உலக இசை தின’மாக கொண்டாடப்படுகிறது.
1982 பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதன்முதலில் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. முதன் முதலில் பிரெஞ்சு மொழியில் பெடே டெலா மியூசிக் ( Fete Dela Music ) எனும் பெயரில் கொண்டாடப்பட்டது.
உலகளாவிய ரீதியில் இசை தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது பிரான்ஸின் முன்னாள் கலாசார துறை அமைச்சர் ஜாக் லாங்க்கின் கனவு ஆகும்.
உலக இசை தினம் நோக்கம்
வருங்கால தலைமுறையினருக்கு இசை மீது ஆர்வம் அளிக்கும் விதமாகவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் விதமாகவும் உலக இசை தினம் கொண்டாடப்படுகின்றது.
இசை வகைகள்
உலகில் ஒவ்வொரு நாடும் கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் பல வகையான இசைகளை இசைக்கின்றன.
பழங்கால இசை, இடைக்கால இசை, ஐரோப்பிய கிளாசிக்கல் இசை, கற்பனை இசை, நவீன இசை என பல பரிணாமங்களில் தோற்றம்பெற்றுள்ளது.
இந்தியாவில் வட இந்திய ஹிந்துஸ்தானி, தென்னிந்திய கர்நாடக இசை என இரு வகை இசைகள் இசைக்கப்படுகின்றன.
மேலும் இசை திரை இசை, கஜல், பறை என ஏராளமான வடிவஙங்களைக் கொண்டுள்ளது.
இசையின் வளர்ச்சி
இசை காலத்திற்கேற்ப பல கோணங்களில் பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளதோடு இன்றும் மக்களுடைய மனக்கவலையைப் போக்கும் ஒரு அம்சமாக காணப்படுகின்றது.
றாப் மியூசிக், சோல் மியூசிக், பொப் மியூசிக், டிஸ்கோ, நாட்டுப்பற இசை, ஹெவி மெடல் உள்ளிட்ட இசை வகைகள் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளன.
இசையின் முக்கியத்துவம்
இசைக்கும் மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நன்றாக புரிந்து ஆதிகாலம் தொடக்கம் இசையினை மருத்துவ முறையாக மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
மன அழுத்தங்களை தனிப்பதற்கு பலருக்கும் இசை ஒரு மருந்தாக பயன்படுகின்றது.
இவ்வாறு பல்வேறு வடிவல்களில் மனிதனின் இன்பத்திலும், துன்பத்திலும் உறவாடும் இசை தினத்தை போற்றுவதோடு மட்டும் நிறுத்தாமல் இன்னும் புதுப்புது இசைப் படைப்பாளிகளை உருவாக்குதல் வேண்டும்.
You May Also Like : |
---|
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை |
சுற்றுச்சூழலை பாதுகாப்போம் கட்டுரை |