கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை

kaitholil ondrai katrukol katturai in tamil

நாம் வாழும் உலகமானது பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றங்களை கண்டு வருகின்றதென்றால் அதற்கான காரணங்களில் ஒன்று கைத்தொழில் ஆகும்.

அதாவது கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதற்கிணங்க கைத்தொழில் தெரிந்திருந்தால் எம்மால் சிறந்த பொருளீட்டலை மேற்கொள்ள முடியும்.

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கைத்தொழில்
  • கைத்தொழிலை கற்றுக்கொள்வதன் அவசியம்
  • கைத்தொழிலின் நன்மைகள்
  • இன்றைய சமூகத்தில் கைத்தொழில்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய பொருளாதாரத்தில் கைத்தொழிலானது சிறப்பிடம் பெற்றுக் காணப்படுகிறது.

அதாவது கைத்தொழிலை மேற்கொள்கின்ற ஒரு மனிதனுடைய வாழ்வானது சிறந்த எதிர்காலத்தையே நோக்கி செல்லும் என்பதோடு கைத்தொழிலின் மூலமாக பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சியினை கண்டு கொள்ள முடிவதும் சிறப்பிற்குரியதாகும்.

கைத்தொழில்

கைத்தொழில் என்பது யாதெனில் எமக்கு எளிமையாக கிடைக்கப்பெறக்கூடிய மூலப்பொருட்களை கொண்டும், எமது கைத்திறனை ஆதாரமாக கொண்டும் மேற்கொள்ளப்படுகின்ற தொழிலே கைத்தொழிலாகும்.

இக்கைத்தொழிலினூடாக எம்மால் பல நன்மைகளை அடைந்து கொள்ள முடியும். கைத்தொழில்கள் இன்று பலவாறாக காணப்படுகின்றன.

அதாவது நெசவு, பாய் பின்னுதல், மட்பாண்டம் செய்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், மெழுகுப் பொருட்களை தயாரித்தல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல் என பல்வேறு வகைகளாக கைத்தொழில்கள் காணப்படுகின்றன.

கைத்தொழிலை கற்றுக்கொள்வதன் அவசியம்

இன்று காணப்படுகின்ற வேலையில்லா திண்டாட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த வழியாக கைத்தொழில் காணப்படுகிறது. கைத்தொழிலை மேற்கொள்வதனூடாக வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க முடியும்.

வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்ததொரு வழிமுறையாக கைத்தொழில் காணப்படுகிறது.

அதாவது ஒரு தனிமனிதனுடைய வருமானமானது நாட்டின் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது என்றவகையில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வழிவகுக்கும் மேலும் எதிர்கால வாழ்வை பற்றிய அச்சமில்லாது சிறப்பாக வேலையில் ஈடுபடக்கூடியதொரு தொழிலாகவும் கைத்தொழில் காணப்படுகிறது.

கைத்தொழிலின் நன்மைகள்

கைத்தொழிலினை மேற்கொள்வதினூடாக எம்மால் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வறுமையால் கஸ்டப்படுபவர்களுக்கு சிறந்ததொரு தொழிலாக காணப்படுவதோடு நின்றுவிடாமல் அவர்களுடைய பொருளாதார தரத்தை உயர்த்த வழிவகுத்தல், நாட்டின் அந்நிய செலாவணியை அதிகரித்தல் மற்றும் கைத்தொழிலினூடாக சூழல் மாசடைவதானது தவிர்க்கப்படல் என பல்வேறுபட்ட நன்மைகளைக் கொண்டமைந்ததாகவே இக்கைத்தொழிலானது திகழ்கின்றது.

இன்றைய சமூகத்தில் கைத்தொழில்

இன்றைய சமூகமானது கைத்தொழிலினை அடிப்படையாக கொண்டு வளர்ச்சி கண்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது இன்று பெருவாரியானவர்கள் பல்வேறு கைத்தொழிலினை தனது ஓய்வு நேரங்களில் மட்டுமல்லாது முழு நேரங்களிலும் மேற்கொள்கின்றனர்.

மேலும் பல்வேறு கைவினை மற்றும் அலங்காரப் பொருட்களை மிகவும் வித்தியாசமான முறையில் அமைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர். எனவேதான் கைத் தொழில் முறையானது ஓர் சிறந்த தொழில் முறைக்கான அடித்தளமாகும்.

முடிவுரை

ஒரு நாடானது எதிர்காலத்தில் பொருளாதார ரீதியில் வளர்ச்சியை நோக்கி செல்லுமாயின் அதற்கான பிரதானமானதொரு காரணமாக கைத்தொழிலே காணப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மேலும் கைத்தொழில் கல்வியினை அறிமுகப்படுத்துவதனூடாகவும் சிறந்த முறையில் அனைவரும் இத்தொழில் முறை பற்றி அறிந்து கொள்ள முடியும். எனவே தான் கைத்தொழிலானது ஒவ்வொரு தனிமனிதனது வாழ்விலும் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

You May Also Like:

பண்டைய தமிழ் சமூகம் கட்டுரை

அறிவுக்கு விருந்தாகும் அறிவியல் கட்டுரை