ஆரோக்கியமான வாழ்க்கை முறை கட்டுரை

arokiyamana valvu katturai in tamil

ஒரு மனிதனுடைய வாழ்வானது சிறப்பாக காணப்பட வேண்டுமாயின் ஆரோக்கியத்தை பேணுவது அவசியமாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே சிறந்த வாழ்க்கை முறைமையாகும் என்றவகையில் ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய அன்றாட நடவடிக்கைகளில் ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரோக்கியமான வாழ்க்கை என்பது
  • ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகள்
  • ஆரோக்கியத்தின் அவசியம்
  • ஆரோக்கியமான வாழ்க்கையில் உணவின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

இந்த உலக வாழ்வில் மகிழ்ச்சிகரமாகவும் நோய் நொடியின்றியும் வாழ ஆரோக்கியமான வாழ்க்கை முறையே பின்பற்ற வேண்டும். உடல் மற்றும் மனமானது ஆரோக்கியமாக காணப்படுகின்ற போதே எமது வாழ்க்கையும் ஆரோக்கியமானதாக காணப்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கை என்பது

ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது மனிதனானவன் உடல் மற்றும் உள ரீதியில் நீண்ட கால ஆயுளுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்வதாகும்.

எமது வாழ்வில் நாம் ஒரு விடயத்தை சரிவர நிறைவேற்ற வேண்டுமெனின் அதற்கு ஆரோக்கியமானது அவசியமானதாகும். எமது ஆரோக்கியமே எமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். எம்மை இலகுவாக நோய்கள் அண்டாது நீண்ட காலம் வாழ ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிமுறைகள்

நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டுமாயின் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். அதாவது எம் வாழ்க்கை தரத்தை ஆரோக்கியமாக்க தினமும் உடற்பயிற்சி செய்தல் சிறந்ததாகும்.

ஆரோக்கியமான பழங்கள், கீரை வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுதல், தியானம் செய்தல், மூச்சுப்பயிற்சி செய்தல், சிறந்த தூக்கம், உரிய நேரத்திற்கு உணவுகளை உண்ணுதல், சுத்தமான பழக்கவழக்கங்களை கடைபிடித்தல், மன அழுத்தத்தை தவிர்த்தல் என பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை எமது வாழ்வில் பின்பற்றுவதன் மூலமாகவே எம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

ஆரோக்கியத்தின் அவசியம்

ஆரோக்கியம் இல்லை என்றால் எம்மால் நிம்மதியான வாழ்வை வாழ முடியாது. நீண்ட நாள் வாழ முடியாத ஒரு நிலையே ஏற்படும்.

நாம் நோயில்லாத வாழ்வை வாழ ஆரோக்கியமானது அவசியமாகும். மேலும் நாம் எமது இலக்குகளை சரிவர நிறைவேற்றி கொள்ளவும், மகிழ்ச்சிகரமான வாழ்வை வாழவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை பேணுதல் அவசியமானதாகும்.

ஆரோக்கியமான வாழ்க்கையில் உணவின் பங்கு

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுவதில் உணவின் பங்கு பிராதான இடத்தை வகிக்கின்றது. நாம் உண்ணும் உணவுகளானவை ஊட்டச்சத்துள்ள உணவுகளாக காணப்படுகின்ற போதே எம்மால் வாழ்வை சிறப்பாக வழிநடாத்தி செல்ல முடியும்.

உணவுகளானவையே உடலுக்கு சக்தியை தந்து நோயிலிருந்து காக்கின்றது. எனவே உணவுகள் சிறந்ததாக காணப்படுகின்ற போதே எமது வாழ்வும் ஆரோக்கியமாக காணப்படும்.

பல்வேறு நோய்களுக்கான மருந்தாக பல உணவு வகைகள் காணப்படுகின்றதோடு நோயின்றி வாழவும் துணைபுரிகின்றது.

நாம் ஆரோக்கியத்துடன் வாழ காபோவைதரேற்று, புரதம், விற்றமின், கனியுப்புக்கள் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதே போன்று பச்சை கீரைகள், தானியங்கள் போன்றனவையும் உடலிற்கு தேவையான சக்தியை பெற்றுத் தருவனவாகும்.

முடிவுரை

இந்த உலகில் பிறந்த அனைவரதும் ஆசை இவ்வுலகில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதே ஆகும் என்றடிப்படையில் எம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடும் ஆரோக்கியத்தை கடைப்பிடிப்பது அனைவருடைய கடமையாகும்.

You May Also Like:

காசநோய் விழிப்புணர்வு கட்டுரை

நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும்