தாயுமானவர் வரலாறு

thayumanavar history in tamil

சமயப் பொதுமை உணர்த்திய அடியவர்களுள் தாயுமானவரும் ஒருவர் ஆவார். இவர் உலகிற்கு முதன் முதலில் சமரச சன்மார்க்கத்தை அறிமுகம் செய்தார். இவரது பாடல்கள் “தமிழின் உபநிடதங்கள்” எனவும் அழைக்கப்படுகின்றன.

பிறந்த ஊர்திருமறைக்காடு (வேதாரண்யம்)
காலம்18ம் நூற்றாண்டு
தந்தைகேடிலியப்பர்
தாய்கெஜலட்சுமி அம்மையார்
மனைவிமட்டுவார் குழலி
மகன்கனகசபாபதி
முக்தி பெற்ற இடம்இராமநாதபுரம் – இலட்சிபுரம்
நூல்கள்பராபரக்கண்ணி, தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
சிறப்பு பெயர்தமிழ்சமய கவிதையின் தந்தை

ஆரம்ப வாழ்க்கை

திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியுள்ள இறைவனிடம் தினமும் குழந்தைப்பேறு வேண்டியதன் பலனாக இவர் பிறந்தமையால் இவருக்கு “தாயுமானவர்” என பெற்றோர் பெயர் சூட்டினர்.

5 வயதாகும் போதே இவருக்கு வித்தியாரம்பம் செய்து இவரது கல்வி நடவடிக்கைகளை இவரது பெற்றோர் ஆரம்பித்து வைத்தனர். தாயுமானவர்க்கு முதல் குருவாக “சிற்றம்பல தேசிகர்” கிடைக்கப் பெற்றார்.

தமிழிலும், சமஸ்கிருதத்திலும், கணித சாஸ்திரத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் நிபுணராக தாயுமானவர் காணப்பட்டார்.

செப நூல்களான தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், திருப்புகழ் என்பவற்றை சிறப்புறக் கற்றார்.

சிறுவயது முதலே தெய்வ பக்தி மிகுந்தவராக காணப்பட்ட தாயுமானவர், தினமும் மலைக்கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதும் திருவானைக்காவுக்கு சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதுமாக காணப்பட்டார்.

ஒரு நாள் மலைக்கோட்டையில் இவர் சிவ தரிசனம் முடித்துவிட்டு மலையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, இடைவழியில் மகா முனிவர் ஒருவர் நிற்பதைக் கண்டார்.

அவரைக் கண்டதும் காந்தம் ஊசியை கவர்வது போல தாயுமானவர் அம்முனிவரால் கவரப்பட்டார். அவருக்கு சீடராக தாயுமானவர் மாறினார். அம்முனிவர் அவசியம் ஏற்படின் மாத்திரமே வாய் திறந்து ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசினார். மற்றைய நேரங்களில் அமைதியாக காணப்பட்டார். இதனால் தாயுமானவர் இவரை “மௌனகுரு” என அழைத்தார்.

தாயுமானவர் ஆத்ம சாதனைகளில் அதிவேகமாக முன்னேற்றமடைந்து வந்தார். ஆழ்ந்த தியானம் செய்தல் தனது குருவிடம் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொள்ளல் மற்றும் பக்தி பூர்வமாக பணி விடைகளையும் செய்து வந்தார்.

பணி

கேடிலியப்பரின் மறைவுக்குப் பின்னர், தாயுமானவரின் ஞானத் தெளிவு, பொறுப்பு, நேர்மை, ஆகியவை விஜயநகர சொக்கநாத மன்னரைக் கவர்ந்தன. மன்னர் வேண்டுதலுக்காக சில காலம் அரண்மனையில் பெருங்கணக்கராகப் பதவி வகித்தார்.

அவ்வேளையில், சொக்கநாதர் மன்னர் உயிரிழந்தார். மன்னர்க்கு மகப்பேறு ஏதும் இல்லாத காரணத்தால் மன்னரின் மனைவி அரசி மீனாட்சி அம்மை செங்கோல் பூண்டு ஆட்சி செய்தார்.

மீனாட்சி அம்மையின் ஆட்சிக் காலத்தில், ஒருநாள் தாயுமானவர் கணக்கு பார்த்து கொண்டிருந்த வேளை, திடீரென கையில் இருந்த கணக்கோலைகளை கசக்கி எறிந்தார்.

அருகில் இருந்த அமைச்சர்கள் “என்னவாயிற்று? ஏன் இவ்வாறு செய்தீர்கள்?” என வினவிய போது, திருவானைக திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் கோயிலில் அம்பாளின் ஆடையில் தீப்பற்றியதாகவும், அதை அணைக்க முயன்றதாகவும் கூறினார்.

அமைச்சர்கள் இவரை ஐயத்துடன் பார்த்தனர். இச்செய்தி அரசியாரின் காதிற்கு எட்டியது.

அது சம்பந்தமான விசாரணை நடத்திய போது, அவ்வேளை அம்பாளின் ஆடையில் தீப்பற்றியதாகவும் அதை நீண்டநேரம் கஷ்டப்பட்டு அணைத்ததாகவும் சிவாச்சாரியார்கள் கூறினார்.

இதனை கேள்வியுற்ற அனைவரும் தாயுமானவரின் ஞானத்தை கண்டு வியந்தனர். “இவ்வாறான ஞானமுள்ள ஒருவன் இந்நாட்டை ஆட்சி செய்தால் அந்நாடு சிறப்புற்று காணப்படும்.” என எண்ணிய மீனாட்சி அம்மை தாயுமானவரை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த கணக்காளர் பணியை திறந்து தலைமறைவாக புண்ணிய தலங்களை தரிசிக்க பயணமானார்.

திருமணம்

நீண்ட கால புண்ணியதல தரிசனத்தில் ஈடுபட்ட தாயுமானவரை அவரது சகோதரர் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஊரிற்கு அழைத்து வந்து மட்டுவார்குழலி எனும் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு கனகசபாபதி என நாமம் சூட்டி வளர்த்தனர்.

துறவு வாழ்க்கை

1762 ஆம் ஆண்டு மட்டுவார்குழலி அம்மை இறந்து விட கனகசபாபதியை அவரது தமையனாரிடம் ஒப்படைத்துவிட்டு முறைப்படி துறவறம் பூண்டார். அத்துடன் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

You May Also Like :
ஆதி சங்கரர் வரலாறு
மாசாணி அம்மன் வரலாறு