எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை

ettuthogai noolgal katturai tamil

இலக்கியங்களின் தோற்ற காலம் என போற்றப்படக்கூடிய சங்க காலத்து இலக்கியங்கள் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு என்ற வகைப்பாட்டுக்குள் எடுத்து நோக்கப்படுகின்றன.

இவ்வாறான இலக்கிய நூல்கள் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அகம், புறம் சார் வாழ்க்கையினையும், சமூக வாழ்வினையும் எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • எட்டுத்தொகை நூல்கள் யாவை
  • அகம் சார் நூல்கள்
  • புறம் சார் நூல்கள்
  • அகமும் புறமும் கலந்த நூல்கள்
  • முடிவுரை

முன்னுரை

எட்டுத்தொகை நூல்கள் பொதுவாக எண் பெருந்தொகை நூல்கள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இந்த எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள், புறம்பற்றிய நூல்கள் மற்றும் அகம் புறம் இரண்டும் கலந்த நூல்கள் என நூல்களின் தன்மைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

எட்டுத்தொகை நூல்கள் யாவை

சங்க காலத்தில் எழுந்த எட்டு நூல்களை கொண்ட தொகுப்பே எட்டுத்தொகை நூல்கள் என அழைக்கப்படுகின்றன.

இந்த வகையில் உருத்திரசன்மன் அவர்களது அகநானூறு, நல்லந்துவனார் அவர்களது கலித்தொகை, கூடலூர் கிழார் அவர்களது ஐங்குறுநூறு, பூரிக்கோ அவர்களது குறுந்தொகை மற்றும் நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் போன்ற நூல்களை எட்டுத்தொகை நூல்களாக கொள்ளப்படுகின்றன.

இந்நூல்களில் நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு, பரிபாடல் போன்ற நூல் தொகுப்பு ஆசிரியர்கள் பற்றிய எந்த குறிப்புகளும் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை.

அகம் சார் நூல்கள்

அகம் எனப்படுவது சங்க காலத்தில் தலைவன் தலைவி ஆகியவர்களுக்கு இடையிலேயே மனதில் தோன்றும் உள் உணர்வுகளை அதாவது காதல் பற்றிய செய்திகளை கூறுவனவாகவே உள்ளன.

இந்த வகையில் நான் 400 பாடல்களை கொண்ட அமைந்த நற்றினை, பூரிக்கும் அவர்களால் தொகுக்கப்பட்ட 400 பாடல்களை கொண்ட அமைந்து குறுந்தொகை, திணைக்கு நூறு பாடல்கள் வீதம் 500 பாடல்களை கொண்ட அமைந்து ஐங்குறுநூறு, ஐந்து புலவர்களால் ஐந்து திணைகளை கொண்டு பாடப்பட்ட 150 கலிப்பாக்களை கொண்ட அமைந்து கலித்தொகை மற்றும் 146 புலவர்களால் நானூறு பாடல்கள் பாடப்பட்ட அமைந்த அகநானூறு போன்ற ஐந்து நூல்களும் அகம் சார்ந்த நூல்களாக அறியப்படுகின்றன.

புறம் சார் நூல்கள்

புறம் எனப்படுவது சங்க காலத்து மன்னர்களுடைய போரும் – வெற்றியும், ஈகையும் – புகழும் பற்றிய செய்திகளை வெளிப்படுத்தக்கூடிய பாடல்களாக அமைகின்றன.

இந்த வகையில் 15 பாண்டிய மன்னர்களதும், 18 சோழ மன்னர்களதும், 18 சேர மன்னர்களதும் வீரம், கொடை, அரசியல், பொருளாதாரம் பற்றிய செய்திகளை ஆசிரியப்பா கொண்டு 400 பாடல்களால் உருவாக்கப்பட்ட புறத்திணை மற்றும் 10 சேர அரசர்களை புகழ்ந்து பாடப்பட்ட, பத்து பாடல்களின் தொகுதியாக விளங்கக்கூடிய பதிற்றுப்பத்து ஆகிய இரண்டு நூல்களும் புறம் சார்ந்தவையாக காணப்படுகின்றன.

அகமும் புறமும் கலந்த நூல்கள்

சங்க கால எட்டுத்தொகை நூல்களிலே அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டும் இணைந்து பாடப்பட்ட ஒரு நூலாக பரிபாடல் மாத்திரமே காணப்படுகின்றது.

அதாவது இந்நூலில் காதல் பற்றிய செய்திகளும் மன்னர்கள் அதே வீரம் கொடை பற்றிய செய்திகளும் இருப்பதனை காணலாம்.

பரிபாட்டு எனும் பா வகை கொண்டு பாடப்பட்ட பரிபாடல் தொகுதியில் 70 பாடல்கள் காணப்படிலும் அவற்றுள் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

முருகப்பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும் வைகையில் நீராடுவோரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இங்கு கூறப்பட்டிருப்பதனையும் நாம் காணலாம்.

முடிவுரை

தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டமாகவே சங்க காலம் திகழ்கின்றது. இலக்கிய வளர்ச்சியின் ஆரம்ப காலமாகிய இக்காலத்திய நூல்களுள் எட்டுத்தொகை நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதன் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்கள் பற்றி நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

You May Also Like:

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

நான் விரும்பும் நூல் திருக்குறள் கட்டுரை