கணினியின் பயன்கள் கட்டுரை

kaniniyin payangal katturai in tamil

எமது வாழ்வின் பிரதான இடத்தை பெற்று வருவதாகவே கணினியானது காணப்படுகிறது. கணினிப் பாவனையானது வீடு, கல்விநிலையங்கள், நிறுவனங்கள் என பல்வேறுபட்ட துறைகளில் பயனுள்ளதொன்றாக காணப்பட்டு வருகின்றது என்பதினூடாக கணினி இல்லாத ஒரு இடமே கிடையாது என்றே கூறலாம்.

கணினியின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கணினி உருவாக்கம்
  • கணினியின் பயன்கள்
  • கணினிமாயமாக்கப்பட்ட கல்வி முறைமை
  • மருத்துவத்துறையும் கணினியும்
  • முடிவுரை

முன்னுரை

நவீன தொழிநுட்பத்தின் பிரதானமாக கருவிகளில் ஒன்றாகவே கணினி காணப்படுகிறது. கணினியின் பயன்கள் எண்ணிலடங்காதவையாகவே திகழ்கின்றது. அதாவது மனித வாழ்வோடு பிண்ணிப்பினைந்தத ஒன்றாகவே கணினி காணப்படுவதானது கணினி தொழில் நுட்பத்தின் சிறப்பினையே எடுத்தியம்புகிறது.

கணினி உருவாக்கம்

கணினி என்பது எண் அடிப்படையிலான தரவுகளை தன்னகத்தே உள்வாங்கி அதனை முறையாக ஆவணக் கோவைகளாக செயற்படுத்தும் ஓர் கருவியே கணினியாகும்.

அந்த வகையில் ENIAC என்ற கணினியே உலகின் முதல் கணினியாகும். 1833ம் ஆண்டு சார்ள்ஸ் பாபேஜ் என்பவராலயே உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே பல்வேறு வகையில் எண்ணிலடங்காத கணினிப் பாவனை அறிமுகமாகியது.

கணினியின் பயன்கள்

கணினியின் பயனானது எம்மால் அளவிட முடியாததொரு வகையில் காணப்படுகிறது. எமது ஓய்வு நேரத்தை சிறந்த பொழுதுபோக்காக மாற்றியமைக்க கணினியானது உதவுகின்றது.

அதாவது பல்வேறு அறிவுசார் விளையாட்டுக்கள் கணினியில் காணப்படுகின்றன. சிறந்த முறையில் தரவுகளை சேகரித்து பின்னர் உரிய நேரத்தில் விரைவாக தரவுகளை பெற்றுக்கொள்ளவும் துணை புரிகின்றது.

நோய்களுக்கான காரணங்கள் மற்றும் நோய்களை கண்டறிய இலகுவாக உதவுகின்றது. கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொழிநுட்பம் சார்ந்த தகவல்களை பெற்றுக்கொண்டு எமது அறிவினை வளர்க்கவும் வித்திடுகின்றது.

மேலும் இணையம் மின்னஞ்சலினூடாக உலகில் எந்த இடத்திலும் வாழும் எம் உறவுகளுடன் சிறந்த தொடர்பினை பேணவும், தொழில் சார்ந்த விடயங்கள், போக்குவரத்து ரீதியான செயற்பாடுகள் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பினை தேடிப் பெற்று கொள்ளவும் கணினியானது துணை புரிகின்றது. இவ்வாறாக கணினியின் பயன்களானவை எண்ணிலடங்காதவையாகவே காணப்படுகின்றன.

கணினிமாயமாக்கப்பட்ட கல்வி முறைமை

இன்றைய கல்வி முறையானது பெருவாரியாக கணினியை அடிப்படையாக கொண்டே வளர்ந்து வருகின்றது. அதாவது இணையத்தினூடாக வீட்டிலிருந்து கொண்டே கணினி மூலமாக கல்வியை மேற்கொள்ளக்கூடியதொரு வகையில் கணினி வழிக் கல்வியானது காணப்படுகிறது.

கல்வி ரீதியான செயற்பாடுகளை இலகுவான முறையில் மேற்கொள்ளவும் கணினி துணை புரிகின்றது.

கணினியினூடாக மொழி ரீதியான கற்றலையும் பெற்றுக்கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திறன்களான கட்டுரை, சிறுகதை எழுதுதல், பாடல், கவிதை என பல்வேறு விடயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் தொலைதூர கற்றலை மேம்படுத்தும் ஓர் முறையாகவே கணினிமாயமாக்கப்பட்ட கல்வி முறைமை வளர்ச்சி கண்டு வருகின்றது.

மருத்துவத்துறையும் கணினியும்

இன்று கணினியின் பயன்கள் அளப்பரியதாக காணப்பட்ட போதிலும் மருத்துவத் துறையில் கணினியின் வளர்ச்சியானது பல்வேறு வகையில் காணப்படுகிறது.

இன்று எம் உடலில் காணப்படுகின்ற பல்வேறு நோய்களை இலகுவாக கண்டறிந்து கொள்ள கணினியானது துணை புரிகின்றது.

ஸ்கேன் மூலம் இதனை சிறந்த முறையில் அறிந்து கொள்ள முடியும் அதே போன்று உடலில் சில நவீன தொழிநுட்பங்களினூடாக நோய்களுக்கான ஆய்வுகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள கணினியே உதவுகின்றது.

முடிவுரை

இன்று மனிதவாழ்வோடு பிரிக்க முடியாத ஒரு விடயமாக மாறிவருவது கணினிப் பாவனையாகும். அந்த வகையில் நாம் கணினியினை நல் விடயங்களுக்காக பயன்படுத்துவது எம் அனைவருக்கும் சிறந்ததாகும்.

மேலும் கணினியானது தொலை தூர கற்றலை மேற்கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பினை வழங்குகின்ற நவீன தொழில் நுட்பமாகும்.

You May Also Like:

கணினி பற்றிய கட்டுரை

இணைய வழி கல்வி கட்டுரை