சிறுத்தையே வெளியே வா கட்டுரை

siruthaiya veliyil vaa katturai in tamil

புரட்சிக் கவிஞரான பாரதிதாசனின் கவிதைகளில் ஒன்றாகவே சிறுத்தையே வெளியே வா என்ற கவிதை காணப்படுகின்றது.

சிறுத்தையே வெளியே வா கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பாரதிதாசனுடைய வாழ்க்கை
  • சிறுத்தையே வெளியே வா பாடல்
  • பாடலுடைய பொருள்
  • முக்கியத்துவமிக்க கவிதை
  • முடிவுரை

முன்னுரை

பாரதிதாசனுடைய சிறுத்தையே வெளியே வா என்ற கவிதையானது பிரசித்தி பெற்றதொரு கவிதையாக காணப்படுவது சிறப்பிற்குரியதாகும்.

பாரதிதாசன் வாழ்க்கை

இவர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கனகசபை மற்றும் இலக்குமி அம்மையாருக்கு மகனாக பிறந்தவராவார். இவரை பெற்றோர்கள் சுப்புரெத்தினம் என்றே அழைத்தனர். ஆனால் இவர் பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை பாரதிதாசன் என மாற்றி கொண்டார்.

இவர் சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியில் அதிக பற்றுடையவராகவே காணப்பட்டார். இவ்வாறாக தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்ற சிறப்பிற்குரியவரே பாரதிதாசன் ஆவார். பல தமிழ் நூல்களை இயற்றிய பெருமைக்குரியவராவார்.

சிறுத்தையே வெளியே வா பாடல்

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகை விரி எழு!
சிங்க இளைஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய் விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக் கென் பார் எனில்,
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற்றெழுக?
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யோம் பூணம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக் கொணக் கடல் போல் மாப்பகை மேல் விடு!
நன் மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்று சேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க்க இளைஞனே, வாழ்கதின் கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கதின் வையத்து மாப்புகழ் தன்னே!

பாடலின் பொருள்

பூட்டப்பட்ட இரும்புக் கூட்டின் கதவானது திறக்கப்பட்டு விட்டது. சிறுத்தையை போன்று வீரம் கொண்ட இளைஞனே வெளியே வா?

எலி போல் உன்னை சிறுமையாக யாரெல்லாம் இகழ்ந்தார்களோ அவர்கள் நடுங்கும் படியாக புலிக்கு ஒத்த வீரத்தினை உடையவனாக செயல்பட்டு உன் திறமையை காட்ட புறப்பட்டு வெளியில் வா! பகல் நேரத்தை கூட நல் இரவாக நினைத்து கொண்டிருந்தாய், சிம்புட் பறவையை போல விரித்து வலிமை கொண்டு எழுந்து வா!

சிங்கத்தை ஒத்த வீரமுடைய இளைஞனே முகத்தை திருப்பி கண்களை திற! உன் மொழிப்பற்றினை வெளியே கொண்டு வா என்றும் இவ் உலகத்தை ஆண்ட வண்டமிழ் மரபே உன் வீரத்தை காட்ட எழுந்திரு என்பதினூடாக தமிழ் மொழிக்கு விடுதலை கொடுக்க வா இளைஞனே என இளைஞரை முன்னிட்டே பாடப்பட்டுள்ளது.

முக்கியத்துவமிக்க கவிதை

சிறுத்தையே வெளியே வா என்ற கவிதையானது தமிழ் மொழி மீதான பற்றினையும், விடுதலை உணர்வினையும், இளைஞர்களின் வீரத்தையும் சுட்டிக்காட்டுவதனூடாக தனது தமிழ் மொழியின் மீதான பற்றினை எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் இளைஞர்களாலேயே சிறந்த மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதனூடாக இளைஞர்களின் வீரம் போற்றப்படுவதானது இக்கவிதையின் முக்கியத்துவத்தையே எடுத்துக்காட்டுகின்றது.

முடிவுரை

சிறுத்தையே வெளியே வா என்ற கவிதைக்கிணங்க ஒவ்வோர் இளைஞனும் தனது வீரத்தினால் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவனே என்பதனை கவிஞர் தெளிவுபடுத்துகின்றார். அந்த வகையில் தமிழை போற்றி வளர்ப்பது அனைவரது கடமையாகும்.

You May Also Like:

பாரதியார் பற்றிய கட்டுரை

கவிஞர் பாரதிதாசன் கட்டுரை