ஆதி சங்கரர் வரலாறு

adi shankaracharya history in tamil

தர்மத்தை நிலைநாட்ட பரமேஸ்வரன் உருவெடுத்த உருவமே சங்கரர் என்னும் மகான் ஆவார். அவ்வகையில் இந்தியாவில் தோன்றிய மகான்களில் சீரும் சிறப்பும் மிக்கவரே சன்மத பிரதித்தாபகரான சங்கரர். இவரின் அவதார காலம் காஞ்சி மகா பெரியவரால் பரம புண்ணிய காலம் என வர்ணிக்கப்படுகின்றது.

பிறப்பு 7 ஆம் நூற்றாண்டு
பிறந்த இடம் கேராள மாவட்டத்தில் உள்ள
“காலடி” எனும் கிராமம்
தந்தைசிவகுரு
தாய்ஆரியம்பாள்
குருகோவிந்தபாதர்

சங்கரரின் அவதார வரலாறு

கேரளமாவட்டத்தில் எர்ணாகுளத்தின் அருகே ஆரியம்பாள் சிவகுரு என்ற இருவரும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் குழந்தை பாக்கியம் இன்றி திருச்சூர் வடக்கு நாதரை வழிபட்டு கடுமையான நோன்பு நோற்றனர்.

அப்போது சிவகுருவின் கனவில் தோன்றிய இறைவன் உனக்கு அனைத்து கலைகளும் உடைய ஆயுள் குறைவுடைய குழந்தை வேண்டுமா இல்லை நீண்ட ஆயுளை உடைய குறை அறிவுடைய குழந்தை வேண்டுமா என்று வினவ அவர் எனக்கு அறிவுடைய குழந்தை வேண்டும் எனக் கூற இறை அருளால் இறைவனே அவரின் மகனான சங்கரராக பூமியில் அவதரித்தார்.

சங்கரரின் இளமைக் கல்வி

இளமை பிராயக் கல்வியையும் வேதாந்த தத்துவங்களையும் கொளடபாதரின் சீடரான கோவிந்தபாதரிடம் கற்றார். இதனால் சங்கரர் “சங்கர பகவத்பாதர்” என்று அழைக்கப்பட்டார்.

சங்கரர் குழந்தையாக இருக்கும் போது அவரை சுற்றி நாகம் ஒன்று சிறிது நேரம் விளையாடியமையாகவும் அது சிறிது நேரத்தில் விபூதியாகவும் உருத்திரமாகவும் மாறியமையாலும் உடலில் சிவசின்னங்கள் காணப்பட்டதன் காரணமாகவும் அவருக்கு அவரின் பெற்றோர்கள் சங்கரர் என்ற பெயரை சூட்டினர்.

சங்கரர் செய்த அற்புதங்கள்

  • இரண்டு வயதிலேயே எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டமை.
  • படிக்காமலேயே காவியம் அனைத்தையும் அறிந்தார்.
  • தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தமை.
  • தாயின் தேவைக்காக பூர்னா நதியை திசை திருப்பி ஓடச் செய்தமை.
  • முதலை வடிவம் கொண்ட சந்திரனை சாபவிமோசனம் பெறச் செய்தமை.
  • தாய்க்காக கிருஸ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தமை.
  • தாயின் ஈமக்கிரியைகளை செய்ய தானே நெருப்பு உருவாக்கியமை.
  • வியாச முனிவரால் ஆயுள் கூடப்பெற்றமை.
  • தன் மாணவர்களுக்காக வென்னீர் ஊற்றை உருவாக்கியமை.
  • சரஸ்வதியை அவரின் ஆணைப்படி பூமியில் வாழ வைத்தமை.
  • கொல்லூரில் இறந்த புதல்வனை உயிர்ப்பித்தமை.
  • அந்தணரின் ஊமை மகனை பேச வைத்தமை.
  • காஷ்மீரில் உள்ள அன்னை சாரதா தேவியின் ஆலயத்திற்கு தெற்கு வாசலின் ஊடாக கோயிலினுள் சென்றமை.
  • காமாட்சி அம்மனின் அகோர நிலையை கலைந்து சாந்த நிலையைக் கொடுத்தமை.
  • மூகாம்பியின் மூலம் கசாயம் பெற்று காய்ச்சல் நீங்கப் பெற்றமை.

சங்கரரின் திறமைகள்

கற்று உணர்ந்த எல்லாவற்றையும் அனைவருக்கும் எளிமையான முறையில் எடுத்துக் கூறும் திறனை கொண்டு காணப்பட்டார். மாற்றுக்கருத்துக்களையும் முழுமையடையாத சித்தாந்தங்களக்கு எதிராக வாதம் செய்யும் திறனைக் கொண்டு காணப்பட்டார். அத்வைத கருத்துக்களை நிலைபெற வைக்கும் திறனைக் கொண்டு காணப்பட்டார்.

சங்கரர் காசி விஸ்வநாதரின் தரிசனம் செய்த சந்தர்ப்பம்

ஒரு நாள் கங்கையில் நீராடி விட்டு காசி விஸ்வநாதரையும் தரிசித்து விட்டு சங்கரர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன் உருவில் காசி விஸ்வநாதன் அவர் முன் தோன்றினார்.

அவரைப் பார்த்த சங்கரர் சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்கு சண்டாளன் சிரித்துக் கொண்டை “விலகிப் போக சொல்கிறீர் இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா? தாங்களோ எல்லோருக்கும் இரண்டு வேறல்ல என்ற தத்துவத்தை போதித்து வருகின்றீர்கள் வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் வந்தது?” என்று வினவினார்.

இதைக்கேட்ட சங்கரர் அவரின் ஆத்ம நிலையை அறிந்து அவரின் காலில் விழ உடனே சண்டாளன் மறைந்து போய் விஸ்வநாதர் காட்சி கொடுத்து வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதும் படி கூறினார்.

வியாசரால் சங்கரர் நீண்ட ஆயுளைப் பெற்ற சந்தர்ப்பம்

சங்கரர் எழுதிய பிரம்ம சூத்திரத்தின் உரையை சரியானதா என சோதிக்க முதியவர் வடிவில் வந்த விஸ்வாமித்திரர் அதனை சோதித்து உலகுக்கு பிரசாரம் செய்யும்படி கூற சங்கரர் தனக்கு ஆயுள் முடிந்து விட்டது தன் உடலை கங்கையில் உள்ள மணிகர்ணிகா நதிக்கரையில் தம் உடலை தியாகம் செய்யப்போவதாக கூற அதற்கு வியாசர் உலக நன்மைக்காக நீ வாழ வேண்டும் நீ இன்னும் 16 வருடம் மேலும் வாழ்வாயாக என்று அருளினார்.

கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் இறந்த பாலகனை உயிர்பித்த சந்தர்ப்பம்

சங்கரர் கேகர்ணம் ஹரிபுரம் முதலிய இடங்களில் யாத்திரை செய்து பின் கொல்லூர் மூகாம்பிகை தலத்தை அடைந்தார். அங்கு தமது ஒரே புதல்வன் இறந்து போய் இருந்த வேளையில் அச்சடலத்தை மடியில் வைத்து கொண்டு வருந்தும் வேளையில் சங்கரர் மனம் உருகி இறைவனை வேண்ட அக்குழந்தை உயிர் பெற்று எழுந்தார்.

ஊமை மகளை பேச வைத்த சந்தர்ப்பம்

சிறீவாடியில் கடவுள் பக்தியுள்ள அந்தணர் தன் மகனை அழைத்துக் கொண்டு சங்கரரிடம் வந்தார்.

அவரிடம் எனது மகன் ஊமை மட்டுமல்ல மூலை வளர்ச்சி இன்றியும் காணப்படுகின்றான் என்று கூறி தாங்கள்தான் குணப்படுத்த வேண்டும் என்று கூற சங்கரர் அச்சிறுவனைப் பார்த்து நீ யார்? என்று வினவ அவர் அதற்கு நான் ஜடமில்லை, சிதீஸ்வரூபி என பதிலளித்தார். அதன் பின் அவருக்கு 12 சுலோகங்களையும் ஆத்ம தத்துவத்தையும் விளக்கினார்.

சாரதா பரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்த சந்தர்ப்பம்

சங்கரர் சிறுங்கேரிக்கு வந்த சந்தர்ப்பத்தில் நிறை மாத கர்ப்பிணியாக ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும் போது ஒரு நாகப்பாம்பு தலையால் குடை பிடித்து அந்த தவளையை காப்பாற்றிய அக்காட்சியை கண்ட சங்கரர் அவ்விடம் சக்தி வாய்ந்தது எனக்கருதி உபயபாரதியை வனதுர்க்கா மந்திரத்தால் இவ்விடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க செய்ய வேண்டும் எனக்கருதி அதன்படியே அவருக்கு ஓர் ஆலயம் அமைத்து பிரம்ம ஸ்வரூபிணியாக சாரதா பரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.

அத்வைத தத்துவத்தைப் பரப்புதல்

அத்வைத தத்துவத்தை பரப்புவதற்காக நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார். அவரின் நான்கு முக்கிய சீடர்களுமே இம்மடத்திற்கு தலைமை தாங்கினர்.

கிழக்கே பூரி ஜெகந்நாத்தில் ரிக்வேத ப்ரதானமாக கோவர்த்தன மடத்தை நிறுவி அதன் பீடாதிபதியாக பத்மபாதரை நியமித்தார்.

தெற்கே சிருங்கேரியில் யசூர் வேத மடம் ஒன்றை நிறுவி சுரேஸ்வரச்சாரியாரை பீடாதிபதியாக்கினார்.

மேற்கே துவாரகையில் சாமவேத பிரதானமாக ஒரு மடம் நிறுவி‌ ஹஸ்மாலாகாவை பீடாதிபதியாக நியமித்தார்.

வடக்கே பத்திரியில் அதர்வண வேதம் பிரதானமாகக் கொண்ட ஜோதிட மதத்தை நிறுவி தோடகாச்சாரியாரை பீடாதிபதியாக நியமித்தார். இவ்வாறு நான்கு திசைகளிலும் அவர் அத்வைத கருத்துக்களை பரப்பினார்.

சங்கரரின் சீடர்கள்

  • சனந்தனன்
  • கிரி
  • பத்மபாதர்
  • சுரேஷ்வரச்சாரியார்
  • ஹஸ்மாலகா
  • தோயகாச்சாரியார்

சங்கரரின் முதல் சீடர் பத்மபாதர் ஆவார்.

சங்கரர் விளக்கவுரை எழுதிய நூல்கள்

  • பத்து உபநிடதங்கள்.
  • விஸ்ணு சஹஸ்ரநாமம்
  • பிரம்ம சூத்திரம்
  • பகவத்கீதை

இவர் இயற்றிய நூல்கள்

  • சிவானந்த லகரி
  • கோவிந்ததாஷ்டகம்
  • விவேக சூடாமணி
  • உபதேச சாஹஸ்ரி
  • சுப்பிரமணிய புஜங்கம்
  • பஜ கோவிந்தம்
  • சித்தாந்த சாத்திரம்
  • ஆத்மபேதம்
  • கனகதார ஸ்தோத்திரம்

சங்கரரின் இறப்பு

இவ்வளவு அற்புதங்களையும் சேவையும் செய்த சங்கரர் 32 வது வயதில் சிவதூதர்கள் மாரி பொழிய சிவலோகம் சென்றார். அவர் இறந்த பின் அவர் வாழ்ந்து மறைந்த இடத்தில் சிறீ சங்கராச்சாரியார் கைவல்யதாமா என்ற பெயரில் ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாறு சிறப்புற வாழ்ந்த சங்கரரின் வாழ்க்கை வரலாற்று நாமும் கற்று பேறுபெறுவோம்.

You May Also Like :
உலக பொதுமறை திருக்குறள்
வள்ளலார் வாழ்க்கை வரலாறு