நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

இந்த பதிவில் “நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை” பதிவை காணலாம்.

பின்னாளில் இன்றைய சினிமாத்துறையின் அபார வளர்ச்சிக்கும் இந்த நாடக கலையே அடிப்படையாக இருந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நாடக இலக்கணம்
  3. தோற்றம்
  4. வகைப்பாடுகள்
  5. பங்காற்றியவர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

தமிழ் மொழியின் தனித்துவமான கலை வடிவங்களில் நாடகக்கலை முதன்மையான ஒன்றாக காணப்படுகின்றது.

முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்ற “இயல், இசை, நாடகம்” என்பவற்றில் அடங்கியுள்ள இக்கலையானது பண்டு தொட்டு பல பரிமானங்கள் மூலமாக வளர்ந்து வந்துள்ளது.

தமிழ் மக்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் அப்படியே வெளிப்படுத்துகின்ற அருங்கலையாக இது காணப்படுகின்றது. இக்கலையின் பெருமைகளையும் அதன் காலரீதியான வளர்ச்சி பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

நாடக இலக்கணம்

நாடகம் எனப்படுவது பல கலைகளும் இணைந்த ஒரு கலையாகும். இங்கு நடிப்பு மற்றும் இசை, ஒப்பனை, வசனங்கள், கவிதைகள் மற்றும் பாடல்கள் என பலவகையான இலக்கிய வடிவங்கள் ஒருங்கே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றன.

மிகுந்த உணர்ச்சி பெருக்குடையதாகவும் இரசனையும் இலக்கிய சுவை செறிந்தவையாக இந்த நாடகங்கள் காணப்படுகின்றன.

மனிதனுடைய அடிப்படை உணர்வுகளை வெளிப்படுத்தி காட்டுவதாகவும் காணப்படுகின்ற அரங்க கலையினை நாடகங்கள் எனலாம். இவ்விலக்கணங்களை தழுவி தமிழில் பல நாடகங்கள் தோன்றின.

தோற்றம்

மனிதர்கள் சிந்திக்க துவங்கிய காலத்தில் இருந்தே நாடகங்கள் ஆரம்பித்ததாக சொல்லப்படுகின்றது. உலகளவில் கிரேக்கம் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் நாடக கலைக்கு முன்னோடிகளாக சொல்லப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரையில் தொல்காப்பியம் உருவான காலத்தில் இருந்து நாடக வழக்கு தமிழ் இலக்கியங்களில் பதியப்பட்டு இருக்கின்றது.

இதனை “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனறி வழக்கம்” என்ற பாடலடிகள் விளக்கி நிற்கின்றன.

இதனை தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் நாடகங்கள் காலரீதியாக மக்களது வாழ்வியலோடு இணைந்து சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன.

வகைப்பாடுகள்

நாடகங்களின் வகைப்பாடுகள் பற்றி நோக்குவோமானால் பிரதானமாக எட்டு வகையான நாடகங்கள் தமிழில் அறியப்படுகின்றன. அவையாவன

  1. தமிழ் நாடகங்கள்
  2. புராண நாடகங்கள்
  3. இலக்கிய நாடகங்கள்
  4. துப்பறியும் நாடகங்கள்
  5. வரலாற்று நாடகங்கள்
  6. நகைச்சுவை நாடகங்கள்
  7. மொழிபெயர்ப்பு நாடகங்கள்
  8. தழுவல் நாடகங்கள்

என்ற வகையான நாடகங்கள் காணப்படுகின்றன.

கலையினை சுவாசமாக கொண்ட நேசித்த தமிழர்கள் வாழ்வியலில் நாடக்கலை மென்மேலும் உயிர்பெற்றது என்றே கூறிவிட முடியும்.

பங்காற்றியவர்கள்

தமிழ் நாடகக்கலையினை பொறுத்த வரையில் அதற்கென அரும்பாடுபட்டவர்கள் வரிசையில் தமிழ் நாடகத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் “பம்மல் சம்மந்த முதலியார்” ஆவார். இவர் தொண்ணூறுக்கு மேற்ப்பட்ட நாடகங்களை உருவாக்கினார்.

“பரிதிமார் கலைஞர்” மற்றும் “பேராசிரியர் சுந்தரம்பிள்ளை”, “மறைமலைஅடிகளார்”, “தியாகராஜ பாகவதர்”, “அறிஞர் அண்ணா” என ஒரு நீண்ட வரிசையானது காணப்படுகிறது.

நாடகங்கள் மக்களின் மனதில் நல்ல செய்திகளையும் சமூக கருத்துக்களையும் கொண்டு சேர்க்கும் சிறந்த ஊடகங்களாக காணப்பட்டன.

முடிவுரை

பல அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களால் வளர்க்கப்பட்ட இந்த நாடக கலையானது மக்களின் வாழ்வோடு ஒன்றுபட்டு அவர்களது கலை ஆர்வத்தை தீர்த்ததோடு அவர்களது கவலைகளையும் துன்பங்களையும் மறக்க செய்யும் சிறந்த கலை வடிவமாக வளர்ச்சியடைந்தது.

பின்னாளில் இன்றைய சினிமாத்துறையின் அபார வளர்ச்சிக்கும் இந்த நாடக கலையே அடிப்படையாக இருந்தது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

இன்று இக்கலை அழிந்து வருவது இதனை தமது வாழ்வாதாரமாக கொண்ட கலைஞர்களுக்கு வேதனை அழிக்கும் விடயமாக இருப்பது குறிப்பிடதக்கதாகும்.

You May Also Like:
வியத்தகு விந்தை கணிதம் கட்டுரை
சமுதாய வளர்ச்சி கட்டுரை