உலக தற்கொலை தடுப்பு தினம் | செப்டம்பர் 10 |
World Suicide Prevention Day | September 10 |
வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலைச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே தற்கொலைக்கான எண்ணம் அதிகரித்து வருகின்றது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெரியவர்கள் என்று எல்லா வயதினரும் தற்கொலை செய்து கொள்வதை அறியமுடிகின்றது.
தற்கொலை எண்ணமானது முட்டாள்தனத்தினாலும், கோழைத்தனத்தினாலும், அவசரத்திலும் மனிதன் எடுக்கும் முடிவு என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.
தற்கொலை பல சிக்கலான மற்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய மற்றும் அடிப்படை பங்களிப்பு காரணிகளைக் கொண்டு உள்ளது என்றும் மேலும் இந்த காரணிகள் வெறுப்பு மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு பங்களிக்க கூடும் எனவும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் பல உளவியல் காரணங்கள் உள்ளன. மன அழுத்தம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, நிதிச் சிக்கல் உள்ளிட்ட பல காரணங்கள் தற்கொலைக்கு தூண்டும் காரணிகளாக உள்ளன.
உலக தற்கொலை தடுப்பு தினம் வரலாறு
உலகளாவிய ரீதியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனைக் கருத்திற் கொண்ட தற்கொலை தடுப்பதற்கான சர்வதேச அமைப்பு (International association for suicide Prevention) மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து
2003 ஆம் ஆண்டிலிருந்து பிரகடனம் செய்து அன்றிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக அனுசரித்து வருகின்றது.
IASP ஆனது 1960 இல் வியன்னாவில் மறைந்த பேராசிரியர் எர்வின் ரிங்கல் மற்றும் டாக்டர் நார்மன் ஃபேபர்லோ ஆகியோரால் நிறுவப்பட்டது.
உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
தற்கொலையை தடுக்கும் விதமாகவும், தற்கொலை முயற்சியை தடுக்கும் எண்ணம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை என்பது முடிவல்ல என்பதையும் அவசரத்திலும், நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவை தவிர்த்து சற்று ஆராய்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டு என்பதை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் செய்தியை உலக தற்கொலை தடுப்பு தினம் வழங்குகின்றது.
உலக தற்கொலை தடுப்பு தினம் முக்கியத்துவம்
உலகில் 100 இறப்புகளில் ஒன்று தற்கொலையால் ஏற்படுகிறது. தற்கொலை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், தடுப்பதற்கான வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது உலக அளவில் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றது.
அதிகளவிலான தற்கொலை இடம்பெறும் நாடுகளாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
தற்கொலை முடிவை எடுப்பவர்கள் தன்னை மட்டும் மாய்த்துக் கொள்வதில்லை. தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தையும் சேர்த்தே படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள்.
தற்கொலை எனும் தவறான முடிவு பல்வேறு சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமில்லாது தற்கொலைக்கான காரணங்களில் சமூகப் பிரச்சினைகளும் உள்ளன.
பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என கூறப்படுகின்றது.
ஒருவரிடதம் தற்கொலை தொடர்பான எண்ணம் மேலோங்கி இருப்பதனை அறிய அவரிடம் வெளிப்படையாகப் பேசுவது அவசியமாகும்.
தற்கொலையைத் தடுக்க வேண்டுமென்றால் முதலில் சமூகத்திடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடனும், அக்கறையுடனும் செயற்பட்டால் தற்கொலையைத் தடுக்க முடியும் என்பதே உண்மையாகும்.
You May Also Like: |
---|
ஒண்டிவீரன் வாழ்க்கை வரலாறு |
உலக சிட்டுக்குருவிகள் தினம் |