திடக்கழிவு மேலாண்மை கட்டுரை

thida kalivu melanmai katturai in tamil

சுற்றுச் சூழலின் தூய்மை தன்மையை பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த முறையாக திடக்கழிவு மேலாண்மை காணப்படுகின்றது.

அந்த வகையில் சுத்தமே சுகாதாரமான வாழ்விற்கான அடித்தளமாகும் என்பதினூடாக நாமும் எமது சூழலும் சுத்தமாக இருக்கும்போதே ஒரு மனிதனால் தனது வாழ்வை சிறப்பாக வாழ முடியும்.

திடக்கழிவு மேலாண்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • திடக்கழிவு மேலாண்மை என்பது
  • திடக்கழிவு மேலாண்மையின் செயற்பாடுகள்
  • திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள்
  • திடக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

இன்று அதிகரித்த சனத்தொகை பெருக்கத்தின் காரணமாகவும் பல்வேறு தொழிற்சாலைகளின் செயற்பாடுகளின் காரணமாக பல்வேறு வகையில் சுற்றுச் சூழலானது மாசடைந்து கொண்டே வருகின்றது.

இதன் காரணமாக இன்று அதிகரித்த குப்பைகளே நாளா பக்கங்களிலும் காணப்படுகின்றன. இதனை சிறந்த முறையில் அகற்றுவதற்கான ஓர் முறைமையாகவே திடக்கழிவு மேலாண்மை முறைமை காணப்படுகின்றது.

திடக்கழிவு மேலாண்மை என்பது

திடக்கழிவு மேலாண்மை எனப்படுவது யாதெனில் வீடுகள், சுற்றுச் சூழல்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்ட திடக் கழிவுகளை சரியான வகையில் நிர்ணயிக்கும் முறைமையாகும்.

திடக்கழிவுகளுக்கு உதாரணமாக பிளாஸ்டிக், கண்ணாடிகள், ரப்பர், பேப்பர் போன்றவற்றை கூறலாம்.

திடக்கழிவுகளானவை சூழலை மாசுபடுத்துவதில் பிரதானமான பங்கினை வகிக்கின்றது. இன்று பல்வேறு நோய்கள் எம்மை வந்தடைகின்றது என்றால் அதற்கான பிரதானமானதொரு காரணமாக இக்கழிவுகளே காணப்படுகின்றது.

திடக்கழிவு மேலாண்மையின் செயற்பாடுகள்

திடக்கழிவு மேலாண்மையின் செயற்பாடுகளானவை திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல், மீளப் பயன்படுத்தல் போன்றவையாகும். அந்த வகையில் முதலில் திடக்கழிவுகளை ஒன்றாக சேர்க்கின்றனர்.

அதன் பின்னரே சிதைவடைவது மற்றும் சிதைவடையாதது என தனித்தனியாக பிரித்தல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்த பிரித்தல் செயற்பாட்டின் போது பிளாஸ்டிக் மற்றும் உலோகம் போன்றவை மறு சூழற்சிக்கு அனுப்பப்படுகின்றது. பின்னர் இறுதியாக அனைத்து திடக்கழிவுகளும் அரைத்து தூளாக்கப்பட்டு அல்லது சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் மீள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள்

திடக்கழிவு மேலாண்மையினை மேற்கொள்வதினூடாக மக்கள் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர். அதாவது பல்வேறு திடக்கழிவுகளால் ஏற்படும் நோய் நிலைகளிலிருந்து அனைவரும் காக்கப்படுவதோடு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் முடிகின்றது.

அதிகரித்த கழிவுகளால் பாதிப்படையும் சூழலானது இம் முறைமையால் பாதுகாக்கப்படுவது சிறப்பிற்குரியதாகும். மேலும் மறு சூழற்சி செய்வதினூடாக சக்தியானது எரிக்கப்படுகின்றது. இவ்வாறாக திடக்கழிவு மேலாண்மையின் ஊடாக நோயற்ற சிறந்த ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியும்.

திடக்கழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்கள்

திடக்கழிவுகளானவை பல்வேறு பாதிப்புக்களை தன்னகத்தே கொண்டவையாக காணப்படுகின்றன. அந்த வகையில் திடக்கழிவுகளை மண்ணில் இடுகின்ற போது நீர் மற்றும் நிலத்தினை மாசுபடுத்தக்கூடியதாகவே காணப்படுகின்றன.

அதேபோன்று குளோரினை நாம் எரிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் டையாக்சின், ப்யூரான் வாயுவானது மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது.

பேப்பர், உலோகம் போன்ற திடக்கழிவுகளின் காரணமாக பல சுவாச நோய்கள் ஏற்படுவதோடு இரப்பைத் தொற்று நோய்களும் ஏற்படுகின்றன. எனவே இத்தகைய கழிவுகளை அகற்றுவதற்கான சிறந்த ஒரு முறையாக திடக்கழிவு மேலாண்மை அமைந்துள்ளது.

முடிவுரை

எம்மை பல்வேறு கொடிய நோய்களிலிருந்து பாதுகாக்கப்பதற்கான சிறந்ததொரு முறையாகவே திடக்கழிவு மேலாண்மை முறைமையானது காணப்படுகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மையினூடாக சிறந்த முறையில் கழிவுகள் அகற்றப்பட்டு சூழல் தூய்மை பேணப்படுகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:

தூய்மைக்கேடு கட்டுரை

நெகிழி மறுசுழற்சி கட்டுரை