ஆறுகளின் பயன்கள் கட்டுரை

aaru katturai in tamil

இந்த பதிவில் “ஆறுகளின் பயன்கள் கட்டுரை” பதிவை காணலாம்.

உயரமான இடத்தில் இருந்து கொட்டும் அருவி நீரானது ஆர்ப்பரித்து ஓடிவருவதே ஆறு எனப்படுகிறது.

ஆறுகளின் பயன்கள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஆறுகளில் என்பவை
  3. ஆறுகளும் நாகரிகங்களும்
  4. ஆறுகளின் நன்மைகள்
  5. ஆறுகள் மாசடைதல்
  6. முடிவுரை

முன்னுரை

இயற்கை நமக்கு அளித்துள்ள அற்புதமான படைப்புகளில் ஆறுகளும் தமக்கென ஓர் அழகிய இடத்தைக் கொண்டுள்ளன. மக்களின் வாழ்விற்கும், வசதிக்கும் நீராதாரம் மிக அத்தியாவசியமாகும்.

எனவேதான் உலகின் பல்வேறு முக்கியமான நகரங்கள், ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளன.

ஆறுகளின் நீள, அகலம் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பயன்பாடு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறது. ஆறுகளின் பயன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ஆறுகளில் என்பவை

உயரமான இடத்தில் இருந்து கொட்டும் அருவி நீரானது ஆர்ப்பரித்து ஓடிவருவதே ஆறு எனப்படுகிறது. பல சிறிய ஆறுகள் சேர்ந்து பெரிய நதியை உருவாக்குவது உண்டு. சில இடங்களில் பெரிய நதிகள் பிரிந்து கிளை ஆறுகளை உருவாக்குவதும் உண்டு.

ஆற்றின் நீர் அளவைக் கொண்டு வற்றும் ஆறுகள், வற்றாத ஆறுகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

எல்லா ஆறுகளிலும் மழைக் காலத்திலும், வசந்த காலத்திலும் அதிகமான நீரோட்டம் இருக்கும். ஆனால் சில ஆறுகள் கோடை காலங்களில் வற்றிவிடும்.

ஆறுகளும் நாகரிகங்களும்

ஆரம்பகால நகரங்கள் ஆற்றங்கரை நாகரிகமாக விளங்கின. உலகின் பெரும்பான்மையான நாகரீகம் நதிக்கரையில் தோன்றியதாக வரலாற்று அறிஞர் கூறுவர்.

உலகின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகம் இந்துஸ் (சிந்து) ஆற்றங்கரையில் தோன்றியதாகும். நைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும்.

மெசொப்பொத்தாமியா நாகரிகமானது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியை குறிக்கின்றது.

ஆறுகளின் நன்மைகள்

ஆறுகள் மக்களின் வாழ்வாதாரத்தை வளம்பெறச் செய்கின்றன. உதாரணமாக இந்தியாவில் கங்கை தொடங்கி தாமிரபரணி வரை பல்வேறு நதிகளைக் குறிப்பிடலாம்.

வழிபாட்டு கோவில்களாக உள்ளன கங்கை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, பிரம்மபுத்திரா, மஹாநதி, கிருஷ்ணா, காவிரி ஆறுகளின் கரைகளில் லட்சக்கணக்கான கோயில்கள் அமைந்துள்ளன.

  • மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில், ஆறுகளின் பங்கு மிக அதிகம்.
  • ஆறுகள் விவசாயத்திற்கு பயன்படுகின்றன.
  • வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கும்.
  • நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் ஆறுகள் உள்ளன.
  • ஆறுகள் குளிக்கவும், மீன்பிடித்தல், போக்குவரத்து போன்றவற்றிற்கும் பயன்படுகின்றன.
  • நீண்டகாலமாக ஓடி வரும் ஆறுகள், வளமான சமவெளிகளையும், செழிப்பான மணல்பரப்பையும் உருவாக்குகிறது.

ஆறுகள் மாசடைதல்

ஆறுகள் மாசடைதலானது மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். இதனால் ஆறுகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை சந்திக்கின்றன.

மனிதனின் இன்றியமையாத கழிவுகள் மற்றும், தொழிற்சாலை இருந்து வரும் கழிவுகள் அதிக அளவில் ஆற்றுடன் கலக்கப்படுகின்றன. இதனால் ஆற்று நீர் மாசடைகின்றது.

முடிவுரை

ஆறுகள் மனித வாழ்வில் பிரிக்க முடியாத அங்கங்கள் ஆகியுள்ளன. மனிதனுக்குப் பல பயன்களை பெற்றுத் தருகின்றன. ஆற்றை நம்பி மனிதர்கள் மட்டுமல்லாமல், எண்ணற்ற உயிரினங்களும் வாழ்கின்றன.

மக்கள் ஆறுகளைப் புனிதமாகக் கருதுகிறார்கள். ஆறு சார்ந்த பண்டிகைகள், விளையாட்டுகள் நிறைய உள்ளன. எனவே அவற்றைப் பேணிப் பாதுகாப்பது தமது தலையாய கடமையாகும்.

You May Also Like:
மழை நீர் உயிர் நீர் கட்டுரை
மண் வளம் காப்போம் கட்டுரை