உலக பூமி தினம்

உலக புவி தினம்

உலக பூமி தினம்ஏப்ரல் 22
World Earth DayApril 22

சூரியக் குடும்பத்தில் பல உயிரினங்கள் வாழத் தகுதியான ஒரே கிரகம் நாம் வாழும் பூமி மட்டுமேயாகும். நாம் அனைவரும் பூமி நமக்கு மட்டுமல்ல என்பதனை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எம்மை தொடர்ந்து வருங்கால சந்ததிகளும் பிற உயிர்களும் வாழும் வகையில் பூமியில் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும்.

உலக பூமி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 உலக பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக புவி தினம் வரலாறு

புவி பாதுகாப்பையும் அதன் வளங்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி அமெரிக்காவின் சுற்றுச்சூழல் ஆர்வலர் “கேலார்டு நெல்சன்” என்பவரின் தீவிர முயற்சியால் 1970 இல் இருந்து உலக பூமி தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக பூமி தினம் நோக்கம்

நமது பூமியைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பூமி தினம் கொண்டாடப்படுகின்றது.

குறிப்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பூமியைக் காக்கும் வகையில் ஆண்டு தோறும் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.

பூமி தினத்தின் முக்கியத்துவம்

இந்த தினத்தில் உலகம் முழுதும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சிகள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போன்றன இடம்பெறும்.

பூமியில் உள்ள சுற்றிச்சூழல் பாதிக்கப்படும் வழிகள்

பூகம்பம், சுனாமி, வெள்ளம், வறட்சி, பனிப்பாறை உருகுதல், எரிமலை வெடித்தல் போன்றன நிகழக் காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுதல் ஆகும்.

பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை அதிரித்தல், காடுகளை அழித்தல், வன ஜீவராசிகளை வேட்டையாடுதல், தொழிற்சாலைக் கழிவுகள் வளி மற்றும் நீருடன் கலத்தல் போன்ற பல செற்பாடுகளால் சூழல் மாசுபடுகின்றது.

பூமியைப் பாதுகாக்கும் வழிகளும், அவசியமும்

இயற்கையைக் காப்பாற்ற மனிதன் கைகோர்த்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது.

நமது பூமியைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு மரம் வளர்க்க வேண்டும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மறுசுழற்சி பொருட்களை அதிகம் கையாளுதல், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மாசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும், சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம்.

பாடப்புத்தகங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான பாடங்களைச் சேர்த்து வருங்கால சந்ததியினர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றித் தெரிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.

இந்த பூமியைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒவ்வொரு தனிநபரிடம் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

உலக பூமி தினத்தில் பின்பற்ற வேண்டிய விடயங்கள்

உலக பூமி தினத்திலாவது இயற்கை வளத்தைப் பாதுகாத்து பூமியின் நலனைப் பாதுகாக்க நாம் உறுதியெடுக்க வேண்டும். நாம் மாறினால் மட்டுமே நாடு மாறும், நாடுகள் மாறினால் பூமி வாழும்.

நிலம், நீர், காற்று மாசடையாமல் பாதுகாப்போம் என்று உலக பூமி நன்னாளில் உறுதியேற்று எதிர்கால சந்ததியினருக்கு வளமான பூமியைக் கையளிக்க முயற்சி செய்வோம்.

You May Also Like :
எரிபொருள் பயன்பாடு கட்டுரை
சுற்றுலா வளர்ச்சி கட்டுரை