சுற்றுலா வளர்ச்சி கட்டுரை

Sutrula Katturai In Tamil

பயணங்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அந்த வகையில் இந்த பதிவில் “சுற்றுலா வளர்ச்சி கட்டுரை” பதிவை காணலாம்.

நிலையற்ற இந்த வாழ்வை ரசித்து மகிழ்வாக வாழ சுற்றுலா என்பது சிறந்த தேர்வாகும்.

சுற்றுலா வளர்ச்சி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. அறிமுகம்
  2. சுற்றுலாவின் அவசியம்
  3. இந்தியாவின் சுற்றுலாத் தலங்கள்
  4. சுற்றுலாவின் நன்மைகள்
  5. இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி
  6. முடிவுரை

அறிமுகம்

மனிதனாகப் பிறந்த நாம் ஓரிடத்திலேயே வாழ்ந்து அங்கேயே இறந்து போவது அழகல்ல. வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வரம். இதனை மகிழ்வாக வாழப் பழக வேண்டும். வாழ்வை மகிழ்விக்கும் ஒரு விடயமாக சுற்றுலா உள்ளது.

சுற்றுலா என்பது மனிதன் தான் வாழும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று தங்கி⸴ மகிழ்ந்து⸴ புத்துணர்வு பெற்றுத் திரும்புதல் எனலாம். ஒவ்வொரு நாடுகளும் சுற்றுலா வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றது.

இந்தியாவில் தேசிய மொத்த உற்பத்தியில் சுற்றுலா பெரும் பங்களிப்புச் செய்கின்றது. இத்தகைய சுற்றுலாவின் வளர்ச்சி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சுற்றுலாவின் அவசியம்

வேலைவாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்கு சுற்றுலா மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரிதும் சுற்றுலா வளர்ச்சி தங்கியுள்ளது.

சுற்றுலாவானது மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கும்⸴ மன அமைதியை பெறுவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றது.

மனித வாழ்க்கையானது வெகுவாக மாறிவிட்டது. மனிதன் தன் வாழ்நாளில் பெருமளவு நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காகவே செலவழிக்கின்றான்.

இதனால் பலர் மன அழுத்தத்திற்கு உட்படுகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் சோகங்கள்⸴ குடும்ப நிலைமை⸴ வாழ்க்கைச் சுமை போன்றன எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றிலிருந்து விடுபட்ட சுற்றுலா அவசியமாகின்றது.

இந்தியாவின் சுற்றுலாத்தலங்கள்

மலைகள்⸴ நீர்வீழ்ச்சிகள்⸴ தீவுகள்⸴ உலக அதிசயம்⸴ கட்டடங்கள்⸴ கேளிக்கைப் பூங்காக்கள்⸴ கடற்கரைகள்⸴ பிரசித்தி பெற்ற கோவில்கள் என பல சுற்றுலா தலங்களை கொண்டமைந்த நாடு நம் இந்திய நாடாகும்.

இந்தியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தாஜ்மஹால் காணப்படுகின்றது. இது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தியாவின் கட்டடக்கலை சாதனையின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மற்றும் பொற்கோயில் இந்தியாவின் மிகப் பெருமைக்குரியதாகும். இது சீக்கியர்களின் மிகப் புனிதமான இடமாகும்.

இந்தியாவிலுள்ள இயற்கை சுற்றுலா இடங்களாக நீர்வீழ்ச்சிகள், மேற்குதொடர்ச்சி மலைகள்⸴ கேரளாவின் பின்அலை நீர்ப்பகுதிகள்⸴ மலை வாழிடங்கள் போன்றவற்றைக் கூறலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மலை வாழிடங்களாக பல இடங்கள் பிரபல்யமானவையாகும். அவற்றுள் பத்மார்ஹி⸴ ஜம்மு-காஷ்மீர்⸴ மூணாறு⸴ கேரளா⸴ ஊட்டி⸴ கொடைக்கானல் போன்றவை அவற்றில் சிலவாகும்.

சுற்றுலாவின் நன்மைகள்

ஜாதி வேறுபாடுகள்⸴ மத அடிப்படைவாதம்⸴ மொழி வேற்றுமைகள் ஆகியவை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அமைதியை கெடுக்கின்றன. சுற்றுலாவின் மூலம் தேசிய ஒருமைப்பாடு வளர்கின்றது.

சுற்றுலா மனிதனுக்கு மகிழ்ச்சியையும்⸴ புத்துணர்ச்சியையும் அளிக்கின்றது. ஒரு நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருகின்றது.

பிற நாடுகளுக்கும்⸴ தமது சொந்த நாட்டின் பிற பகுதிகளுக்கும் செல்வதால் அறிவு வளர்ச்சியடையும்.

நாகரீகம்⸴ பண்பாடு ஆகியவை பிற மக்களிடம் பரப்பப்படுகின்றது. இதனால் பண்பாடு பரிமாறப்படும்.

சுற்றுலாவால் வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சி

இந்தியா பல சுற்றுலா தலங்களை தன்னகத்தே கொண்ட நாடாகும். கலைகளின் சுவர்க்க பூமி இந்தியா. அழகிய கடற்கரைகள்⸴ மலைத்தொடர்கள் முதலான இயற்கை வர்ணனைகளைக் கொண்டது.

இந்தியாவை பார்வையிட ஆண்டுதோறும் பல மில்லியன் வெளிநாட்டவர்கள் வருகை தருகின்றனர். அதேபோன்று உள்நாட்டு பயணிகளின் வருகையும் உண்டு.

கொரோனா பெரும் தொற்று காரணமாக சுற்றுலா துறை சரிவை சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

GDP யில் சுற்றுலா துறை முக்கிய பங்களிப்பு செய்கின்றது. வேலைவாய்ப்பில் சுற்றுலா துறை பெரும் பங்காற்றுகின்றது.

முடிவுரை

எமது வாழ்க்கையானது நிலையற்றது. எனவே வாழும் போதே வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.

இயற்கையின் அற்புத அழகையும்⸴ புதிய இடங்கள் புதிய மனிதர்களுடனான சந்திப்பையும்⸴ அவர்களது கலாச்சாரம்⸴ பண்பாடு போன்றவற்றையும்⸴ அறிந்து கொள்ளவும்⸴ மன அமைதியையும்⸴ மன மகிழ்வையும் பெற சுற்றுலா செல்வோம்.

You May Also Like:

நூலகம் பற்றிய கட்டுரை
தேர்தலின் முக்கியத்துவம் கட்டுரை