காந்தி அகிம்சை வழியில் போராடிய போராட்ட வடிவங்களில் ஒத்துழையாமை இயக்கமும் முக்கியமான ஒன்றாகும். இதானால் பல முக்கியமான மாற்றங்கள் இந்திய மாநிலதில் ஏற்பட்டது. இவ்வியக்கம் பற்றிய விடயங்கள் பற்றி ஆராய்வோம்.
தோற்றம்
இந்த இயக்கம் 1920-1922 வரையிலான காலகட்டத்தில் செயற்பட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியவர் மகாத்மா காந்தி ஆவார். இந்த இயக்கத்தின் தலைவரும் மகாத்மா காந்தி ஆவார்.
ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கான காரணங்கள்
பஞ்சாப் படுகொலைக்கான நீதி
ஜாலியன் வாலாபாக் படுகொலையே பஞ்சாப் படுகொலை ஆகும். பிரிட்டிஸ்காரர்களின் அடக்குமுறையால் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதற்கான நீதியைக் கேட்கும் பொருட்டு ஒத்துழையாமை இயக்கம் நிறுவப்பட்டது.
கிலாபத் இயக்கத்தின் தீர்வு
கிலாபத் இயக்கமானது தோற்றுவிக்கப்பட்டதன் காரணம் யாதெனில் முஸ்லிம்களின் தலைவரான கலிபாவை பிரிடிஸ் இனத்தவர் அவமதித்ததற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதே கிலாபத் இயக்கம். அதற்கான தீர்வை வலியுறுத்தி ஒத்துழையாமை இயக்கம் தோற்றம் பெற்றது.
சுயராஜ்ஜியம்
இந்தியாவில் சுயராஜ்ஜியம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதை ஒத்துழையாமை இயக்கம் வலியுறுத்தியது.
இவ்வாறான பல காரணங்களினால் அகிம்சை வழியில் இந்தியாவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக காந்தியால் நடைமுறைப்படுத்தப்பட்டதே ஒத்துழையாமை இயக்கமாகும்.
முக்கிய நிகழ்வுகள்
1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கமானது அதிகார பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு இடம்பெற்ற காங்கிரசின் சிறப்பு அமர்வின் மூலம் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாக்பூரில் ஒத்துழையாமை இயக்கத்தின் வருடாந்த சிறப்பு மாநாடு இடம்பெற்றது. இதற்கு c. விஜயராகவாச்சாரியார் என்பவர் தலைமை தாங்கினார். இதன்போது இந்த இயக்கம் அங்கீகரிக்கப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தின் செயல் திட்டங்கள்
கௌரவப் பட்டங்களை விட்டுவிடுவது கௌரவப் பதவியில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்வது.
ஆட்சியாளரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன எந்த கொண்டாட்டங்களிளும் மக்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது.
சர்க்காரால் நடத்தப்படுவதும் சர்க்கார் உதவியால் தனியார்களால் நடாத்தப்படுவதுமான பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் விலகி புதிதாக நிறுவப்படும் தேசிய நிலையங்களில் சேருதல்.
வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்வதை நிறுத்தல்.
ராணுவத்தில் சேராதிருப்பது.
தேர்தலில் எவரும் நிற்காதிருப்பது, காங்கிரஸ் தீர்மாணத்தை புறக்கணித்துவிட்டு நிற்பவர்களுக்கு ஓட்டளிக்காமல் இருப்பது.
வெளிநாட்டுப் பொருட்களைப் பகிஷ்கரிப்பது செய்வதுடன் அதே நேரத்தில் உள்நாட்டுப் பொருள் உற்பத்தியை பெருக்குதல் போன்ற செயற்திட்டங்கள் ஒத்துழையாமை இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவம்
பிற இயக்கத்தைப் போல அல்லாமல் இந்த இயக்கத்தில் மாணவர்கள், பெண்கள், இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டது.
நாளடைவில் இவ்வியக்கமானது முடிவுற்றது. பெண்கள் இளைஞர்கள் மீது இந்த இயக்கம் பெரும் தாக்கம் செலுத்தியது. இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் காரணாமாக அரசாங்கம் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டது. வெற்றிகரமாக செயற்பட்ட இவ்வியக்கம் நாளடைவில் பல காரணங்களால் முடிவுற்றது
ஒத்துழையாமை இயக்கத்தின் முடிவு
1922 ஆம் ஆண்டு சௌரி சௌரா சம்பவம் இடம்பெற்றது. உத்திரப்பிரதேச மாகாணத்தில் கோராப்பூர் என்னும் இடத்தில் 1000 விவசாயிகள் இணைந்து போரில் ஈடுபட்டட வேளையில் பொலிசார் அடக்குமுறையை பயன்படுத்தினர். அதன் போது மக்கள் கோபம் கொண்டு பொலிஸ் நிலையத்தை தீ மூட்டிய சந்தர்ப்பத்தில் 20 பொலிஸார் கொல்லப்பட்டனர்.
இதன்போது காந்தியடிகள் மக்கள் இன்னும் அகிம்சை என்ற பதத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இச்சம்பவம் தனக்கு மிகவும் கசப்பான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால் மனமுடைந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை 1922 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி நிறுத்திவிட்டார்.
இதனை ஜவர்கர்லால் நேரு, சுபாஸ் சந்திரபோஸ் போன்றோர் கண்டித்தனர். மோகன் ராய் காந்தியை மாறி வரும் இந்தியாவில் காந்தி பிற்போக்கு சக்திகளின் மிகத் தீவிரமான வெளிப்பாடு என்று காந்தியை கண்டித்தார்.
இவ்வாறு இருப்பினும் உளியால் அடி வாங்கிய கல் போல சலைத்திடாமல் தம் அகிம்சை வழியில் நின்று இந்தியாவை மீட்டெடுத்தார் காந்தி.
You May Also Like: |
---|
ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு |
வீரத்தியாகி சுகதேவ் வரலாறு |