போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

போதைப்பொருளும் மாணவர்களும்

இந்த பதிவில் “போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை” பதிவை காணலாம்.

போதைப் பாவனை நீடித்தால் மாணவர்களின் கல்வி வாழ்க்கை மட்டுமன்றி எதிர்கால வாழ்க்கையும் சீரழிக்கும்.

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

குறிப்பு சட்டம்

  1. முன்னுரை
  2. மாணவர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாவதற்கான காரணங்கள்
  3. போதைப் பாவனையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்
  4. போதைப் பாவனையை ஒழித்தல்
  5. போதைப் பாவனையால் ஏற்படும் நோய்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

இதனால் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமை உருவாகும். போதைப்பாவனை மூலம் இளவயதில் அதன் தாக்கம், விளைவுகள் பற்றி புரிந்து கொள்ள முடியாமல் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றார்கள்.

இது எமது நாட்டிற்கும், எமது சமூத்திற்கும் மிகப்பெரிய சவாலாகவும் ஒரு சமூகம் மொத்தமாக இழந்து போகக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்தும்.

மாணவர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாவதற்கான காரணங்கள்

சினிமாப் படங்களில் கதாநாயகர்கள் போதைப் பாவனையை மேற்கொள்ளுவது போல் சித்தரிக்கின்ற காட்சிகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று தாமும் அதேபோல் போதைப் பாவனையை எடுத்துக்கொள்கின்றனர்.

மாணவர்கள் இலகுவாக குறைந்த விலையில் கிடைக்கும் ஆபத்தான போதைப் பொருட்களை சிறு வயதில் நட்பு வட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றனர்.

சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. குடி சமூகப் பிரச்சினைக்கு வடிகாலாகின்றது.

போதைப் பாவனையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்

போதைப் பாவனை நீடித்தால் மாணவர்களின் கல்வி வாழ்க்கை மட்டுமன்றி எதிர்கால வாழ்க்கையும் சீரழிக்கும் சக்திவாய்ந்த ஆபத்தாக விளங்குகிறது.

போதைப் பாவனையால் உடல் மட்டுமல்ல மனமும் பாதிக்கிறது. சுய மரியாதை, சுய மதிப்பு உள்ள மனிதனாக வாழாமல் போகின்றான்.

இது பயன்படுத்துபவர்களை மட்டுமல்ல அவர்களைச் சார்ந்த குடும்பத்தையும் பாதிக்கின்றது. இறுதியில் மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றது.

போதைப் பாவனையை ஒழித்தல்

போதைப் பாவனை ஒழித்தலானது இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. போதைப்பொருள் பாவனைச் செயற்பாடுகளை ஒழிக்க அதிக நாடுகள் முயற்சித்தும் அது குறைந்தபாடில்லை.

இவைகளின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போதைப்பொருள் பாவனையைக் குறைக்கும் முகமாகப் பல விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

போதைப் பாவனையால் ஏற்படும் நோய்கள்

புகைத்தல் காரணமாக சுவாசப்பைப் புற்று நோய், சுவாச சுழற்சி, இதய நோய்கள் என்பன ஏற்படுகின்றன. கருச்சிதைவு, மரணித்த மகப்பேறு ஆகியன நிகழ இடமுண்டு. மதுபானம் அருந்துவதால் ‘சிரோசிஸ்’ என்ற நோய் உண்டாகின்றது.

முடிவுரை

நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமுதாயத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவதற்கு சமூகத்திற்கு ஆபத்தானது.

எனவே அவர்களைப் பாதுகாக்க வேண்டும். நமது வாழ்வு இறைவன் நமக்கு அளித்த மாபெரும் கொடை. இதை பாதுகாத்து பல வித நல்ல செயல்களைச் செய்து இறைவனுக்கும் நம்முடன் வாழும் மற்றவர்களுக்கம் பெருமை சேர்ப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

You May Also Like :
போதைப்பொருள் பாவனை கட்டுரை
புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்