உணவே மருந்து கட்டுரை

unave marunthu essay in tamil

ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதில் பிரதானமான இடத்தினை உணவே பெற்றுக்கொள்கின்றது எனலாம். அந்த வகையில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியானது நோயின்றி வாழ சிறந்த உணவே அவசியம் என்பதனை தெளிவுபடுத்துகிறது.

உணவே மருந்து கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • உணவின் அவசியம்
  • இயற்கை உணவும் உடல் ஆரோக்கியமும்
  • மருந்தே உணவு
  • ஆரோக்கியமான உணவு பழக்கம்
  • முடிவுரை

முன்னுரை

மனிதனின் அடிப்படையான தோவைகளுள் முக்கியமானதொன்றாக உணவே காணப்படுகின்றது. அந்த வகையில் ஒரு மனிதனானவன் தனது வாழ்வை சிறப்புறச் செய்வதற்கு உணவானது அத்தியவசியமானதாக காணப்படுவதோடு இன்று நோய் தீர்க்கும் மருந்தாகவும் உணவே காணப்படுவது சிறப்பானதாகும்.

உணவின் அவசியம்

இந்த உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் உணவானது அவசியமானதாகும் அதாவது உணவு இன்றேல் உயிர்கள் இல்லை என்ற கூற்றிற்கினங்க உயிர்வாழ்வதற்கான ஓர் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக உணவே காணப்படுகின்றது.

ஆரோக்கியமான உணவை உட்கொள்கின்ற போதே ஒரு மனிதனானவன் நோயற்ற வாழ்வை வாழ முடியும்.

இயற்கை உணவும் உடல் ஆரோக்கியமும்

ஓர் உணவானது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டதாக காணப்படுகின்ற போது அது உடல் ஆரோக்கியத்தை தரும் உணவாக காணப்படும்.

அதாவது இயற்கையாக எவ்வித இரசாயணங்களும் இன்றி விளைவிக்கப்பட்ட கிழங்குவகைகள், காய்கறிகள், கீரைவகைகள் போன்றவற்றை உண்ணுவதன் ஊடாகவே ஆரோக்கியமாக வாழ முடியும்.

இன்று இவ்வாறானதொரு நிலை மாறி துரித உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். இதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தினை இழந்து நோய் நிலைக்கு ஆளாகின்றதனை காணக்கூடியதாக உள்ளது.

மருந்தே உணவு

உணவே மருந்து என்ற நிலை மாறி இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு உலகமானது மாறி வருகின்றது. அதாவது ஆரம்பகாலங்களில் நோய்களுக்கு மருந்தாக உணவினையே உட்கொண்டனர்.

இன்று அதிகரித்த துரித உணவின் பாவனை காரணமாக மருந்துகளையே உணவாக உட்கொள்கின்ற நிலை காணப்பட்டு வருகின்றது.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கின்றபோதே சிறந்த வாழ்க்கையை வாழ முடியும்.

ஆனால் இன்று துரித உணவுகளின் காரணமாக நீரிழிவு, மனஅழுத்தம், உடற்பருமன் என பல்வேறு கொடிய நோய்கள் எம்மை ஆட்கொள்கின்றது. இதற்கு பிரதான காரணமே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளமையாகும்.

எனவேதான் சிறந்த ஆரோக்கியமிக்க உணவினை உண்டு நோயில்லாத மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழ சிறந்த உணவை உண்ணல் வேண்டும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம்

நாம் ஒவ்வொருவரும் உணவினை உட்கொள்கின்ற போது உடலிற்கு ஆரோக்கியமாகவும் சிறந்த உணவாகவும் காணப்படுகின்றதா என்பதனை அறிந்தே உண்ணுதல் வேண்டும். ஏனெனில் பல்வேறு நச்சு, இரசாயனங்களினை இட்டே விவசாயத்தினை மேற்கொள்கின்றனர்.

இதன் காரணமாகவே பல நோய்கள் எம்மை ஆட்கொண்டு வருவதோடு ஆயுளானது குறுகி வருகின்றது. அந்த வகையில் நச்சுக்கள் தெளிக்கப்படாத பச்சை காய்கறிகள், பழங்கள், தானியங்களை உண்ணுதல் வேண்டும்.

மேலும் வீட்டுத்தோட்டங்களில் விளைவிக்கப்படும் உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கமாகும்.

உணவினை 3 வேளைகளில் கட்டாயமாக எடுத்துக்கொள்வது அவசியமானதாகும் அத்தோடு இயன்றளவு துரித உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்ககைக்கு வழிவகுக்கும்.

முடிவுரை

இன்றைய உலகில் உணவே மருந்து என்ற நிலை மாறி மருந்தே உணவாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எனவேதான் சிறந்த உணவுகளை உண்டு நோயற்ற வாழ்வை வாழ்வதற்கு அனைவரும் இயற்கை உணவுகளை உண்ண வேண்டும்.

You May Also Like:

மருந்தாகும் உணவுகள் கட்டுரை

இன்றைய உணவுப் பழக்கமும் ஆரோக்கியமும் கட்டுரை