சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

sandor valartha tamil katturai in tamil

தமிழ் மொழியானது எமக்கு வெறும் மொழியல்ல. அது எமது உயிருக்கும் மேலாக பார்க்கப்பட வேண்டியதாகும். அந்தவகையில் தாய்க்கு நிகராக போற்றக்கூடியதொரு மொழியாக தமிழ்மொழியே திகழ்கின்றது.

இன்று தமிழ் மொழியானது உலக அளவில் பேசப்பட்டு வரும் ஒரு மொழியாக காணப்படுவது சிறப்பானதாகும்.

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சங்கத்தமிழ்
  • தமிழ் வளர்த்த சான்றோர்
  • வீரமாமுனிவரும் அவரது தமிழ்ப்பற்றும்
  • தமிழின் சிறப்பு
  • முடிவுரை

முன்னுரை

மனிதனானவன் தோன்றிய காலப்பகுதி முதல் இன்று வரை போற்றப்பட்டு வரும் ஒரு மொழியாக தமிழ் மொழியே காணப்படுகின்றது.

அந்தவவகையில் சான்றோர் எமக்களித்த தமிழினை நாமும் வளர்ப்பது எமது கடமையாகும். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கென வாழ்ந்தவர்களே எமது சான்றோர்களாவார்.

சங்கத்தமிழ்

காலத்தால் முந்திய இனத்தை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டதொரு மொழியே தமிழ்மொழியாகும். அந்த வகையில் தமிழினை வளர்ப்பதற்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தையே நாம் சங்ககாலம் எனக் கூறமுடியும்.

இக்காலப்பகுதியே தமிழ் வளர்ச்சியடைய பிரதானமான காலமாக காணப்பட்டதோடு முச்சங்கங்களினூடாக தமிழ் வளர்க்கப்பட்ட காலமாக சங்ககாலமே காணப்படுகிறது. மேலும் கபிலர், பரணர், ஒளவையார் போன்றோர் பல இலக்கியங்களினூடாக தமிழை வளர்த்தனர்.

தமிழ் வளர்த்த சான்றோர்

நாம் இன்று பேசும் தமிழிற்கு காரணமானவர்கள் எமது சான்றோர்களே அந்த வகையில் நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள், நல்வழி, உலக நீதி என பல நீதி நெறிகாட்டும் இலக்கியங்களை படைத்து சான்றோரே தமிழை வளர்த்தனர்.

மேலும் வட இந்திய மொழிகள், தென் இந்திய மொழிகள் என பிரிக்கப்பட்டு காணப்பட்ட சூழலில் திராவிட மொழிகளின் தாயாக தமிழே காணப்பட்டது.

இன்று தமிழானது சான்றோர்கள் பலருடைய தியாகத்தாலும் உழைப்பாலுமே இன்று வரை வளர்ந்து வந்திருக்கின்றது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

வீரமாமுனிவரும் அவரது தமிழ்ப் பற்றும்

வீரமாமுனிவர் என்பவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவராவார். இவரது இயற் பெயர் கான்ஸ்டன் டைன் ஜோசம் பெஸ்கி என்பதாகும்.

ஆனால் இவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை தைரிய நாதர் என சூட்டிக் கொண்டதோடு பின்னர் செந்தமிழில் தனது பெயரை வீரமா முனிவர் என சூடி தமிழ் மீதான பற்றினை வெளிப்படுத்தியவராவார்.

மேலும் இவரது தமிழ் பற்றின் காரணமாக பல தமிழ் நூல்களை ஏனைய மொழிகளில் வெளியிட்டார்.

தமிழின் சிறப்பு

இன்று உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாக தமிழ் மொழி காணப்படுவதானது அதன் சிறப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் தமிழ் மொழியின் எழுத்துக்களானவை எளிமையாக காணப்படுவதால் அதனை சிக்கலின்றி உச்சரிக்க கூடியதாக இருக்கின்றது. காலத்தால் அழியாது இன்றும் பேணப்பட்டு வருகின்ற ஒரு மொழியாக தமிழ் காணப்படுவது அம் மொழியின் சிறப்பாகும்.

இன்று காணப்படும் பல்வேறு இலக்கியங்கள் தமிழ் மொழியில் இயற்றப்பட்டு காணப்படுவதும் தமிழின் சிறப்பினை எடுத்தியம்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்குறள், மணிமேகலை என பல காப்பியங்களும் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளமை சிறப்பினையே சுட்டி நிற்கின்றது.

முடிவுரை

இன்று தமிழினுடைய வளர்ச்சியானது தன்னை வளர்ப்பவர்களால் வளர்ந்து கொண்டே வருகின்றது எனலாம். மேலும் தமிழ் மொழியின் பெருமைகளை உணர்ந்து செயற்படுவதன் மூலமாகவே சிறந்த முறையில் தமிழை வளர்த்துக் கொள்ள முடியும்.

You May Also Like:

தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை