தரம் பற்றிய கட்டுரை

tharam katturai in tamil

மனித வாழ்வோடு ஒண்றிணைந்த ஒன்றாகவே தரம் காணப்படுகிறது. அதாவது எந்தவொரு விடயமும் தரமாக இருக்க வேண்டும் என்பதனையே அனைவரும் விரும்புகின்றோம். எதிலும் சிறந்த தரம் பேணப்படும் போதே எம்மால் வாழ்வில் உயர முடியும்.

தரம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தரம் என்பது
  • தரமான உணவு
  • தரமான கல்வி
  • தரமான உற்பத்தி
  • முடிவுரை

முன்னுரை

இன்று ஒவ்வொரு செயற்பாட்டிலும் தரத்தினையே பேணிவருகின்றனர். அதாவது ஒரு விடயம் சிறந்தது என்பதனை அறிய தரமானது அவதானிக்கப்படுகின்றது. வாழ்க்கை தரம், உணவில் தரம் என பல்வேறு துறைகளில் தரமானது இன்றியாமையாததாகவே காணப்படுகின்றது.

தரம் என்பது

தரம் என்பது யாதெனில் எமது தேவைகளின் போது இது சிறந்த பயன்பாட்டினை உடையதா? அல்லது எமது தேவையை பூர்த்தி செய்கின்றதா? என்பது பற்றிய தன்மையே தரம் எனலாம்.

அந்த வகையில் உதாரணமாக கல்வி துறையை எடுத்துக்கொண்டால் இது தரமான கல்வியா என்றே நோக்குகின்றோம். இதனூடாகவே ஒவ்வோர் துறையிலும் தரமானது பங்காற்றி வருகின்றது.

மேலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயங்களையும் நாம் தரமானவை என்று ஏற்றுக்கொண்டே வருகின்றோம்.

தரமான உணவு

ஒரு மனிதனுடைய பிரதானமானதொரு தேவையே உணவாகும். இத்தகைய உணவானது தரமானது என்பதனை உறுதிப்படுத்தியதன் பின்னர் உண்ணும் போது எம்மால் ஆரோக்கியமாக வாழமுடியும்.

அதாவது எந்த விளைவுகளுமற்ற சிறந்த உணவே தரம் வாய்ந்த உணவு ஆகும். அதேபோன்று தரமற்ற உணவுகளை உண்ணும் போது எமக்கு நோய்களே ஏற்படும். ஆகவே தான் உணவில் தரமானது இன்றியாமையாத ஒன்றாக கருதப்படுகிறது.

தரமான கல்வி

ஒவ்வோர் நாட்டிலும் கல்வி வளர்ச்சியானது மிகவும் சிறப்பான முறையில் காணப்பட வேண்டுமாயின் அது தரமான கல்வியாக காணப்பட வேண்டும்.

அதாவது ஓர் நாட்டினுடைய அரசாங்கமானது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும்போதே அந்நாடானது கல்வியில் வளர்ச்சி பெற்ற நாடாக திகழும். அறிவார்ந்த மாணவ சமூதாயத்தை கட்டியெழுப்ப தரமான கல்வியே சிறந்ததாகும்.

அரசாங்கமானது மாணவர்களுடைய கல்வியறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து தரமான கல்வியை வழங்குவது கட்டாயமானதாகும்.

தரமான உற்பத்தி

இன்று உற்பத்தி செய்யும் பொருட்களானவை தரமற்றதாகவே காணப்படுகிறது. ஏனெனில் பல்வேறு உற்பத்திகளில் கலப்படங்களை சேர்ப்பதினூடாக தரமற்ற உற்பத்திகளாகவே திகழ்கின்றன.

உதாரணமாக இன்றைய வியாபாரத்தில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் பல்வேறு இரசாயனங்களை சேர்ப்பதனூடாக அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவே காணப்படுகிறது.

மேலும் இன்று எந்த உற்பத்திப் பொருளை எடுத்தாலும் ஏதோவொரு கலப்படத்தை சேர்த்தே தயாரிக்கின்றனர். இதன் காரணமாக இன்று தரமான உற்பத்தி என்ற ஒன்றே மிகவும் அரிதாகி விட்டது.

தரமற்ற பொருட்களின் பக்கவிளைவுகளானவை உயிரையே கொள்ளக் கூடியது என்பதை உணர்ந்து தரமான பக்க விளைவுகளற்ற பொருட்களை உற்பத்தி செய்யுங்கள் இதன் காரணமாக சிறப்பாக வருமானம் ஈட்டிக்கொள்ள முடிவதோடு சிறப்பாகவு வாழவும் முடியும்.

முடிவுரை

எந்தவொரு துறையிலும் தரத்தை பேணுகின்ற போதே எம்மால் வாழ்வை சிறப்பாக வாழ முடியும் என்பதோடு தரமற்ற பொருட்களின் பாவணையை இயன்றளவு குறைப்பதன் மூலமே ஓர் நாடானது சிறப்பாக வளர்ச்சியடையும்.

ஏனெனில் இன்று தரமற்ற பொருட்களேயே தரமானது என்று தனது விற்பனையை பெருக்குவதற்காக விற்கின்றனர். இதனால் இன்று பல்வேறு விளைவுகளே ஏற்படுகின்றது. எனவே அனைத்திலும் தரம் பேணுவோம் என்ற கொள்கையை கடைப்பிடிப்போம்.

You May Also Like:

செய்யும் தொழிலே தெய்வம் கட்டுரை

திடக்கழிவு மேலாண்மை கட்டுரை