செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா கட்டுரை

sevvai kiragathil uyir valvathu sathiyama

இந்த பதிவில் “செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா கட்டுரை” பதிவை காணலாம்.

விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலங்கள் மற்றும் நவீன ரோவர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வது சாத்தியமா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • செவ்வாய் கிரகம் அறிமுகம்
  • ஆய்வுகள்
  • சாத்தியங்கள்
  • அசாத்தியங்கள்
  • முடிவுரை

முன்னுரை

இன்றைய உலக விண்வெளி சார் விஞ்ஞானிகள் மற்றும் வானியலாளர்களுடைய வாயில் இருந்து அதிகம் உச்சரிக்கப்படுகின்ற ஒரு வார்த்தையாக செவ்வாய் கோள் காணப்படுகின்றது.

ஞாயிற்றுதொகுதியில் நான்காவது இடத்தில் அதாவது பூமிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இக்கோளில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தொடர்பான ஆய்வுகளை மனிதர்கள் பல ஆண்டுகளாக நடாத்தி வருகின்றனர்.

இதன் மூலும் வேற்று கிரகங்கள் தொடர்பான ஆய்வுகள் மனிதர்களின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த பரிமாணத்தை எடுத்துக்காட்டுகின்றது. இக்கட்டுரையில் இவை பற்றி நாம் நோக்கலாம்.

செவ்வாய் கிரகம் அறிமுகம்

செவ்வாய் எனப்படுவது சிவப்பு நிற கோள் ஆகும் இதனால் செங்கோள் எனவும் அழைப்பர். மனிதர்கள் நிலவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்த செவ்வாய் கோளை பற்றி அதிகம் ஆராய துவங்கினர்.

ஏனெனில் இந்த கோள் உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படை தன்மைகளான நீர், காற்று போன்ற விடயங்களை கொண்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த கிரகத்தில் நீர் மற்றும் ஒட்சிசன் இருப்பது கண்டறியப்பட்டதனால் இங்கு மனிதர்களோ உயிரினங்களோ வாழ முடியுமா என ஒரு சந்தேகம் நிலவுகின்றது. அவற்றிற்கான ஆய்வுகளை விண்வெளியில் முன்னணி வகிக்கும் நாடுகள் முனைப்போடு நடாத்தி வருகின்றன.

ஆய்வுகள்

விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலங்கள் மற்றும் நவீன ரோவர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு சந்திரனில் உள்ளது போன்ற கிண்ண குழிகளையும் புவியில் உள்ளது போன்ற எரிமலைகளையும், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் போன்ற நில உருவ அமைப்புக்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாயின் தட்பவெட்ப நிலை மற்றும் வளிமண்டலம் தரைத்தோற்றம் பாறைகள் மற்றும் மண்ணின் இயல்புகள் போன்ற பல விடயங்களை உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் ஆராய்ந்து வருகின்றன.

சாத்தியங்கள்

பூமியை அடுத்து காணப்படுகின்ற கோள் ஆகையினால் பூமியினை போலவே அங்கும் வளிமண்டலம் காணப்படுவதும் அதில் ஒட்சிசன் போன்ற பிராணவாயுக்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் சீரான வளிமண்டலம் காணப்படுவதனால் முகில் உருவாகி படிவு வீழ்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்பங்கள் அதிகம் காணப்படுவது இங்கே தாவரங்கள் வளர சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.

ஆதலால் மனிதர்களும் எதிர்காலத்தில் குடியேற முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆய்வாளர்களுடைய மனதில் காணப்படுகின்றது.

அசாத்தியங்கள்

இருப்பினும் இது நமது பூமியில் இருந்து பல விடயங்களில் மாறுபடுகின்றது. இந்த கிரகத்தில் புவியினை போன்ற புவியீர்ப்பு விசையானது இல்லை. இது பலவகையான இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

நாகரீகம் அடைந்த நாம் செவ்வாய் கிரகத்தில் சென்று மிதந்த படி வாழ முடியுமா? அடுத்து பூமியை தவிர பிற கிரகங்களின் வளிமண்டலம் பாதகமான கதிர்வீச்சுக்களை வடிகட்டுவதில்லை இது மனித வாழ்க்கைக்கு பேராபத்தாக முடியும்.

இவ்வாறான பெரும் சவால்களை சமாளித்து செவ்வாயில் வாழ்வது என்பது பெரும் சவாலாக இருக்கும்.

முடிவுரை

இன்றைய காலகட்டம் புவியில் பலவகையான மாறுதல்களையும் பிரச்சனைகளையும் தோற்றுவித்து கொண்டே இருக்கின்றது.

சனத்தொகை பெருக்கத்தின் காரணமாக இயற்கை வளங்கள் மிகவேகமாக அழிவடைந்த வருகின்றன. மற்றும் காலநிலை மாற்றம் பல ஆபத்தான விளைவுகளை மனிதர்களுக்கு தந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சவால்களை சமாளிக்க வேறு ஒரு கிரகத்தை கண்டுபிடிக்க வேண்டிய தேவை மனித குலத்துக்கு ஒரு எதிர்கால சவாலாக விளங்குவதனால் தான் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like :
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்கள் கட்டுரை
அறிவியல் வளர்ச்சி கட்டுரை