பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்டுரை

pasumpon muthuramalinga thevar katturai in tamil

தேசியம் காத்த செம்மலென அழைக்கப்பட்டவரும், தனது வீரப்பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய வகையில் காணப்படுபவரே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவார்.

இவர் சமூகத்திற்காக ஆற்றிய பணியானது அளப்பரியதாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடிய ஒரு சிறப்பு மிக்க மனிதராகவும் இவர் திகழ்ந்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • முத்துராமலங்க தேவரின் இளமைக்கால வாழ்க்கை
  • பல துறை திறமை கொண்டவர்
  • சமூக சீர்திருத்தத்தில் இவரது பங்கு
  • சுதந்திர போராட்டமும் முத்துராமலங்க தேவரும்
  • முடிவுரை

முன்னுரை

வாழும் போதே ஒரு வரலாற்றுடனான வாழ்க்கையை வாழ்ந்ததில் சிறப்புமிக்கவர் முத்துராமலங்க தேவர் ஆவார்.

இவர் மக்களின் நலனிற்காக அரும்பாடுபட்டதோடு மட்டுமல்லாது சுதந்திர போராட்ட தியாகியாகவும் காணப்பட்டார் என்பது இவரது பெருமையை பறைசாற்றி நிற்கின்றது. இவர் நாட்டின் நலனிற்காகவும் சமூகத்தின் நலனிற்காகவும் பல அர்ப்பணிப்புக்களை செய்தவராவார்.

முத்துராமலிங்க தேவரின் இளமைக்கால வாழ்க்கை

இவர் 1908, ஒக்டோபர் 30ம் திகதி ராமநாதபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் உக்கிரபாண்டி தேவரும் இந்திராணி அம்மையாரும் ஆவார். இவரது தாயார் இவருக்கு ஒரு வயதாகுமுன்பே இறந்துவிட்டார்.

இதன் பின்னர் இவரது தந்தை மறுமணம் செய்து கொண்டார் இவ்வாறு இரண்டாவது திருமணத்திலும் மனைவி இறந்ததன் காரணத்தினால் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இத்தகைய சூழலில் முத்துராமலிங்க தேவர் தனது பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வந்தார். இவர் தனது சிறு வயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கியதோடு தனது மேல்படிப்பை மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் எனும் பள்ளியில் கற்று வந்தார்.

பின்னர் உடல் நல குறைபாட்டின் காரணமாக கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டதோடு பின்பு அரசியலின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பல் துறை திறமை கொண்டவர்

முத்துராமலங்க தேவர் பல்வேறு துறைகளில் திறன்படைத்தவராக காணப்பட்டார். அதாவது குதிரை ஏற்றம், சோதிடம், துப்பாக்கி சுடுதல், மருத்துவம் என பல துறைகளில் தேர்ச்சி பெற்றவராகவே திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவர் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் வீரப்பேச்சாற்றல் மிக்கவராகவும் காணப்பட்டார்.

சமூக சீர்திருத்தவாதி

சமூகத்தை சீர்திருத்துவதற்காக இவர் மேற்கொண்ட பணிகள் அளப்பரியதாகும். அதாவது ஒடுக்கப்பட்ட சாதியின மக்களை உயர்த்துவதற்காக அரும்பாடுபட்டார்.

மேலும் இவர் சாதி ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக, வேலைக்காக உரிமைகளை பெற்றுக் கொடுக்க போராடினார். அதுமாத்திரமல்லது சாதி அமைப்பை எதிர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த போராடிய பெருமை இவரையே சாரும்.

அந்தவகையில் சமூகத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பினை முன்னிட்டு பாரத ரத்னா விருது வழங்கிவைக்கப்பட்டமை சிறப்பிற்குரியதாகும்.

சுதந்திர போராட்டமும் முத்துராமலிங்க தேவரும்

இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியதோடு தனது பேச்சுத் திறமையின் காரணமாக இந்திய மக்களை இந்திய மண்ணிண் விடுதலைக்காக ஒன்றுபடுத்தியவராவார்.

பல்வேறுபட்ட வீர உரைகளை ஆற்றி ஆங்கிலேயருக்கு எதிரானதொரு கிளர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த ஆங்கிலேயர்கள் இவரை கைது செய்து சிறையிலிட்டனர். இந்திய சுதந்திரத்திற்காக தனது உயிரையும் துச்சமாக நினைத்து சிறைவாசம் சென்றவரே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆவார்.

முடிவுரை

சமூக சீர்திருத்தத்திற்கு பங்களிப்பு செய்த மாமனிதர் 1963ம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார். இவ்வாறு இம் மாமனிதர் உலகை விட்டு நீங்கினாலும் மக்கள் மனதில் இன்றும் நீங்கா சரித்திரம் படைத்தவராகவே திகழ்கின்றார்.

You May Also Like:

டாக்டர் ராதாகிருஷ்ணன் பற்றிய கட்டுரை

மகளிருக்கு சொத்துரிமை கலைஞரின் சமூக புரட்சி