இன்றைய கல்வி முறை கட்டுரை

indraya kalvi murai katturai in tamil

அழியாச் செல்வம் கல்வி செல்வம் என்ற வகையில் எக்காலத்திலும் வளர்ச்சியடைந்து கொண்டு வரும் துறையே கல்வித் துறையாகும். கல்வியானது எமது எதிர்காலத்தையே மாற்றக் கூடிய வல்லமை உடையதாகும். கல்வியை நாம் சிறந்த முறையில் கற்றால் எமது எதிர்காலம் சிறந்ததாக அமையும்.

இன்றைய கல்வி முறை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்பகால கல்வி முறை
  • கல்வியின் அவசியம்
  • இன்றைய கல்வி முறை
  • இணையவழிக் கல்வியும் மாணவர்களும்
  • முடிவுரை

முன்னுரை

நமக்கானதொரு அடையாளத்தை உருவாக்கி தருவதே கல்வியாகும். எமது வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கான ஓர் சிறந்த முறையே கல்வி கற்றலாகும். இத்தகைய கல்வியானது இன்று தொழிநுட்ப வளர்ச்சியுடன் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகின்றது.

ஆரம்பகால கல்வி முறை

ஆரம்ப காலங்களில் கல்வி முறைமையானது பள்ளிகளில் அல்லாது ஒரு குருவை தேடிச் சென்று கற்றுக் கொள்கின்ற ஒரு நிலையே காணப்பட்டது. அக்காலத்தில் மாணவர்கள் பல்வேறு போர்க்கலைகள், இலக்கியங்கள், இதிகாசங்கள் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர்களாக காணப்பட்டனர்.

சங்ககாலத்தில் முச்சங்கள் அமைத்து தமிழை வளர்த்ததோடு இதற்கு பிற்பட்ட காலங்களில் அறம் சார்ந்த பள்ளிகளை நிறுவி அறம் போதித்தார்கள்.

இக்காலத்தில் ஐம்பெரும் காப்பியங்கள் தோன்றியதோடு பின்னர் தமிழ், இயற்பியல், விஞ்ஞானம், கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் வளர்ச்சி கண்டன. மேலும் சோழர் காலப்பகுதிகளிலே கல்வி நிலையங்கள் தோற்றம் பெற்றதோடு கற்கவும் ஆரம்பித்தார்கள் இவ்வாறாகவே ஆரம்ப கால கல்வி முறைமையானது காணப்பட்டது.

கல்வியின் அவசியம்

ஒரு மனிதனுடைய வாழ்வில் மாற்றத்திற்கு வித்திடுவன கல்வி ஆகும். அதாவது கல்வியின் மூலமாகவே ஒருவர் சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும்.

மேலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், பல்வேறு கண்டுபிடிப்புக்கள், சாதனைகளை மேற்கொள்ளவும், சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் கல்வியானது அவசியமாகும்.

நாம் வாழும் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை கற்றுக் கொண்டேதான் வாழ்ந்து வருகின்றோம். அந்த வகையில் கல்வியானது எமக்கு கிடைப்பதற்கரியதொரு பொக்கிஷமாகும்.

இன்றைய கல்வி முறை

இன்றைய கால கட்டத்தில் கல்வி முறைமையானது பல்வேறு மாற்றங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கின்றமையினை காணக்கூடியதாக உள்ளது. அதாவது வீட்டில் இருந்து கொண்டே கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது.

தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பெருவாரியாக இணையவழிக் கல்வியே காணப்படுகின்றது. இது கற்றலுக்கு சிறந்ததாகவும் இலகுவாகவும் காணப்பட்டாலும் பாடசாலைகளில் சென்று கல்வி கற்பதற்கு ஈடாகாது என்றே சொல்ல முடியும்.

இன்றைய மாணவர்கள் இணையவழிக் கல்வி முறையில் அலட்சியமாக செயற்படுவதோடு கல்வியில் ஆர்வம் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இன்றைய கல்வி முறைமையானது கல்விச் சேவையை அடிப்படையாக கொண்டதாக காணப்படாது வியாபாரமாக மாறி வருகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டலாம். ஏனெனில் இன்று தனியார் மயப்படுத்தப்பட்ட கல்லூரிகள் அதிகரித்து காணப்படுகின்றமையாகும்.

இணையவழிக் கல்வியும் மாணவர்களும்

இன்றைய கல்வி முறையானது பெருவாரியாக இணையத்தை மையமாக கொண்டே காணப்பட்டு வருகின்றதோடு வீட்டில் இருந்து கொண்டும் இலகுவாக கற்கக் கூடியதாக காணப்படுகின்றது.

மாணவர்கள் இலகுவாக தங்களது தேடல்களை வீட்டில் இருந்து கொண்டே நிகழ்நிலையில் தேடிக் கொள்ளவும் இணையவழிக் கல்வியானது துணைபுரிகின்றது.

மேலும் தூர இடங்களிற்கு சென்று கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கு தன் வீட்டிலிருந்து கொண்டே கல்வியை கற்பதற்கான ஒரு முறைமையாக இக்கல்வி முறை காணப்படுகிறது.

முடிவுரை

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” என்ற திருக்குறள் அடியினூடாக நாம் ஒரு பிறப்பில் கற்ற கல்வியானது வரும் ஏழு பிறப்புக்களிலும் எம்மை பாதுகாக்கும் சிறப்புடையது என்பதினூடாக கல்வியின் மேன்மையானது எடுத்துக்காட்டப்படுகின்றது.

You May Also Like:

இணைய வழி கல்வி கட்டுரை

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை