இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

Ida Othukkeedu Katturai

இந்த பதிவில் “இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை” பதிவை காணலாம்.

இந்தியாவில் மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது.

இட ஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. இட ஒதுக்கீடு என்பது
  3. இட ஒதுக்கீடு வரலாறு
  4. காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சமூகநீதியும்
  5. இட ஒதுக்கீட்டின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

அனைவருக்கும் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்படும் சமூக நீதியே நிலையான, ஆரோக்கியமான, நவீன சமூகத்தை நிலைநாட்டும். சமூக நீதியினை அடிப்படையாக கொண்டே தமிழகத்தில் சமூக அரசியலும் வாக்கு அரசியலும் செயல்பட்டுவருகிறது.

சமூக நீதியை காத்திடும் விதமாக கடந்த நூற்றாண்டுகளாக சமூக ஆர்வலர்கள் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம் ஆகும்.

அந்த வகையில் இடஒதுக்கீடும் அவற்றில் ஒன்றாகும். இடஒதுக்கீடு வாயிலாக சமூக நீதி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இட ஒதுக்கீடு என்பது

இட ஒதுக்கீடு என்பது தகுதியுள்ள மக்களுக்கான உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் சலுகைகளை உறுதி செய்கின்ற ஒரு சமூக நடவடிக்கையாகும்.

இது சமூக நீதியின் ஒரு வகைப்பாடு எனக் கூறலாம். மேலும் இடஒதுக்கீடு என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றது.

இடஒதுக்கீடு வரலாறு

இந்தியாவில் மன்னர் ஆட்சிக்குப் பின்னரான ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது செல்வாக்கு உயர்ந்திருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை தாங்கள் மட்டுமே அனுபவித்தனர்.

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி பெறும் உரிமை, தரமான வேலை வாய்ப்புரிமை, நில உரிமை, அரசியல் உரிமை, சமூக பங்கேற்பு உரிமை, அரசியல் அதிகாரம் என எல்லாவற்றிலும் சாதி ஆதிக்கத்தின் தாக்கத்தை காணமுடிந்தது.

அலெக்சாண்டர் கேட்ரூ எனும் ஆங்கில அதிகாரி பிராமணர் அல்லாத ஜாதியினரின் கோரிக்கைகளை வரவேற்றுப் பேசினார். இவரே இட ஒதுக்கீட்டுக்கு அச்சாரமிட்டவராவார்.

இதனைத் தொடர்ந்து பிற்காலத்தில் தந்தை பெரியார் உட்பட பலரும் போராட்டங்களை நடத்தினர். அப்போராட்டங்களின் வெற்றியாக இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனை வழங்கியதுஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசாகும்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டமும் சமூகநீதியும்

இலவச மதிய உணவு வழங்குவது பற்றி அப்பொழுதைய முதல்வர் காமராஜர் ஆலோசித்து தமிழ்நாட்டின் கல்விச் சூழலை விரிவுபடுத்த, மேம்படுத்த மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார்.

மதிய உணவு திட்டமானது சமூக நீதியின் ஒரு பகுதியாகும். இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மதிய உணவுத் திட்டத்தின் வரலாறு, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது.

இட ஒதுக்கீட்டின் பயன்கள்

இட ஒதுக்கீட்டினால் பொருளாதாரப் பின்னடைவுள்ள ஒரு சமூகத்தினர் பயனடைகிறார்கள். படித்த மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்கின்றது.

உதாரணமாக அண்ணா பல்கலையில் பயின்று அதீத வெற்றி அடையும் எண்ணற்ற மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் பயின்றவர்கள்தான். பின்தங்கிய அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது.

தேவையான கல்வித் தகுதி படைத்த பார்வை இல்லாதவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பு வழங்கப்படுகின்றது.

முடிவுரை

இட ஒதுக்கீடானது காலாகாலமாக தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு, நாட்டு மக்களுக்கு சமூக நீதியை வழங்கும் வகையிலான நடவடிக்கையாகும்.

மிக முக்கியமாக, சமூக நலன் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசின் எண்ணங்களும், செயல்களும் உள்ளதை, காணமுடிகின்றமை இட ஒதுக்கீடு வாயிலாகச் சமூக நீதியை உணர்த்துகின்றது.

You May Also Like :
மனிதனை குடிக்கும் மது கட்டுரை
சமூக வலைத்தளங்கள் கட்டுரை