ஊக்கமது கைவிடேல் கட்டுரை

ஊக்கமது கைவிடேல்

இந்த பதிவில் “ஊக்கமது கைவிடேல் கட்டுரை” பதிவை காணலாம்.

உண்மையான வெற்றியாளர்கள் தோல்விகளையோ ஏமாற்றங்களையோ பொருட்படுத்தாமல் முயற்சித்து கொண்டே இருப்பார்கள்.

ஊக்கமது கைவிடேல் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • முயற்சி என்னும் மந்திரம்
  • முயன்றால் வெல்லலாம்
  • வெற்றியாளர்கள்
  • அங்கீகாரம்
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலகில் வாழ்ந்து பல சாதனைகளை நிலை நாட்டி தடம் பதித்து நடந்தவர்களுடைய வரலாற்றை தட்டி பார்ப்போமானால் அவர்கள் தமது கடினமான முயற்சியினால் தான் இந்த உயர் நிலைகளை அடைந்திருப்பார்கள் என்பது தெளிவான உண்மையாகும்.

“ஊக்கமது கைவிடேல்” என்ற ஒளவையாரின் ஆத்திசூடி வரிகளுக்கிணங்க இக்கட்டுரையில் ஊக்கத்தின் அவசியம் பற்றி நாம் இங்கே காண்போம்.

முயற்சி எனும் மந்திரம்

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்”

என்கிறார் திருவள்ளுவர். அதாவது இறைவனால் விதிக்கப்பட்ட விதியினை கூட கடுமையான முயற்சி உடையவர்கள் வென்று காட்டுவார்கள் என்பது இதன் பொருளாகும்.

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வெற்றி பெறுவதற்கு விருப்பம் இருக்கும் ஆனால் அதனை அடைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல எவர் ஒருவர் கடினங்களை தாங்கி அர்ப்பணிப்புடன் போராடுகின்றார்களோ அவர்களுக்கே வெற்றி உரித்தாகின்றது.

இது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. கல்வி ஆனாலும் சரி வேலை மற்றும் வாழ்க்கை ஆனாலும் சரி முயற்சியே வெற்றியின் மூல மந்திரமாக திகழ்கின்றது.

முயன்றால் வெல்லலாம்

மனதிலே உறுதியும் உயர்ந்த இலட்சியமும் கொண்டு வாழ்வில் வெற்றி பெற்ற பலரை நாம் உதாரணமாக கூறிவிட முடியும். இவர்களது வாழக்கை எமக்கு வாழ்வில் உண்மையாக உழைத்தால் வெற்றி பெற முடியும் என்ற உண்மையை புலப்படுத்தி செல்கின்றது.

நாம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய எம்மிடம் உண்மை, நம்பிக்கை, நேர்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை போன்ற உயரிய பண்புகள் அடிப்படையாக இருக்க வேண்டும்.

இத்தகைய திறன்கள் எம்மிடம் இருந்தால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பது திண்ணம்.

வெற்றியாளர்கள்

நாம் எமது வாழ்வில் முன்னுதாரணமாக எடுத்து கொள்ள கூடிய மனிதர்கள் பலர் இருக்கின்றார்கள் தமது திறமையாலும் விடாமுயற்சியாலும் அவர்கள் சாதித்து காட்டினார்கள்.

உதாரணமாக உலகுக்கு ஒளியூட்டிய மின்குமிழை கண்டுபிடித்த தோமஸ் அல்வா எடிசன் தனது 999 சோதனை முயற்சிகளில் தோல்வி கண்டார் ஆனாலும் சோர்ந்து விடாது தனது ஆயிரமாவது முயற்சியில் உலகின் தலை சிறந்த கண்டுபிடிப்பான மின்குழிழை கண்டுபிடித்தார்.

இவரது விடாமுயற்சியே இவரை தலைசிறந்த வெற்றியாளராக மாற்றியது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவரை போலவே நாமும் விடாமுயற்சியுடன் உழைத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.

அங்கீகாரம்

இங்கே பலர் வெற்றிக்காக முயற்சி செய்து கொண்டிருந்தாலும் அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை காரணம் எம்மில் கணிசமானவர்கள் விரைவாக பலனை எதிர்பார்க்கின்றோம் விரைவாக வெற்றி கிடைக்காவிடில் நாம் மனம் சோர்ந்து முயற்சியை கைவிட்டு விடுகின்றோம்.

ஆனால் உண்மையான வெற்றியாளர்கள் தோல்விகளையோ ஏமாற்றங்களையோ பொருட்படுத்தாமல் முயற்சித்து கொண்டே இருப்பார்கள் இதனால் தான் அவர்கள் தமக்கான அங்கீகாரத்தை பெற்று கொள்கின்றனர்.

இந்த இயல்பு தான் வெற்றியாளர்களுக்கும் சக மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடாக நாம் சொல்ல முடியும்.

முடிவுரை

இன்று சிறுபராயத்தில் இருக்கும் குழந்தைகள் ஊக்கம் தரும் விடயங்கை கற்று கொள்ள வேண்டும்.

இந்த சமூகத்தில் வாழ கூடிய ஒவ்வொரு பிரஜைகளும் ஊக்கமுடையவர்களாக இருப்பதனால் இந்த சமுதாயம் மற்றும் நாடு என்பன முன்னுதாரணம் நிறைந்தாக மாறும் இந்த மனப்பான்மையானது வாழ்வில் சோர்வு என்பது வராமல் எம்மை முன்னோக்கி ஓட செய்யும்.

எனவே எப்போதும் முயற்சியை கைவிடாமல் முயன்று கொண்டே இருப்போம் என்றோ ஒரு நாள் நம் கனவுகள் நம் வசப்படும்.

You May Also Like:
மருத்துவ துறையின் வளர்ச்சி கட்டுரை
முயற்சி திருவினையாக்கும் கட்டுரை