அறிவியலின் நன்மைகள் கட்டுரை

Ariviyal Nanmaigal Katturai In Tamil

இந்த பதிவில் உலகை ஆளும் “அறிவியலின் நன்மைகள் கட்டுரை” பதிவை காணலாம்.

நம் வாழ்வோடு அறிவியல் இணைந்து பயணிக்கின்றது. மனிதகுல வளர்ச்சிக்கு அறிவியல் பெரும் பங்களிப்பு செய்கின்றது.

அறிவியலின் நன்மைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அறிவியலின் தோற்றம்
  3. அறிவியலின் வளர்ச்சி
  4. அறிவியல் தரும் பயன்கள்
  5. அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு
  6. முடிவுரை

முன்னுரை

அறிவியல் உலகில் மெய்ஞானத்தை விஞ்சி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மனித வாழ்க்கை காலை கண்விழிப்பது முதல் இரவு தூங்கும் வரை அறிவியலுடன் இரண்டறக் கலந்து விட்டது.

தாகம் தீர்க்கும் தண்ணீர் முதல் தூங்கத் தேவையான கொசுவர்த்தி வரை நம்மோடு தோள் சாய்ந்து நிற்கின்றது அறிவியல்.

நம் அன்றாட வாழ்வோடு பல அறிவியல்கள் இணைந்து காணப்படுகின்றன. அறிவியலின் நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

அறிவியலின் தோற்றம்

மனிதன் தனது வாழ்க்கையை இலகுபடுத்தும் ஒவ்வொரு விடயத்தையும் எப்போது கண்டுபிடிக்க தொடங்கினானோ அப்போதே அறிவியலானது தோற்றம் பெற்று விட்டது எனலாம்.

சுமார் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இரு கற்களை ஒன்றுடன் ஒன்று உரச அதன் மூலம் தீப்பொறி உருவாக்குவதனை மனிதன் கண்டுபிடித்தான், அன்று தொடக்கம் இன்று வரை பல கோடிக்கணக்கிற்கும் மேலான அறிவியல் கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ சிகிச்சை முறைகள்⸴ மருந்துகள்⸴ போக்குவரத்து சாதனங்கள்⸴ விண்வெளி ஆராய்ச்சிகள்⸴ கட்டிடக்கலை வடிவங்கள் போன்ற பலவற்றையும் இன்றுவரை கண்டுபிடித்த வண்ணமே உள்ளான்

அறிவியலின் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது. அறிவியலின் தோற்றம் பற்றி துல்லியமான ஆண்டு இதுவரை இல்லாத போதிலும் அறிவியல் வளர்ச்சியானது 17ஆம் நூற்றாண்டிலேயே தோற்றம் பெற்றது எனலாம்.

உலக மக்களிடையே காணப்பட்ட பல மூட நம்பிக்கைகளை களைந்து இயற்கையின் தோற்றத்தில் உள்ள அறிவியலை உலகிற்கு உரைத்தவர்கள் அறிவியலாளர்களே. இவர்களின் அளப்பரிய பணி அறிவியல் வளர்ச்சியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அறிவியல் தரும் பயன்கள்

அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிவியல் உதவுகின்றது.

அறிவியல் வளர்ச்சியாலும் மற்றும் மனிதன் தனது அறிவியல் திறனாலும் இன்றைக்கு பெரும் சாதனைகளை செய்து கொண்டிருக்கின்றான் சாத்தியமற்ற விடயங்களைக் கூட எளிதாக செய்து விடும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

தீர்க்க முடியாத நோய்கள் எல்லாம் நவீன முறையில் சிகிச்சைகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிர்கள் காக்கப்படுகின்றன.

உடனுக்குடன் தகவல்களை அறியவும் தொடர்பு கொள்ளவும் தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பினை செய்கின்றது.

அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு

இன்று பள்ளிகள்⸴ பொது இடங்கள்⸴ போக்குவரத்து⸴ தொழில்துறை என நமது அன்றாட வாழ்வியலோடு அறிவியல் இணைந்து வருகின்றது. வீட்டில் அறிவியலின் பயன்பாடு பெரிய அளவிலும் தேவைப்பாடாக உள்ளது.

மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சமையல் தேவைகளை நிவர்த்தி செய்யவும்⸴ துரிதமாக சமையல்களைச் செய்து முடிக்கவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன.

பொதுமக்களும் அன்றாட வாழ்வில் பல பொது இடங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்களை அடைந்து வருகின்றார்கள்.

முடிவுரை

உலகம் உள்ளங்கைகளில் உள்ளது என்பதை அறிவியல் உண்மையாக்கி விட்டது. அறிவியல் வளர்சசி மனிதனின் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்துள்ளது.

அறிவியலை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி அதன் நன்மைகளை அடைந்து சிறப்புப் பெறுவோம்.

You May Also Like:
மின் சிக்கனம் கட்டுரை
கல்வியின் சிறப்பு கட்டுரை