நம் பள்ளி நம் பெருமை கட்டுரை

Nam Palli Nam Perumai Katturai In Tamil

இந்த பதிவில் “நம் பள்ளி நம் பெருமை கட்டுரை” பதிவை காணலாம்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் நாகரீகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிப்பதாகக் கல்வி காணப்படுகின்றது.

நம் பள்ளி நம் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பின்னணி
  3. நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் நன்மைகள்
  4. பள்ளி மேலாண்மை குழு
  5. ஆசிரியர் மாணவர் உறவு
  6. முடிவுரை

முன்னுரை

உலகில் யாராலும் திருட முடியாத சொத்து கல்வியாகும். அத்தகைய கல்வியை நமக்கு அளிப்பதில் பள்ளிகள் முதன்மை வகிக்கின்றன. ஒரு தலைமுறை பெறக்கூடிய கல்வி அறிவானது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் நாகரீகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிப்பதாகக் கல்வி காணப்படுகின்றது.

கல்வியின் முக்கியத்துவத்தினை அரசு அறிந்ததால் தான் கல்விக்காக பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. அதில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டமும் ஒன்றாகும்.

நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் பின்னணி

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக பள்ளி மேலாண்மை குழுவை மறு சீரமைப்பு செய்திட பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

2009-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், இரண்டு ஆண்டுகள் மட்டுமே முழுமையாக செயல்படுத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் சரியான முறையில் செயல்படவில்லை.

எனவே, இந்த திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு “நம் பள்ளி நம் பெருமை” என்று அரசு பள்ளி மேலாண்மைக் குழு ஆலோசனை குழு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் நன்மைகள்

மாணவர்களின் மனநிலை குறித்து பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் இடையே “நம் பள்ளி நம் பெருமை” திட்டம் பாலமாக இருந்து செயல்படுகின்றது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் போது மாணவர்களின் மேம்பாடு, பெற்றோர்களின் கோரிக்கைகள், பள்ளி மேம்பாடு குறித்தும், மாணவர்களின் நலன், படிப்பு மற்றும் தேவைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுகின்றது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

பள்ளி மேலாண்மை குழு

பள்ளி மேலாண்மை குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு.

குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை குழு மாற்றி அமைக்கப்படும்.

ஆசிரியர் மாணவர் உறவு

பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஒரு நல்ல ஆசான் இந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் பிள்ளைகளை வழி நடத்துபவர்கள் ஆசிரியர்களே.

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களே அதிகம் அக்கறை கொள்கின்றனர். ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஆரம்ப கால குருகுல கல்வி தொடக்கம் இக்கால பாடசாலைக் கல்வி வரையிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு புனிதமான உறவாகும்.

முடிவுரை

கல்வியின் முக்கியத்துவம் பற்றி அரசு நன்கு அறிந்திருந்ததால்தான் அரசு பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அரசு பள்ளிகளின் மாநாட்டிற்காக தமிழ்நாடு முழுவதும் 37557 பள்ளிகளிலும் புதிய மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வது நோக்காகக் கொண்டு நம் பள்ளி நம் பெருமை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றமையை சிறப்பிற்குரியதாகும்.

You May Also Like:
பெண் கல்வி கட்டுரை
இளமையில் கல்வி கட்டுரை