விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா

இந்த பதிவில் “விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை” பதிவை காணலாம்.

இது வரை நிலவி வரும் சில சீர்கேடான நிலை மாறி நேர்மையான தேசமாக இந்தியா உருவாக வேண்டும்.

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • வேற்றுமையில் ஒற்றுமை
  • நேர்மையின் அவசியம்
  • அரசியலில் விழிப்புணர்வு
  • தனிநபர் கடமைகள்
  • முடிவுரை

முன்னுரை

உலக அரங்குகளில் தனது செல்வாக்கை செலுத்தக் கூடிய நாடுகளில் இந்தியாவும் தற்போது ஒன்றாகியுள்ளது. இருப்பினும் நாட்டினுடைய பொருளாதாரம், கல்வி, அரசியல் என்பனவற்றில் தன்னிறைவு பெற்று வல்லரசாக இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை.

நமது நாட்டில் நிலவி வரக்கூடிய சீரற்ற நிலப்பாட்டை மேம்படுத்த விழிப்புடன் செயற்பட வேண்டிய தேவை எமக்கு உள்ளது. வளமான இந்தியாவை உருவாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நம் தேசத்தில் மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், ஜாதியின் பெயரினாலும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டு அச்சூழ்ச்சியினால் உண்டாகக் கூடிய கலவரங்கள் மற்றும் பிரிவினைகளை கொண்டு குளிர்காயக்கூடிய தேசத் துரோகிகளை நாம் புறந்தள்ள வேண்டும்.

மாநிலங்களாக நாம் பிரிந்திருந்தாலும் இந்தியர் என்ற வகையில் ஒன்றுபட்டு வளமான இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும்.

நேர்மையின் அவசியம்

பொது வாழ்வில் நேர்மை மிக அவசியம். அரசு துறைகளில் பணியாற்றும் கீழ் நிலை ஊழியர்களிடமிருந்து அமைச்சர்கள் வரை நேர்மை மிக முக்கியம். நேர்மையில் மட்டும் சமரசமே இருக்க கூடாது.

இல்லாவிடில் ஊழல் எங்கும் பரவி விடுவது மட்டுமன்றி சமூகத்தில் தவிர்க்க முடியாத கேடாகவும் மாறிவிடும்.

பொது சொத்துக்கள் மற்றும் தமது பதவியை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் பிரதிநிதிகள் பேசும் வார்த்தைக்கும் செயலுக்கும் இடையில் கடுகளவு இடைவெளி கூட இருத்தல் ஆகாது.

அரசியலில் விழிப்புணர்வு

“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லாதவர்” ஊழலும் கையூட்டும் நாட்டை எவ்வாறு சீரழிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அரசியல் ரீதியில் நமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது ஊழல் கையூட்டுக்களில் ஈடுபடதாவர்களை தெரிவு செய்ய வேண்டும்.

அதே போல் இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத எந்தவொரு கட்சியையும் நாம் ஆதரிக்க கூடாது. தேர்தல் சமயத்தில் சிறந்த கட்சியை விழிப்புணர்வோடு அரசியலில் தேர்வு செய்ய வேண்டும்.

தனிநபர் கடமைகள்

நாட்டின் பிரஜைகள் ஆகிய அனைவரும் சட்ட ஒழுங்குகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பொது சொத்துக்களை முறையாக பயன்படுத்தி பேண வேண்டும். சுயநலம் துறந்து பொதுநலம் உடையவர்களாய் வாழ முற்பட வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும் நாட்டில் நிலவி வரும் முறை கேடான பகுதிகளில் நாம் அனைவரும் சமம் என்பதை மனதில் நிறுத்தி விழிப்புணர்வோடு செழிப்பான ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நாம் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

“விழிப்போடு வலம் வருவோம்!
செழிப்போடு தலை நிமிர்வோம்!”

இது வரை நிலவி வரும் சில சீர்கேடான நிலை மாறி நேர்மையான தேசமாக இந்தியா உருவாக வேண்டும். இளைய தலைமுறையினரின் மனத்தில் எதிர்கால இந்தியா பற்றிய கனவுகள் நிறைந்து இருக்கின்றன.

அவை மங்கி மறைவதற்குள் அவர்களிடையே புதிய நம்பிக்கையை மலரச் செய்து வளமான, வலிமையான, வளர்ச்சி மிகுந்த இந்தியாவை உருவாக்க விழிப்புடனும் துடிப்புடனும் செயற்படுவோம்.

You May Also Like :
என் கனவு இந்தியா கட்டுரை
இந்தியாவின் வளர்ச்சி கட்டுரை