மழைநீர் சேகரிப்பு கட்டுரை தமிழ்

Malai Neer Segaripu Katturai In Tamil

“நீரின்றி அமையாது உலகு” என்பது அனைவரும் அறிந்ததே பூமிக்கு நீரானது பலவழிகளில் கிடைக்கின்றது அதில் மழை மூலம் கிடைக்கும் நீரானது பிரதான மூலமாக இருக்கின்றது.

இவ்வாறு மழை மூலம் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்.

மழைநீர் சேகரிப்பு கட்டுரை தமிழ்

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. மழைநீரின் முக்கியத்துவம்
  3. மழைநீர் சேமிப்பின் அவசியம்
  4. மழைநீரைச் சேமிக்கும் வழிமுறைகள்
  5. மழைநீர் சேமிப்பின் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

“நீரின்றி அமையாது உலகுˮ என்று வள்ளுவர் கூறியது போல் இந்த உலகம் நீரின்றி இயங்காது என்றே கூற வேண்டும். அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீரானது பூமிக்கு பல வழிகளிலும் கிடைக்கப்பெறுகின்றன.

எனினும் அதிகளவான நீரானது பூமிக்குள் மழைநீரின் மூலமே கிடைக்கின்றது. மழைநீர் சேமிப்பு மட்டுமே தண்ணீர் சேமிப்பில் சிறந்ததாகும். தாவரங்கள்⸴ விலங்குகள்⸴ பறவைகளின் தாகம் தணிப்பதற்கும் நீரானது இன்றியமையாதது.

மழைநீரை சேமித்து அதனை சிக்கனமாக பயன்படுத்துவது நமது முக்கிய கடமையாகும். இக்கட்டுரையில் மழைநீர் சேமிப்பு பற்றி காண்போம்.

மழைநீரின் முக்கியத்துவம்

மழைநீர் இன்றியமையாமையாததாகும். மனிதன் உயிர் வாழ்வதற்கு நீரானது முக்கியமாக விளங்குகின்றது. நீரானது ஆவியாகிப் பின்னர் மழை நீராக பூமியில் பொழிகிறது.

மழைநீரினால் மனிதன் உட்பட தாவரங்கள்⸴ விலங்குகள்⸴ பறவைகள் என அனைத்தும் பயன் பெறுகின்றன. மழைநீரை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே விவசாயத்திற்கும் மழைநீர் அவசியமாகின்றது.

ஒரு வருடத்தில் கிடைக்கப்பெறும் மழைநீரினை அடிப்படையாகக் கொண்டே இரண்டு அல்லது மூன்று போக விவசாயம் செய்யப்படுகின்றது. எனவே இவ்வுலக மக்களின் பஞ்சத்தை போக்குவதற்கு மழைநீரின் பங்கு முக்கியமானதாகும்.

காட்டு மரங்கள் செழிப்பாக வளர்வதற்கும்⸴ உயிர்ப்புடன் இருப்பதற்கும் மழைநீர் முக்கியமானதாகும்.

மழைநீர் சேமிப்பின் அவசியம்

பூமியில் உள்ள நீரானது பல வழிகளிலும் கிடைக்கப் பெறுகின்ற போதிலும் அவை மாசடைதல் காரணமாகவும் வேறு பல காரணங்களாலும் பற்றாக்குறைக்கு உட்படுகின்றது.

நிலத்தடி நீரினை ஆழ்துளை கிணறுகள் அமைத்து பெற்றுக்கொள்கின்றனர். இதனால் நிலத்தடி நீரானது குறைவடைகின்றது.

தற்போதுள்ள நவீன மயமாக்கல் காரணமாகவும் நீர் மாசடைகின்றது. இத்தகைய நிலைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் மழைநீர் சேமிப்பு அவசியமாகும்.

மழைநீரைச் சேமிக்கும் வழிமுறைகள்

அநாவசியமாகக் கடலோடு கலக்கவிடாமல் மழைநீரை சேகரித்து பயன்படுத்திக் கொள்வதற்கு பல வழிமுறைகள் காணப்படுகின்றன. நமது முன்னோர்கள் பயன்படுத்தி பயன்பெற்று வந்துள்ளனர்.

ஆனால் இப்போது நம்மிடம் அந்தப் பழக்கவழக்கங்கள் மிக அரிதாகிவிட்டது. குறிப்பாக முன்னோர்கள் மழைநீரைச் சேகரித்து வைப்பதற்காக பல குளங்களை அமைத்து மழைநீரை சேமித்தனர்.

கால்வாய்களை அமைத்து வயல்களுக்கு நீர் பாய்ச்சினார்கள். இவ்வாறான நடைமுறை தற்போதும் காணப்படுகின்றது.

நவீன முறையில் மழைநீரைச் சேமிப்பதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக தொட்டிகள் அமைத்து மழைநீர் சேகரிக்கப்படுகிறது.

கூரைகளிலிருந்து விழும் மழைநீரை நிலத்தடியில் தொட்டி அமைத்து சேகரிப்பு முறை இடம்பெறுகின்றது.

ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் குளங்களை தூர்வாரியும் மழைநீர் சேகரிக்கப்படுகின்றது.

மழைநீர் சேமிப்பின் நன்மைகள்

மழைநீரைச் சேமிப்பது மூலமாக பல நன்மைகள் கிடைக்கின்றது. மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்தி அதன்மூலமாக அதிகப்படியான மழைநீரைச் சேமித்து பயன் பெறவேண்டும்.

மழைநீர் ஒரு சாதாரண குடிமகன் செலவு செய்யாமல் பெற்றுக்கொள்ளும் இயற்கை நீராகும். நிலத்தடி நீர்மட்டம் குறைவடையும் பிரச்சினை மழைநீர் சேகரிப்பின் மூலம் நிவர்த்தி செய்யப்படுகின்றது.

மேலும் குடிநீர் கட்டணங்கள் வெகுவாக குறையும், அதிகப்படியான வெள்ளம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது, வேதிப் பொருட்கள் நிறைந்த அசுத்தமான நீருக்கு பதிலாக நன்னீர் கிடைக்கும், வேளாண் நிலங்கள் புத்துணர்வு பெறும்.

முடிவுரை

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்த அரசு பல சட்டங்களையும் விழுமியங்களையும் வலியுறுத்துகின்றது. மழைநீரின் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காகவே ஆரம்பக் கல்வியிலேயே மழைநீர் சேமிப்பு பற்றி கற்பிக்கப்படுகின்றது.

எனவே மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படும் போதுதான் எதிர்காலத்தில் நீர்ப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

You May Also Like:

வனவிலங்கு பாதுகாப்பு

ஓசோன் படலம்