மனிதருள் மாணிக்கம் நேரு கட்டுரை

manitharul manickam nehru katturai in tamil

நேரு அவர்கள் சிறந்த தலைவர் மட்டுமல்லாது குழந்தைகள் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு மனிதராகவும் திகழ்ந்தார்கள்.

மனிதருள் மாணிக்கம் நேரு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மனிதருள் மாணிக்கம் நேருவின் வாழ்க்கை
  • குழந்தைகள் தினமும் நேருவும்
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு
  • இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பணிகள்
  • முடிவுரை

முன்னுரை

இந்திய நாட்டின் முதல் பிரதமர் எனவும் நவீன இந்தியாவின் சிற்பியாகவும், மனிதருள் மாணிக்கமாகவும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்டவரும் என்ற சிறப்பிற்குரியவர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஆவார்.

மனிதருள் மாணிக்கம் நேருவின் வாழ்க்கை

இவர் 1889ம் ஆண்டு நவம்பர் 14ல் அலகாபாத் எனும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் மோதிலால் நேரு மற்றும் ஸ்வரூபராணி அவர்களும் ஆவார். இவருக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

இவர் தனது கல்வியில் சிறந்து விளங்கி காணப்பட்டார். 1916 இல் கமலா கவுல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறாக இவரது இளமைக்கால வாழ்வானது காணப்பட்டது. மேலும் இவர் சட்டப்படிப்பை மேற்கொண்டு 1962இல் சட்டப்பணியை மேற்கொண்டார்.

இவர் எழுத்தாளராகவும் சிறப்புற்று விளங்கியதோடு பல்வேறு சாதனைகளையும் படைத்தவராவார். மனிதருள் மாணிக்கம் என நேருவை புகழ்ந்தவர் மகாத்மா காந்தி ஆவார். இவர்கள் இருவருமே சமூகத்திற்காக அரும்பாடுபட்டவர்களாவர்.

குழந்தைகள் தினமும் நேருவும்

நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படும் நேரு அவர்கள் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவராக காணப்பட்டதோடு அவர்களுடைய வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவராவார்.

அதாவது பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்களோடு உரையாடுபவராகவே காணப்பட்டார். இதன் காரணமாக குழந்தைகள் இவரை நேரு மாமா என்றே அழைத்தார்கள்.

மேலும் இவர் குழந்தைகளின் நலனைக் கருத்திற் கொண்டு பல கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் எனலாம். இதன் காரணமாகவே இவரை கௌரவிக்கும் பொருட்டு இவரது மறைவை தொடர்ந்து நவம்பர் 14ம் திகதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவர் கல்விக்காக ஆயிரம் பள்ளிகள் கட்டியதோடு குழந்தைகளுக்காக இலவச உணவு வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை குழந்தைகளின் நலனிற்காக கொண்டு வந்தவராவார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு

இவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவராவார். அதாவது ஜாலியன் வாலாபாக் என்ற சம்பவத்தின் மூலமாக அரசியலில் ஈடுபாடுடையவராக மாறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் பிற்பாடு இவர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி 9 வருடங்கள் தனது வாழ்வை சிறையிலேயே கழித்தார். தனது தேசத்தில் விடியலுக்காக பாடுபட்ட ஓர் மாமனிதரே நேரு அவர்கள் எனலாம்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பணிகள்

ஓர் நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையிலேயே தான் உள்ளது என்ற வகையில் இளைஞர்களுக்காக பல கல்வி திட்டங்களை மேற்கொண்டதோடு இளைஞர்களையும் ஊக்கப்படுத்தினார்.

இந்தியர்கள் மத்தியில் இலவசக் கல்வித்திட்டத்தை கொண்டு வந்து பல்வேறு பள்ளிகளை கட்டிய பெருமை இவரையே சாரும்.

இவர் 1951இல் இந்திய திட்டக்குழு என்ற ஒன்றை ஏற்படுத்தியதன் மூலமாக ஜந்தாண்டு திட்டத்தை கொண்டுவந்தார். இதனூடாக எதிர் வரும் 5 ஆண்டுகளில் என்ன திட்டம் காணப்பட வேண்டும் என்பது தொடர்பான திட்டங்களை வகுத்தார்.

இந்தியர்கள் மத்தியில் தமது தேசத்தின் மீதான பற்றினை விதைத்து ஜனநாயக நாட்டை கட்டியெழுப்பினார். இவ்வாறாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவராவார்.

முடிவுரை

தனது வாழ்க்கையை தனது தேசத்திற்காக அர்ப்பணித்து செயற்பட்டவரான மனிதருள் மாணிக்கம் என்ற பெருமை நேருவையே சாரும்.

You May Also Like:

உப்பு சத்தியாகிரகம் வரலாறு

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை