கிறிஸ்துமஸ் பற்றிய கட்டுரை

christmas katturai in tamil

கிறிஸ்துமஸ் பண்டிகையானது கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இப்பண்டிகையானது மிகவும் சிறப்புமிக்கதொரு பண்டிகையாகவே திகழ்கின்றது. மேலும் இப்பண்டிகையானது இயேசுநாதரின் சிறப்பினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

கிறிஸ்துமஸ் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கிறிஸ்துமஸ் பண்டிகை
  • கிறிஸ்துமஸ் நாளில் இடம்பெறும் நிகழ்வுகள்
  • 12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
  • கிறிஸ்துமஸ் பரிசு
  • முடிவுரை

முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் பண்டிகையே கிறிஸ்துமஸ் பண்டிகையாகும். இந்நாளில் இயேசுவை வழிபட்டு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்தினையும் அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் குழந்தைகளால் விரும்பப்படக்கூடியதொரு நாளாகவே இந்நாளானது காணப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

அனைவராலும் விரும்பக்கூடியதொரு பண்டிகையாகவே கிறிஸ்துமஸ் விளங்குகின்றது. அந்தவகையில் சில மக்களின் கொடுமை காரணமாக பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வந்தனர்.

இதன் காரணமாக இக்கொடுமைகளை ஒழிப்பதற்காக ஜெரூஸலத்தில் கன்னி மரியாளுக்கு மகனாக பிறந்தவரே யேசுநாதர் ஆவார்.

இவர் மக்களுக்காக பல நல்ல கருத்துக்களை போதித்ததோடு சமூகத்தையும் நல்வழிப்படுத்திய ஓர் மாமனிதராவார். அந்த வகையில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டே கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் நாளில் இடம்பெறும் நிகழ்வுகள்

கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான கிறிஸ்துமஸ் தினத்தில் பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெறும்.

அதாவது திருப்பலி, கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகளை பரிமாறுதல், கிறிஸ்துமஸ் மரத்தினை அலங்கரித்தல், கிறிஸ்துமஸ் பாடலினை பாடுதல், விருந்துபசாரங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

மேலும் கிறிஸ்துமஸ் நாளிற்கு ஒரு வாரத்திற்க்கு முன்பதாகவே கிறிஸ்துமஸ் மரங்கள் அலங்கரித்து காட்சியளிக்கும். இந்நாளில் அயலவர்களுக்கு உதவுதல், உறவினர்களின் வீட்டிற்கு செல்லுதல் என பல நல் நிகழ்வுகள் நடந்தேறுவது சிறப்பிற்குரியதாகும்.

12 நாள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இன்று வெகு விமர்சையாகவே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் இப்பண்டிகை இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் டிசம்பர் 25ம் திகதி முதல் ஜனவரி 6ம் திகதி வரை 12 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதனை எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது.

இந்நாளில் பல்வேறு பரிசுகள் கிடைக்கப்பெற்று சிறப்பாக கொண்டாடி வருகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது.

கிறிஸ்துமஸ் பரிசு

கிறிஸ்துமஸ் தினத்தில் ஒருவெருக்கொருவர் பரிசுப்பொருட்களை வழங்குதல் சிறப்பானதாகும்.

அதாவது கிறிஸ்தவ பரிசுத்த வேதத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி உலகை உய்விக்க பிறந்துள்ள பரிசுத்த அன்னை மரியாளின் புதல்வாரன குழந்கை இயேசுவை கண்டு தரிசிப்பதற்காக மூன்று ராஜாக்கள் வந்ததோடு அவர்கள் இயேசுவை வணங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கொண்டுவந்த பொக்கிஷங்களை திறந்து பொன்னையும், பொருளையும் பரிசுகளாக வழங்கினர். இதன் காரணமாகவே கிறிஸ்துமஸ் நாளில் பரிசுகள் வழங்கப்படுகின்றது.

மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா அறிமுகப்படுத்தப்பட்டு அவர் மூலமாக பரிசுகள் இந்நாளில் வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

கிறிஸ்துமஸ் நல் நாளானது அனைத்து கிறிஸ்தவர்களுடைய வாழ்விலும் ஓர் சிறப்புமிக்க நாளாகவே திகழ்கின்றது.

மேலும் இந்நாளில் பல நல் விடயங்களும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருவதோடு அனைவரையும் ஒன்றிணைக்கும் ஓர் நல் நாளாகவும் காணப்படுகின்றது. அத்தோடு மேற்குலக நாகரீகத்தின் வளர்ச்சியின் காரணமாக இன்று கிறிஸ்துமஸ் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

You May Also Like:

பொறுமை பற்றிய கட்டுரை

சுத்தம் சுகம் தரும் கட்டுரை