இந்த பதிவில் “பறவைகள் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.
பறவைகளை பாதுகாக்க வேண்டியது இன்றைய காலத்தின் மிக முக்கியமான கடமையாகும்.
பறவைகள் பாதுகாப்பு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பறவைகளின் தோற்றம்
- இயற்கை சமநிலையும் பறவைகளும்
- அருகிவரும் பறவையினங்கள்
- பாதுகாக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
மனிதர்களின் இறகுகள் உடைய நண்பர்கள் தான் பறவைகள் இந்த இயற்கையின் மிக முக்கியமான பங்காளிகளாக இவை தொழிற்படுகின்றன.
முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுபொரிக்கும் இயல்புடைய இவற்றில் கணிசமானவை வானில் பறக்க கூடியன. இவை இல்லாதுவிட்டால் இந்த பூமியின் இயக்க சமநிலை பாதிக்கப்பட்டு இங்கு உயிரினங்களே அழிந்து விடும்.
இக்கட்டுரையில் பறவைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றினை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம்.
பறவைகளின் தோற்றம்
இந்த உலகில் பறவைகளின் தோற்றம் பற்றி பலவிதமான கோட்பாடுகள் காணப்படுகின்றன. ஊர்வனவற்றில் இருந்து பறவைகள் உருவானதாக ஒரு கோட்பாடு உள்ளது.
முன்பு இவற்றின் கூடுகள் தரையில் தான் காணப்பட்டன. பிற்காலங்களில் இறகுகள் விருத்தி அடைந்த பின் பறக்க துவங்கி உயரமான மரங்களில் தமது கூடுகளை அமைத்து வாழ துவங்கின.
மேலும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி பறவைகள் டைனோசர்கள் உருவான காலத்தில் இருந்தே உருவாகியிருந்தன என கருதுகின்றனர். இவை பல மில்லியன் வருடங்களுக்கு முன்னைய காலப்பகுதி ஆகும்.
இயற்கையின் சமநிலையும் பறவைகளும்
இந்த இயற்கையின் சமநிலையில் பறவைகள் பெரிதும் பங்காற்றுகின்றன. பறவைகள் பொதுவாக பூச்சியினங்களை உணவாக உண்கின்றன.
பறவையினங்கள் இந்த உலகில் இல்லாவிட்டால் பூச்சியினங்கள் ஒரு நாளிலேயே மனித இனத்தை அழித்துவிடும் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவிற்கு இயற்கையின் படைப்பில் பறவைகள் மிக முக்கியமானவை.
எமது உணவு வலையில் உள்ள சில ஆபத்தான உயிரினங்களை பறவைகளே உண்டு கட்டுப்படுத்துகின்றன.
சில பறவைகள் மகரந்த செயற்கையிலும் காடுகளின் உருவாக்கத்துக்கும் பங்களிக்கின்றன.
அருகிவரும் பறவையினங்கள்
இன்றைய மனிதர்களுடைய நவீனத்துவ வாழ்க்கை முறையானது பறவைகளின் அழிவுக்கு காரணமாகியுள்ளது.
மனிதர்கள் அபிவிருத்தி எனும் பெயரினால் காடுகளை அழிப்பதனால் பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதனால் அவற்றுக்கான உணவு கிடைக்காமல் போகின்றது. வாழ்விடங்கள் இல்லாமல் போகின்றது.
அண்மையில் அதிகரித்து வரும் அலைபேசி பாவனைகளால் வெளியாகும் கதிர்வீச்சுக்கள் பறவைகளை அழிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பலவகையான பறவையினங்கள் இன்று அருகி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.
பாதுகாக்கும் வழிமுறைகள்
பறவைகளை பாதுகாக்க வேண்டியது இன்றைய காலத்தின் மிக முக்கியமான கடமையாகும்.
இதனை செய்ய தவறினால் எமது இயற்கையின் சமநிலை மிக மோசமாக பாதிப்படையும் இதன் விளைவுகள் மனித குலத்தை அழிவு பாதையில் இட்டு சென்று விடும் என்பதனால் பறவைகளை பாதுகாக்க அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் அதிகம் முயற்சி எடுத்து வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட வனங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்களை அமைத்து பறவைகளின் வாழ்க்கையினை பாதுகாப்பதோடு நமது இயற்கைக்கு முரணான காரியங்களை செய்யாது தடுப்பதன் வாயிலாக பறவைகளை நாம் பாதுகாத்து கொள்ளலாம்.
முடிவுரை
இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு இயற்கை தொடர்பான அதிக புரிதலையும் பொறுப்புணர்வையும் நாம் உருவாக்க வேண்டும்.
இதன் மூலம் இன்று நடக்கின்ற இயற்கை பேரழிவுகளை தடுத்து பெறுமதியான இயற்கை வளங்களையும் உயிர்ப்பல்வகைமையினையும் நாம் பாதுகாத்து கொள்ளலாம். இது நமது ஒவ்வொருவரதும் தவிர்க்க முடியாத கடமையாக உள்ளது.
You May Also Like : |
---|
நான் ஒரு பறவையானால் கட்டுரை |
உலக சிட்டுக்குருவிகள் தினம் |