தூய்மை இந்தியா பேச்சு போட்டி

thooimai india speech in tamil

செந்தமிழாம் எம் தமிழ்மொழி அந்த தமிழ்மொழிக்கு என் முதல் வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு இங்கு இந்த சபையில் அமர்ந்துள்ள சபையோர் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

சுத்தம் சுகம் தரும் என்பார்கள் அந்தவகையில் நானும் உங்கள் முன்னிலையில் நம் இந்திய நாட்டின் நிலையையும் அதன் விளைவையும் “தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் இங்கு கூற வந்துள்ளேன்.

தூய்மை என்பது

நாமும் நம்மை சுற்றி உள்ளவற்றையும் சுத்தமாகவும் அழகாகவும் பார்ப்பவர் கண்கள் நெகிழ வைப்பது தூய்மை. திருக்குறளில் தூய்மை என்பது புற அழகு நீரினாலும் அக அழகு வாய்மையாலும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

தூய்மை பற்றி பல பழழொழிகளும் முதுமொழிகளும் உண்டு. அவற்றில் கந்தையானாலும் கசக்கி கட்டு என்பர். அதாவது கந்தை துணியாக இருந்தாலும் அதை துவைத்து தூய்மையாக கட்ட வேண்டும் என்பதே கருத்து.

தூய்மையான இந்தியா திட்டம்

காந்தி அடிகள் ஆங்கிலயரிடம் இருந்து நாட்டை எவ்வாறு காப்பாற்ற போராடினாரோ அதே அளவில் நாட்டின் தூய்மைக்கும் முக்கியம் செலுத்தினார். அதன் அடிப்படையில் இந்திய நாட்டு அரசாங்கம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி “தூய்மை இந்தியா திட்டம்” கொண்டு வரப்பட்டது.

தூய்மை இந்தியா திட்டத்தில் பல குடி மக்களுக்கு சலுகையும், உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும், கல்வி, சுகாதாரம், வாழ்க்கை மேம்பாட்டு திட்டங்கள் என பல அரசாங்கத்தால் ஒவ்வொரு ஆண்டுகளும் பல திட்டங்களை அமுல்படுத்துகின்றது.

2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சில பிரதேசங்களில் திறந்த கழிப்பறைகளை அகற்றி சுகாதாரமும் நவீனமான கழிப்பறைகளை அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்தது. அத்துடன் சுத்தமான குடிநீர் விநியோகங்களையும் கழிவு நீர் சுத்துகரிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கு அமைய தூய்மை இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது.

தூய்மை இந்தியா என்ற கருப்பொருளின் அவசியம்

நாம் வாழும் சமூகமும் நாமும் நோயற்ற வாழ்வுடன் இருப்பதால் நம் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும் பாரியளவு நன்மைகள் கிடைக்கும். இதற்கு இந்திய நாட்டின் தூய்மையை நாம் பேண வேண்டும். அதற்காக இந்திய நாட்டில் நடைமுறையில் தூய்மை இந்தியா திட்டம் செயற்படுகின்றது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். கழிப்பறைகளை உருவாக்குவதன் மூலம் பல தொற்றுநோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

சுத்தமான குடிநீர் என்பது மிக முக்கியமான ஒன்று இன்று பல தொழிற்சாலைகளின் வருகை பல குடி மக்களின் பரப்புக்களையும் குடிநீர் வசதிகளையும் முற்றாக அழித்து விட்டன. இதற்கு அரசாங்கத்தால் சிறந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குடி நீரில் உள்ள நுண்ணுயிர்களால் பல தொற்று பரவுகின்றன.

எனவே தூய்மையாக வைத்திருப்பதாக அரசாங்கம் பல செயற்பாடுகளை செய்து கொண்டுதான் உள்ளது. அதை போன்று நாமும் நம் தரப்பில் இருந்து நம் வீட்டில் இருந்து சுத்தம் செய்வதை ஆரம்பிக்க வேண்டும். கழிவு பொருட்களை பிரித்து சுத்தம் பேண வேண்டும்.

கழிப்பறைகளை வீட்டு திட்டத்திற்கு ஏற்ப அமைத்தல் வேண்டும். சுத்தமான குடிநீர் வசதிகளை பேண வேண்டும். இவ்வாறு சின்ன சின்ன விசயங்களை தூய்மையாக ஆரம்பிப்பதில் இருந்து இந்திய நாட்டு தூய்மையை முழுமையாக பேண முடியும் என நான் நம்புகிறேன்.

நீங்களும் அதன் அடிப்படையில் முழு தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும். இது ஒவ்வொரு குடி மக்கள் சார்பாகவும் செயற்பட வேண்டும் என கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்.

You May Also Like:

தூய்மை பாரதம் கட்டுரை

தூய்மை இந்தியா கட்டுரை