மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

madurai meenakshi amman kovil history in tamil

இந்த பதிவில் “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

அறிமுகம்

தமிழகம்⸴ தமிழ்நாடு என்கின்ற போது நம் மனதில் முதலில் நினைவிற்கு வருவது தமிழ்நாட்டின் சிறப்புமிக்க புராண கோவில்களும் அதைத் தாங்கி இருக்கும் புண்ணிய ஸ்தலங்களுமே ஆகும்.

தமிழ்நாட்டின் பெரும் புராண சிறப்பையும்⸴ புகழையும் தன்னகத்தே கொண்ட பெருமைக்குரிய நகரம் மதுரை ஆகும். அந்த மதுரையில் அமைந்திருக்கும் கோவில் தான் மீனாட்சி அம்மன் கோவில்.

இக்கோவிலானது தமிழகத்திலுள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் மூல கோவிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூஜை அம்பிகை மீனாட்சிக்கு செய்யப்படுகின்றது.

தலவரலாறு

குலசேகரன் பாண்டிய மன்னன் முதன்முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும் பின் மதுரை நகரத்தையும் நிர்மானித்ததாக கூறப்படுகின்றது.

இவ்வாறு ஒரு வரலாறு சொல்லப்பட சிலர் கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாகும் படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றி கூறியதாகவும் அதனால் கடம்பவனக் காட்டை அழித்து குசேல பாண்டியன் மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான்.

சிவபெருமான் தன் சடையில் உள்ள சந்திரனின் அமுதத்தை சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் எனவும் கூறப்படுகின்றது.

14ஆம் நூற்றாண்டின் படையெடுப்பின் போது இடித்து தரைமட்டமாக்கபட்டதாகவும் கூறப்படுகின்றது.

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணதேவராயன் அனுப்பி வைத்ததாக கூறப்படும் விஸ்வநாத நாயக்கர் மன்னரால் இதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

மீனாட்சி அம்மன் கோவில் கலை அழகு மிக்க மண்டபங்கள்

மீனாட்சி அம்மன் கோவிலில் கலை அழகு மிகுந்த பல மண்டபங்கள் உண்டு. அவையாவன

  • அஷ்டசக்தி மண்டபம்
  • மீனாட்சி நாயக்கர் மண்டபம்
  • முதலி மண்டபம்
  • ஊஞ்சல் மண்டபம்
  • கம்பத்தடி மண்டபம்
  • கிளிக் கூட்டு மண்டபம்
  • மங்கையர்க்கரசி மண்டபம்
  • சேர்வைக்காரர் மண்டபம்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • திருக்கல்யாண மண்டபம்
  • வீரவசந்தராயர் மண்டபம்

போன்றவற்றை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இதன் ஒவ்வொரு மண்டபத்திற்கும் வேறுபாட்டுடனும் மற்றும் அழகிய நுணுக்கங்களைக் கொண்டும் தனித்தனி சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்பத்தடி மண்டபச் சிற்பங்களில் சிவனின் வேறுபட்ட வடிவங்கள் உள்ளன.

இது நாயக்க மன்னரான முதலாம் கிருஷ்ணப்ப காலத்தில் கிபி 1564 தொடக்கம் 1572 வரையான காலகட்ட பகுதிகளில் கட்டப்பட்டு பின் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் புதுப்பிக்கபட்டதாகும்.

ஆயிரங்கால் மண்டபமானது கோவிலின் சுவாமி சன்னதியும் இடப்புறத்தில் அமையப் பெற்றுள்ளது. இதுவே கோவிலில் உள்ள மண்டபங்களில் மிகப் பெரிதாகும்.

மண்டப வாயிலின் மேல் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பங்கள் நிறைந்து உள்ள 985 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் ஒரே கோணத்தில் அமையப் பெற்றிருப்பது வியப்பான காட்சியாகும். ஆயிரங்கால் மண்டபத்தில் இன்னிசை எழுப்பும் 22 தூண்கள் அமைந்துள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்திற்கு பின்புறத்தில் அமைந்துள்ள வீரவசந்தராய மண்டபமானது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இது 7000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது.

சிறப்பு விழாக்கள்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில், சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்தக் கோயிலில், தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

தை மாதம் தெப்பத் திருநாள் நடைபெறும்⸴ மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மண்டல உற்சவம் நடைபெறும்⸴ பங்குனி உத்திரம் சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்துவரும் திருவிழா ஆகும்.

தமிழ் நாட்டின் பல இடங்களிலும் சித்திராப் பௌர்ணமி கொண்டாடப்பட்டு வந்தபோதிலும் மதுரையில் தான் சித்திராப் பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா திருவாதிரை நட்சத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணைக்காப்பு நடைபெறும்.

ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஊஞ்சல் உட்சவம் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு இடம்பெறுகின்றது. ஆடி மாதத்தில் முளைக்கட்டு உற்சவம் நடைபெறும்.

ஆவணி மாதத்தில் மூல உற்சவம் நடைபெறும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு இடம்பெறும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் தீப உற்சவம் நடைபெறும்.

இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். ஆய்வாளர்கள் இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் கூறுகின்றார்கள்.

தற்போது உள்ள மீனாட்சி அம்மன் கோயில் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அம்மனின் பெயர் திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார் என்றே வழங்கப்பட்டது என்றும் அந்தக் கோயிலில் இருந்த பாண்டிய மன்னர் காலக் கல்வெட்டுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது.

கிழக்குக் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் சில கல்வெட்டுகள் கிடைத்தன. அவை மாறவர்மன் குலசேகரனுடைய காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கல்வெட்டுகளின்படி கோயில் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்குள்ளாகவே, அதாவது 1250ஆம் ஆண்டுவாக்கில் மிகப் பெரிய சேதத்தைச் சந்தித்திருக்கிறது.

கர்ப்பகிரகம், ஏழு நிலை கோபுரம், ஆடவல்லான் சன்னிதி போன்றவை அழிந்து, மீண்டும் கட்டப்பட்டுள்ளன என்ற செய்தி கல்வெட்டில் கிடைத்திருக்கிறது.

தற்போது கோயிலின் பிரதான தெய்வங்கள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகினர்.

ஆனால், கோயிலில் கிடைத்த 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றின்படி, ஆரம்ப காலத்தில் இந்தக் கோயிலில் உறையும் தெய்வத்தின் பெயர் ‘திரு ஆலவாய் உடைய நாயனார்’ என்பதுதான். அம்மனின் பெயர் ‘திருக்காமக்கோட்டம் உடைய ஆளுடைய நாச்சியார்’.

தேவாரத்தில் இந்தக் கோயிலில் உள்ள கடவுளின் பெயர் ‘அங்கயற்கண்ணி உடனுறையும் ஆலவாய் அண்ணல்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

“தமிழ்நாட்டில் பொதுவாக எல்லா பெண் தெய்வக் கோயில்களுக்கு காமக்கோட்டமுடைய நாச்சியார் என்பதுதான் பெயர். அந்தப் பெயரே இங்கேயும் வழங்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.

You May Also Like:
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வரலாறு
திருவண்ணாமலை கோவில் வரலாறு