ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

Jhansi Rani History In Tamil

இந்த பதிவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஜான்சி என்ற பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக முழக்கமிட்ட “ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு” பற்றி காணலாம்.

குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு⸴ வீரம்⸴ ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீர மங்கையர்களில் பிரதானமாக வரலாற்றில் இடம் பெறுகின்றார்.

ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு

இயற்பெயர்:மணிகர்ணிகா
பிறப்பு: 19 நவம்பர், 1828
பிறந்த இடம்: வாரணாசி
நாட்டுரிமை: இந்தியா
தந்தை:மௌரியபந்தர்
தாய்:பகீரதிபாய்
பணி: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
இறப்பு: 18 ஜூன், 1858

அறிமுகம்

ஆங்கிலேயர் ஆதிக்கம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஜான்சி என்ற பகுதியில் வீர மங்கை ஜான்சிராணி ஆங்கிலேயருக்கு எதிராக முழக்கமிட்டார்.

குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு⸴ வீரம்⸴ ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீர மங்கையர்களில் பிரதானமாக வரலாற்றில் எழுதப்பட்டவர்தான் ஜான்சியின் லக்ஷ்மி பாய் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் மௌரியபந்தர் மற்றும் பகீரதிபாய் என்ற தம்பதியினருக்கு 1828ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ராணி லக்ஷ்மி பாய் பிறந்தார்.

இவருக்கு மணிகர்ணிகா என்று பெயர் சூட்டி மனு என்று செல்லமாக அழைத்தனர். இவருக்கு நான்கு வயதாகும் போது தாயார் எதிர்பாராமல் இறந்து விட்டார். அதன்பின் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.

படிப்பு⸴ குதிரையேற்றம்⸴ வாள்ப்பயிற்சி போன்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். இக்காலப்பகுதியில் ஆண்மகனுக்கு நிகராக வீரத்துடன் இருந்த பெண்ணாவார். வளரவளர மணிகர்ணிகாவின் எண்ணங்களும் செயல்களும் ஏனைய குழந்தைகளை விடப் பெரிதும் மாறுபட்டிருந்தது.

இதனால் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தந்தையின் உறவினர் மகனான நானா சாஹிப்⸴ தாந்தியாதோப் போன்ற இளைஞர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார். அடிமையாவதை விட போரிட்டு பார்க்கலாம் என்ற இந்த மூவரின் கூட்டணி பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து களமாடிய வீரர்களாக அறியப்பட்டனர்.

திருமணம்

அக்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமான ஐதீகம் சிறுமி லட்சுமிபாய்க்கும் நடந்தது. 14ஆவது வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜான்சியின் ராஜாவான கற்காதரராவ்வை மணமுடித்து அரியணை ஏறினார்.

மிக இளம் வயதிலேயே லக்ஷ்மி பாய் ஜான்சியின் ராணியானார். ராணி வந்ததைக் கண்டு கொண்டாடி மகிழ்ந்த மக்கள் அவரை கடவுளாக பாவித்து அவருக்கு கடவுளின் பெயரைச் சூட்டினர். அன்றிலிருந்து மணிகர்ணிகா எனும் லஷ்மிபாய் ஐhன்சிராணி என அழைக்கப்பட்டார்.

தாயின் மடியில் அமர்ந்து விளையாடும் வயதில் தாய்மை என்ற ஸ்தானத்தை அடைந்தார். ஆனால் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. 4 மாதக் குழந்தையை உடல் நலக்குறைவால் பறிகொடுத்து வாரிசு இல்லாமல் போனதென்று ராஜகுடும்பம் கலங்கியது.

இதன்பின் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்து ஆனந்தராவ் எனும் குழந்தையை தத்தெடுத்து அக்குழந்தைக்கு தாமோதரராவ் எனப் பெயரிட்டு வளர்த்தனர். ஆனால் சொந்த மகனின் இறப்பு தந்தை கங்காதரராவை வாட்டியது. 1853 நவம்பர் 21 ஆம் திகதி அவர் காலமானார்.

படையெடுப்பு

தாமோதராவ் மன்னராக முடிசூட ஜான்சி மக்கள் விரும்பினர். ஆனால் இதனை விரும்பாத ஆங்கிலேயர் தமது தந்திரமான சட்டத்தை வகுத்தனர். வாரிசுகளை தத்தெடுக்கக்கூடாது அப்படி தத்தெடுத்தால் அதற்கு ஆங்கிலேய ஆட்சியில் அனுமதி பெற வேண்டும்.

கொடுக்கப்படவில்லை என்றால் அந்த அரசு ஆங்கிலேயர் வசம் ஆகும் என்று சட்டத்தை இயற்றினார். இதனால் ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட நீதிமன்றத்துக்கு ஜான்சிராணி சென்று வழக்காடினார்.

இந்நிலையில் ஜான்சியை சுற்றியுள்ள பிரதேசங்களை கைப்பற்றியது ஆங்கிலேய அரசு ஒவ்வொரு பிராந்தியங்களின் குறைகளையும் கண்டறிந்து அதன் மூலம் அவர்களைத் தாக்கிக் கைப்பற்ற தொடங்கியது.

இந்நிலையில் ஜான்சியின் அரியணையையும் கைப்பற்ற அங்கிலே அரசு ஜான்சியை நோக்கி படையெடுத்தது. அதனை அறிந்து கொண்டு ஒரு பெண்ணாக தனது மகனை காப்பாற்ற நினைத்த லக்ஷ்மி பாய் அரசியாக தன் மக்கள் அடிமையாகி விடக்கூடாது எனவும் உறுதியாக இருந்தார்.

ஜான்சி அரண்மனைக்குள் படைகள் தயார் நிலையில் இருந்தது ஆங்கிலேய கமென்டர் கூக்ரோஸ் படைகள் ஜான்சி நோக்கி வந்து போர் புரிந்தனர். ஆங்கிலேயர் 1858இல் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தனியாக ஆங்கிலேயரை வீழ்த்த முடியாது என்பதால் அருகிலிருக்கும் அரசுகளுடன் இணைந்து அவர்களை எதிர்ப்போம் என எண்ணி கோட்டையை விட்டு வெளியேறினார் ஜான்சிராணி.

கோட்டையை விட்டு வெளியேறினாலும் ஜான்சி அரசை பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் லக்ஷ்மிபாய். தனது நிலைமையை வலுவாக்கி தொண்டர் படையை உருவாக்கினார். இதில் ஆண்கள் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பும் இடம் பெற்றிருந்தது.

தளபதிகளுடன் இணைந்து நேரடியாக களத்தில் இறங்கி சண்டையிட முடிவு செய்து தனது படைகளுடன் களத்தில் இறங்கினார். ஆங்கிலேயப் படை கொடூரமாகவும்⸴ ஈவிரக்கமின்றித் தாக்கினர்.

ஆனாலும் ஜான்சி ராணி தயக்கமின்றி எது நடந்தாலும் வீரத்தை காட்டுவோம் என கூறி போரிட்டார். இந்நிலையில் ஆங்கிலேயப்படை சுதாரித்துக் கொண்டு கோட்டையைக் கைப்பற்றினர்.

தனது வளர்ப்பு மகன் காப்பாற்றப்பட வேண்டும் என்றும்⸴ தனது உடல் ஆங்கிலேயர் கைகளில் சிக்கக் கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தார் வீரமங்கை ஜான்சிராணி.

இதனால் புல்பாக் இடத்திலிருந்த ஒரு கோவிலில் தஞ்சமடைந்த ராணி தனது மகனை அங்கிருந்து அழைத்துச் செல்ல கட்டளையிட்டார். வீரர்கள் அழைத்துச் சென்ற பின்னர் “என்னை எரித்து விடுங்கள் என் சாம்பல் கூட எதிரிகளுக்கு கிடைக்க கூடாதுˮ எனக்கூறி வீரமரணம் அடைந்தார்.

அந்தநொடி இந்தியாவின் வீர மங்கையான ராணி லஷ்மிபாயின் அத்தியாயம் முடிவுக்கு வந்தது.

லஷ்மிபாய் களத்திலிருந்து போரிட்டதை நேரில் பார்த்த ஆங்கிலேயத் தளபதி “நாங்கள் சண்டையிட்ட போது குதிரையின் கடிவாளத்தை பற்களில் கடித்துக் கொண்டு இரு கைகளாலும் வாளேந்திப் போரிட்டதைப் பார்த்து திகைத்ததாகப்ˮ புகழ்ந்தார்.

மேலும் ராணியின் வீரத்திற்கு மிகப்பெரும் மரியாதையாக ஆங்கிலேயருக்கு எதிரான சுபாஷ்சந்திரபோஸ் அவர்கள் பெண்களைக் கொண்ட படையை உருவாக்கி அதற்கு “ராணி லக்ஷ்மி பாய்” எனப் பெயர் வைத்து பெருமைப்படுத்தினார்.

ஜான்சிராணி வாழ்ந்த அரண்மனை அருங்காட்சியமாக இயங்கி வருகின்றது. அவர் மறைந்த முக்பாக் என்ற பகுதி ராணியின் அடையாளச் சின்னமாக இன்றுவரை ஒளி காட்டி வருகின்றது.

அத்தோடு ஜான்சி ராணியின் பெயரில் கல்வி நிலையங்கள்⸴ மருத்துவமனைகள் என்பனவும் உருவாக்கப்பட்டு இன்றளவும் அவர் நினைவுச் சின்னங்களாக அரசு உருவாக்கியுள்ளது.

இவரது வாழ்க்கை என்பது ஓர் சரித்திரம் என்பது மட்டுமல்லாது வளரும் பெண் சமூகத்திற்கு ஓர் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது என்றால் அதுமிகையாகாது.

You May Also Like:

இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு
தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு