சகுந்தலை என்ற காவிய கதாபாத்திரம் இன்றுவரை கதாசிரியர்களால் சித்தரிக்கப்படும் உன்னத கதாபாத்திரமாக திகழ்கின்றது. அவ்வகையில் சகுந்தலை என்ற கதாபாத்திரம் அறிமுகமாகிய காவியம் மகாபாரதம் ஆகும்.
மேலும் சகுந்தலை துஷ்யந்தனின் கதை காளிதாசன் இயற்றிய அபிஞால சாதுக்கள் என்ற நூலில் நாடக வடிவில் இயற்றப்பட்டுள்ளது.
பெயர் | சகுந்தலை |
தாய் | மேனகை |
தந்தை | விஸ்வாமித்திரர் |
வளர்ப்பு தந்தை | கன்வ முனிவர் |
வளர்ந்த இடம் | கன்வர் ஆசிரமம் |
சகுந்தலையின் கணவர் | துஷ்யந்தன் |
சகுந்தலையின் மகன் | பரதன் |
சகுந்தலை பிறந்த குலம் | பௌரவர் குலம் |
சகுந்தலை யின் வாழ்க்கை வரலாறு
ஒரு முறை விஸ்வாமித்திரர் தவம் மேற்கொண்டார். அவரின் தவத்தின் சக்தியானது தேவலோகத்தில் உள்ள தேவேந்திரன் உட்பட எல்லோரையும் தவிக்க வைத்தது. இது இந்திரனுக்கு பிடிக்கவில்லை.
இதனால் விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க நடன மாதர்களான ரம்பா, ஊர்வசி, மேனகா போன்றவர்களில் மேனகாவை தெரிவு செய்தார். மேனகை என்பவர் பாற்கடலை கடையும் போது தோன்றியவராவார்.
இந்திரன் மேனகயிடம் நீ எவ்வாறாயினும் விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க வேண்டும் என கட்டளையிட்டார்.
அதனால் விஸ்வாமித்திரரின் தவத்தை கலைக்க மேனகை மிகவும் அழகான குரலில் பாட்டுப் பாடினாள். நடனமாடினார். இவ்வாறு எல்லா வகையிலும் முயற்சி செய்தும் விஸ்வாமித்திரரின் தவம் கலையவில்லை.
அவர் கண் திறந்து கூட பார்க்கவில்லை. பின்பு சில நாட்கள் சென்று கண்ணைத் திறந்து பார்த்தார். அப்போது மேனகையை விஸ்வாமித்திரருக்கு பிடித்து விட்டது. பின் இருவரும் காதல் கொள்ள இருவருக்கும் பிறந்த குழந்தையே சகுந்தலை.
பின் மேனகை மீது இருந்த காதல் மயக்கம் தெளிந்த விஸ்வாமித்திரர் அவரின் தவத்தை கலைக்க இந்திரன் செய்த சதி என்பதை அறிந்த அவர் மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார். பின் தன் கடமை முடிந்தவிட்டதும் மேனகை தேவலோகம் புறப்பட்டாள்.
அவர்களுக்கு கிடைத்த குழந்தையான சகுந்தலையை அவர் காட்டிலேயே விட்டு விட்டு சென்று விடுகிறார். அவ்வழியே வந்த கன்வர் என்னும் ரிஷி சகுந்தலை என்னும் பறவைகள் கூட்டத்தின் நடுவே கிடந்த அக்குழந்தையை கையில் எடுத்து சகுந்தலை என்ற பெயரை சூட்டினார்.
கன்வர் அவரின் ஆசிரமத்தில் வைத்தே சகுந்தலையை வளர்க்கின்றார். அக்குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தாள். சகுந்தலையாளாவனள் சமூகநடத்தை தெரியாமல் ஆசிரமத்திலேயே தன் வாழ்நாளை கழிக்கின்றாள்.
பின் ஒருநாள் காட்டிற்கு வேட்டையாட வந்த துஷ்யந்த மாகாராஜா சகுந்தலையைக் காண்கின்றார். அவர் சகுந்தலையை கண்டவுடன் காதல் கொள்கின்றார். பின் சகுந்தலையிடம் “நீ யார்” என்று மகாராஜா வினவ “நான் கன்வருடைய மகள்” என்று பதில் கூறினாள்.
சகுந்தலை மீது காதல் கொண்ட மகாராஜா “நாம் திருமணம் செய்து கொள்வோமா” என்று கேட்க அதற்கு அவள் “நான் கன்வருடைய அனுமதி பெறாமல் மணமுடியேன்” என்று கூறினாள். ஆனால் துஸ்யந்த மகாராஜா தான் அரச குலத்தைச் சார்ந்தவர் என்பதை மறைத்தார்.
அதனால் சாத்திரங்கள் கூறும்படி காந்தர்வ திருமணம் செய்து கொள்வோம் என்று மன்னர் ஆலோசனை கூற இருவரும் அம்முறைப்படியே திருமணம் செய்து கொண்டனர்.
பின் வாழ்க்கையை மேற்கொண்டு வந்தனர். சகுந்தலா தேவியிடம் தஞ்சம் புகுந்த மகாராஜா தான் ஆட்சி செய்வதை மறந்தார். பின் ஒரு நாள் மன்னனின் நண்பர் ஒருவர் வந்து நாட்டில் முக்கியமான கடமை என்று உள்ளது என்று கூற மன்னன் நாடு நோக்கி புறப்பட்டார்.
புறப்படும் போது அவர்களின் காதல் சின்னமாக தன் கையில் உள்ள மோதிரத்தை கொடுத்ததோடு “நீ பயப்பட வேண்டாம் நான் மீண்டும் வருவேன்” என்று கூறிச் சென்றார். அவ்வாறு நடந்த பின்பே அவர் ராஜா என்பது சகுந்தலைக்கு தெரிய வருகின்றது.
பின் சிலகாலம் சென்றும் ராஜா சகுந்தலையைப் பார்க்க வரவில்லை. அதனால் காதல் பினியில் மூழ்கிய சகுந்தலை ஆழ்ந்த யோசனையில் பித்து பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்.
அவ்வேளையில் அவ்விடம் வந்து துருவாசர் உணவு கேட்க அதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அமர்ந்து இருந்தால் சகுந்தலை. இதனால் கோவம் கொண்ட துருவாசர் “நீ யாரின் நினைவில் மூழ்கி இருக்கின்றாயோ அவர் உன்னை மறந்து விடுவான்” என்று சாபமிட்டார்.
அப்போது அங்கு வந்த சகுந்தலையின் தோழிகள் “அவள் காதல் பிணியில் மூழ்கி இருக்கின்றாள் அதனால்தான் உங்களின் கேள்விக்கு அவள் பதில் அளிக்கவில்லை அவளை மன்னித்து விடுங்கள் அவளுக்கு சாபவிமோசனம் கொடுங்கள்” என்று மன்றாடினார்கள்.
அதற்கு மனமிறங்கிய துருவாசர் “அவனிடம் இருந்து நீ பெற்றுக் கொண்ட பொருளைப் பார்த்தால் அவருக்கு உன்னை நினைவில் வரும்” என்று கூறினார்.
அவ்விடைவெளியில் சகுந்தலைக்கு ஒரு பையன் பிறந்தான். மகாராஜாவின் வருகையை காணாத சகுந்தலை தன் தோழிகளுடன் மன்னனைக் காண இராஜ்ஜியம் புறப்பட்டாள்.
இராஜ்ஜியத்திற்கு செல்லும் வழியில் ஓடை ஒன்றை கடக்க வேண்டியிருந்தது. அதைக்கடக்கும் வேளையில் நீலோட்பல மலரை பறிக்கும் வேளையில் அவளின் கையில் உள்ள மோதிரம் கழன்று நீரில் விழுந்து விடும் அதை பொருட்படுத்தாமல் அவள் அரண்மனையை அடைந்து மன்னனை பார்க்க சென்ற போது அவர்” நீங்கள் யார் என்று தெரியவில்லை” என்று கூறி விடுவார்.
இதனைக் கேட்டு மனமுடைந்த சகுந்தலை ஒன்றும் பேசாதவளாய் மீண்டும் ஆச்சிரமத்தை அடைந்து தன் மகனை மட்டும் வளர்த்து வந்தாள்.
நீண்ட நாளின் பின் மீனவர் ஒருவர் அவ்வோடையில் மீன் பிடித்து அதனை வெட்டும் போது மீனின் வயிற்றில் மோதிரம் ஒன்று இருந்தது.
அதில் அரச சின்னம் இருப்பதை கண்ட அவன் அதை அரசரிடம் கொண்டு வந்து கொடுக்க அவருக்கு அம்மோதிரத்தைப் பார்த்தவுடன் சகுந்தலையின் நினைவுகள் மீண்டும் வந்திடும். பின் உடனே அவர் சகுந்தலையைக்காண ஆசிரமம் புறப்பட்டார்.
செல்லும் வழியில் காட்டில் ஒரு வலிமையும் வீரமும் உடைய ஒரு பையன் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் பற்களை எண்ணிக் கொண்டு இருப்பான்.
அப்போது “நீ யார்” என்று அரசன் வினவ “நான் பரதன் நானும் என் அம்மாவும் இங்கேதான் உள்ளோம்” என்று கூற அதன் பின் அரசன் “நான் சகுந்தலா தேவியைக் காண வந்தேன்” என்று கூற இருவரும் சேர்ந்து சகுந்தலா தேவியிடம் சென்றனர்.
தேவியிடம் வந்த மன்னர் தேவியை மறந்ததால் மன்னிப்புக் கேட்க இல்லை என்னை மறக்கும் சாபம் உங்களுக்கு என்னால் தான் ஏற்பட்டது. என்று கூறி மன்னித்து எல்லோரும் குடும்ப சகிதம் ஒன்றாக வாழ்ந்தனர்.
இவ்வாறு காவியம் போற்றும் அளவுக்கு காதல் கொண்ட சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமே இயற்றப்பட்டுள்ளது. சிறப்பான வாழ்க்கை வரலாறறைக் கொண்டவரே சகுந்தலா தேவி ஆவார்.
You May Also Like : |
---|
விசுவாமித்திரர் வரலாறு |
மார்க்கண்டேயர் வரலாறு |