அப்துல் கலாம் பற்றி பேச்சு போட்டி கட்டுரை

Abdul Kalam Speech In Tamil

இந்த பதிவில் கனவுகளின் நாயகனாகிய “அப்துல் கலாம் பற்றி பேச்சு போட்டி கட்டுரை” பதிவை பார்க்கலாம்.

அப்துல் கலாம் பற்றி பேச்சு போட்டி கட்டுரை

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்கின்ற திருக்குறளை போல இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்ந்த மனிதர்கள் மக்கள் மனங்களில் என்று நீங்காமல் நிலைத்திருப்பார்கள்.

அந்த வகையில் இந்தியாவின் கனவுகளின் நாயகன் என்று போற்றப்படும் டாக்டர் A.P.J அப்துல்கலாம் அவர்கள் இந்திய மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றார்.

வறுமையான குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய விஞ்ஞானியாக உயர்ந்த இவர் 15 ஆக்டோபர் 1931 திகதி ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக இந்தியாவின் தென்கோடியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.

இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் இவர் பயின்றார். சிறுவயதில் இருந்தே தான் ஒரு விமானியாக வரவேண்டும் என்ற கனவை தனக்குள் சுமந்தார். அதற்காக கடினமான முயற்சியோடு பயணித்தார்.

சிவசுப்ரமணியம் எனும் ஆசிரியரின் வழிகாட்டலில் தனது உயர்கல்வியை முடித்தார். திருச்சிராப்பள்ளி சென் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1955 இல் சென்னை MIT கல்லூரியில் தனது கனவான விண்வெளி பொறியியலை தொடர்ந்தார்.

அதனை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானுர்தி அபிவிருத்தி துறையில் விஞ்ஞானியாக தனது பணியை ஆரம்பித்தார். பின்பு இந்தியாவின் வானியல் ஆராய்சி நிறுவனமான ISRO வில் இணைந்து பணியாற்ற துவங்கினார்.

இதன் மூலம் தனது விண்வெளி ஆராய்ச்சி கனவை நிறைவேற்றினார் SSV-3 துணைக்கோளை விண்ணுக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றினார். இதற்காக மத்திய அரசின் உயர்ந்த விருதான “பத்மபூசன்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விண்வெளியில் இந்தியாவின் தடத்தை ஆழமாக பதிக்க முக்கிய பங்காற்றியவர் என்ற பெருமை உடையவர். 1999 ல் பொக்ரான் அணுஉலை பரிசோதனையினை செய்தார்.

“அக்னி, பிரித்வி, ஆகாஸ்” உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கியமான பங்களிப்பினை இவர் செய்திருக்கிறார். இவற்றுக்காக 1997 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவருக்கு கற்பிப்பதில் அதிக ஆர்வம் இருந்தமையினால் ஒரு சிறந்த ஆசியரியாரக இவர் விளங்கினார். குழந்தைகளுக்கு கற்பிப்பதிலும் அவர்களோடு உரையாடுவதிலும் இவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.

இந்தியாவின் பல பல்கலைகழகங்களில் இவர் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார். இதனை தொடர்ந்து 2002 இல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்று இந்திய நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி இருந்தார்.

மிகவும் பணிவான தனது குணத்தால் உலக தலைவர்களாலும் மதிக்கபடுகின்ற தலைவர் ஆனார். பல கண்டுபிடிப்புக்களை செய்து தனது வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவே அர்ப்பணித்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாத உயர்ந்த மனிதராக இவர் அறியப்படுகின்றார்.

சிறந்த எழுத்தாளராக விளங்கிய இவர் “அக்னி சிறகுகள், இந்தியா 2020, திட்டம் இந்தியா” போன்ற நூல்களையும் எழுதி இருக்கிறார்.

“கஷ்டம் வரும் போது கண்களை மூடி கொள்ளாதே கண்களை திறந்துபார் நீ அதை வென்று விடலாம்” என்று கூறி எமது நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த இவரின் கனவு இந்தியா உலகில் சிறந்த வல்லரசாக வரவேண்டுமென்பதாகும். இவரது கனவை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போமாக.

நன்றி

You May Also Like:

மனிதநேயம் பேச்சு போட்டி