குழந்தை திருமணம் கட்டுரை

kulanthai thirumanam katturai in tamil

இந்த பதிவில் “குழந்தை திருமணம் கட்டுரை” பதிவை காணலாம்.

இது உலகின் சில வளர்ச்சியடையாத நாடுகளில் இடம்பெறுகின்ற மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு சட்டவிரோத செயலாகும்.

குழந்தை திருமணம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • குழந்தை திருமணம் பின்னணி
  • குழந்தை திருமணம் காரணங்கள்
  • சமூக சீர்கேடுகள்
  • சட்டநடவடிக்கைகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்தியாவின் பல பகுதிகளில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் ஒரு சமூக சீர்கேட்டு நிகழ்வாக பதிவு செய்யப்பட்டு வருவது குழந்தை திருமணம் ஆகும்.

இது உலகின் சில வளர்ச்சியடையாத நாடுகளில் இடம்பெறுகின்ற மனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு சட்டவிரோத செயலாகும். இதன் மூலமாக ஒரு சமூகமே பல பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இந்தியாவில் இந்த குழந்தை திருமணங்கள் இன்றும் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

குழந்தை திருமணம் பின்னணி

இந்த தவறான வழக்கத்துக்கான பின்னணியாக குறித்த மக்களுடைய வாழ்க்கை முறையும் அவர்களது பண்பாடு கலாச்சாரங்களும் காணப்படுகின்றன.

இந்தியாவில் பின்தங்கிய பகுதிகளில் வாழக்கூடிய சில சமூகத்தினர் பல மாறுபட்ட மூடநம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள், வழக்கங்கள் போன்றவற்றை கொண்டிருக்கின்றனர்.

இவர்களது இந்த முட்டாள்தனமான கடவுள் நம்பிக்கைகள் தான் இவர்களை குழந்தை திருமணங்களை செய்வதற்கு தூண்டுகின்றன.

போதுமான கல்வியறிவு, பகுத்தறிவு இல்லாத இந்த சமூகங்கள் இவ்வாறான செயல்களை ஆற்றுவது ஆச்சரியமானதல்ல.

குழந்தை திருமணம் காரணங்கள்

இவ்வாறான பின்தங்கிய சமூகத்தில் வாழ்பவர்கள் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நன்னடத்தை ஆகிய விடயங்களிலும் பின்தங்கியவர்களாகவே இருப்பார்கள்.

இத்தகைய மக்களுடைய வறுமை மற்றும் சமூகவிரோத கொள்கை போன்றன அவர்களை தவறான வழிகளில் நடாத்தி செல்கின்றது.

தமது குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல்தொழில்களில் அமர்த்துதல், குழந்தை திருமணம், போதைபொருள் பாவனை போன்ற விடயங்களில் அமர்த்தி வர பாரிய வாய்ப்பாக அமைகின்றது.

சமூக சீர்கேடுகள்

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் மிக மோசமாக பாதிப்டையும்.

அவர்கள் தவறான வழிகளில் சென்று தமது வளமான வாழ்வை சீரழிப்தோடு குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை செல்லும் சந்தர்பங்களும் அதிகமாக உள்ளன.

இதனால் அவர்களை சார்ந்ததுள்ள குடும்பம் மற்றும் சமூகம் ஆகியன மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது. இத்தகைய நிலைகளில் தான் இந்தியாவில் பல சமுதாயங்கள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சட்டநடவடிக்கைகள்

குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும் இதனை மீறுபவர்கள் சிறுவர் உரிமை மீறல் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்கு உட்படுவார்கள்.

சட்ட துறையினர் இத்தகைய செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இந்த நடவடிக்கைகளை இன்று தடுத்து வருகின்றனர். இருப்பினும் இன்றும் பல நிகழ்வுகள் அரங்கேறி வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

முடிவுரை

வளர்ந்த சமுதாயம் ஒன்று தமது குழந்தைகளின் கல்வி அவர்களுது கனவுகள் எதிர்காலம் என்பவற்றுக்கான நல்ல வளவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்தில்தான் அதிகம் அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும்.

இத்தகைய முற்போக்கான எண்ணம் தமது குழந்தைகளை தலைசிறந்தவர்களாக மாற்ற உதவியாக அமையும். மாறாக இளவயது திருமணம் போன்ற வன்முறை செயல்கள் நமது சமூகத்தில் இருந்து அடியோடு களையப்பட வேண்டும்.

You May Also Like:
குழந்தைகள் பாதுகாப்பு கட்டுரை
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கட்டுரை