கடலானது தன்னுள் பல்வேறு விந்தைகளைத் கொண்டுள்ளது. கடலுக்கு அடியில் பலவகையான தாவரங்கள் மீன்கள் விலங்குகள் பவளப் பாறைகள், எரிமலைகள் எனப்பல எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடப்பதுடன், தாவரங்கள், கப்பல்கள் போன்றனவும் மூழ்கிக் கிடக்கின்றன.
இவ்வாறான கடலில் ஒரு கற்பனையான நீர்மூழ்கிக் கப்பலில் பல நிகழ்வுகள் இடம்பெறுவதனை ஆழ்கடலின் அடியில் என்னும் புதினத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கப்பல் செயற்படும் விதம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
ஆழ்கடலின் அடியில் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பேராசிரியர் பியரி
- நாட்டிலஸ்
- பியரி நெமோ உரையாடல்
- கடலில் காணப்படுபவை
- முடிவுரை
முன்னுரை
“புனை கதையின் தலைமகன்” என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன் ஆவார். இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவராவார். ஆறிவியல் கண்டுபிடிப்புக்கள் பலவும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி தனது புதினங்களில் எழுதியுள்ளார்.
“80 நாட்களில் உலகத்தைச் சுற்றி”, ‘பூமியின் மையத்தை நோக்கிய பயணம்” எனப் பல புதினங்கள் இவரால் படைக்கப்பட்டுள்ளன. மேலும், இவர் எழுதிய “ஆழ்கடலின் அடியில்” என்னும் தமிழ் மொழிபெயர்ப்பு புனை கதை புகழ் பெற்றதாகும்.
பேராசிரியர் பியரி
கடலின் அடியில் உள்ள விலங்குகளை ஆராய்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் பியரி. உலோகத்தாலான உடலைக் கொண்ட விலங்கு ஒன்று கப்பலைத் தாக்குகின்றது என்று அமெரிக்காவிலிருந்து ஒரு போர்க்கப்பல் புறப்பட்டது. அந்தக் கப்பலின் தலைவர் ஃபராகட், வேட்டையாடுவதில் திறமைமிக்க நெட் என்ற வீரர், உதவியாளர் கான்சீல், பியரி ஆகியோர் சென்றனர்.
நாட்டிலஸ்
மூன்று மாதம் கழித்து அந்த விலங்கு அவர்ககள் சென்ற கப்பலைத் தாக்கியதால் எல்லோரும் தூக்கி வீசப்பட்டு மயக்கமுற்றார்கள். பின்பு மயக்கம் தெளிந்த போது அந்த விலங்கு மீது படுத்திருந்தார்கள்.
ஆனால் அது விலங்கில்லை ஒரு நீர்மூழ்கிக் கப்பல். அதன் தலைவர் நெமோ அவர்களைச் சிறைப்பிடித்தார். அக்கப்பலின் பெயர் நாட்டிலஸ்.
பியரி நெமோ உரையாடல்
பியரி நெமோவைக் கேள்வி கேட்கத் தொடங்கினார். இந்தக் கப்பல் எவ்வாறு செல்கின்றது எனப் பியரி கேட்க, மின்சாரம் தயாரிக்கும் கருவிகள் மூலம் என்றார் நெமோ. ஏவ்வாறு மேலும், கீழும் கப்பல் செல்கின்றது என்று கேட்டார் பியரி.
அதற்கு நெமோ இக்கப்பலில் மிகப்பெரிய நீர்த் தொட்டி உள்ளது. நீர் ஏற்றினால் கீழே செல்லும், நீரை இறைத்து விட்டால் மேலே வந்துவிடும் என்றார் நெமோ.
கடலில் காணப்பட்டவை
சுறாமீன் – பியரியும், நெமோவும் கடலுக்கு அடியில் சென்றபோது கடலில் முத்துச் சிப்பி சேகரித்துக் கொண்டிருந்த ஒரு இந்திய மனிதரை ஒரு சுறாமீன் தாக்கியதைக் கண்டனர். நெமோ நீளமான வாளால் சுறா மீனைக் குத்திக் கிழித்து அந்த மனிதரைக் காப்பாற்றினார்.
போர்க்கப்பல் மற்றும் அட்லாண்டிஸ் என்னும் நகரத்தின் இடிபாடுகள், தென்துருவத்தில் பெண்குயின், கடல் சிங்கம், ஆக்டோபஸ் போன்றனவும் காணப்பட்டன.
முடிவுரை
ஒரு நாள் தொலைவில் கடல் தெரிந்தது. அப்போது நாட்டிலஸ் ஒரு பெரும் சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டது. பியரியும், மற்றவர்களும் அந்தக் கப்பலில் உள்ள சிறிய படகின் வழியாக நார்வே கடற்கரையை அடைந்தனர். பின்பு நாட்டிலஸ் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த ஆழ்கடலின் அடியில் என்னும் புதினமானது முடிவடைகின்றது.
You May Also Like: