சுதேசி இயக்கம் வரலாறு

sudesi iyakkam

மாகாத்மா காந்தி காங்கிரசின் தலைவரான பின்பு இந்திய போராட்டத்தில் புதியதோர் திருப்பு முனை ஏற்பட்டது. காந்தியடிகள் அந்நியர் ஆட்சியை எதிர்க்கப் பொது மக்களை ஒன்று திரட்டி அவர்கள் ஆதரவோடு பல போராட்டங்களை மேற்கொண்டார்.

தனிநபர் சத்தியாக்கிரகம், உப்பு சத்தியாக்கிரகம், உண்ணா நிலை அறப்போர் என்று அவர் நடாத்திய போராட்டங்களில் ஒன்றே சுதேசி இயக்கம்.

இவ்வகையில் சுதேசி இயக்கம் என்பது சொந்த நாட்டில் தயாராகும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளித்து அந்நிய நாட்டுப் பொருட்களை புறக்கணிக்கும் இயக்கம் ஆகும்.

இது இந்திய விடுதலை போராட்ட வீரர்களால் பிரித்தானிய அரசை எதிர்க்கப் பயன்படுத்தப்பட்ட போராட்ட உத்திகளில் ஒன்றாக விளங்குகியது.

சுதேச இயக்கத்தின் தோற்றம்

வங்கப்பிரிவினைக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டமானது சுதேசி இயக்கமாக வலுப்பெற்றது. இவ்வியக்கம் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இயக்கத்தினை S.N. பானர்ஜி என்பவர் கல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் ஆரம்பித்து வைத்தார். பானர்ஜியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வியக்கம் 1905 ஆம் ஆண்டு இடம்பெற்ற காங்கிரசால் நடாத்தப்பட்ட பனாரஸ் மாநாட்டின் மூலம் முழு ஆதரவைப் பெற்றது.

இம்மாநாட்டிற்கு கோபால கிருஷ்ண கோகலே என்பவர் தலைமை தாங்கினார். இந்த சுதேசி இயக்கத்தில் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

சுதேசி இயக்கத்தின் திட்டங்கள்

வெளிநாட்டு பொருட்கள் புறக்கணித்தல்.

சுதேசிய பொருட்களை ஆதரித்தல்.

சுதேசி இயக்கத்தின் விளைவு

மக்கள் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து தங்களுடைய நாட்டு உற்பத்தியை நாடியமையால் பிரித்தானியரின் பொருளாதார நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இவ்வாறு பொருளாதார நலன் பாதிக்கப்பட்டமையின் காரணமாக இந்தியர்களின் தேவைக்கு இணங்க பிரிட்டிஷார் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சுதேசி இயக்கத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள்

முதன் முறையாக நகரத்தில் உள்ள நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர் அரவிந்தகோஸ் போன்ற தலைவர்கள் நடாத்திய போராட்டங்களில் பெருமளவு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சுதேசி இயக்கத்தின் முக்கிய எண்ணக்கரு வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தல் இதன் விளைவாக இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் பிரித்தானியரால் நடாத்தப்படும் கல்வி நிறுவனங்களை புறக்கணித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் நிலையங்களை சூறையாடினர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் தமது பணியினை துறந்தனர்.

சுதேசி இயக்கத்திற்கு எதிராக ஆங்கில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்

பள்ளிகளிளும் கல்லூரிகளிளும் கல்வி கற்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமலிருக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி வலியுத்தப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களின் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பத்திரிக்கைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டன.

சுதேசி தொண்டர்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர்.

அரச பணியாளர்கள் போரில் ஈடுபட்டமையால் தங்கள் பணியினை இழந்தனர்.

இவ்வாறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்த போதும் இந்தியரின் ஒற்றுமை காரணமாக சுதேசி இயக்கமானது மாபெரும் வெற்றி பெற்றது.

You May Also Like:

ஒத்துழையாமை இயக்கம் வரலாறு

உப்பு சத்தியாகிரகம் வரலாறு