திருக்குறளின் சிறப்புகள் கட்டுரை

Thirukkural Sirappu Katturai In Tamil

இந்த பதிவில் தமிழர்களின் பொக்கிஷமான “திருக்குறளின் சிறப்புகள் கட்டுரை” பதிவை காணலாம்.

உலகத்திலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்றாகும். 107ற்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. திருக்குறள் காலம்
  3. திருவள்ளுவர்
  4. திருக்குறளின் சிறப்பு பெயர்கள்
  5. திருக்குறளின் சிறப்புகள்
  6. முடிவுரை

முன்னுரை

உலகப் புகழ்பெற்ற நூல் தான் திருக்குறள் ஆகும். அது மட்டுமன்றி தமிழில் உள்ள நூல்களிலேயே திருக்குறள் தனக்கெனத் தனிச் சிறப்பிடத்தைப் பெற்ற நூல் ஆகும்.

மனித வாழ்விற்கு தேவையான கருத்துக்களை எந்த காலத்திற்கும் ஏற்றாற்போல கூறும் நூல் திருக்குறள் ஆகும்.

திருக்குறள் கூறாத அறக் கருத்துக்களே இல்லை எனும் அளவிற்கு இந்நூலில் உலக மக்களுக்குத் தேவையான அத்தனை அறக் கருத்துக்களையும் கொண்டுள்ள சிறப்புக்குரியது உலகப்பொதுமறை ஆகும். திருக்குறளின் சிறப்பு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

திருக்குறள் காலம்

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்றுவரை சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகளிற்கு மேல் பழமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படுகின்றது.

மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய் தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருவள்ளுவர்

திருக்குறளை இயற்றிய பெருமைக்குரியவர் திருவள்ளுவராவார். திருவள்ளுவரின் பிறப்பு முதலான வரலாற்றை உறுதியிட்டு கூறப் போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அனைவராலும் ஏற்கப்படும் விதத்தில் குறள் வெண்பாக்களாலான செய்யுள்களை இயற்றினார். மொத்தமாக 1330 பாடல்கள் மற்றும் நூற்று முப்பத்தி மூன்று அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

திருக்குறளின் சிறப்பு பெயர்கள்

திருக்குறளானது பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது. அவையாவன

  • முப்பால் நூல்
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • தெய்வமாமறை
  • திருவள்ளுவர்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • தமிழ்மறை
  • பொதுமறை
  • வள்ளுவம்
  • வள்ளுவர் வாய்மொழி
  • வள்ளுவர் வைப்பு
  • வள்ளுவன் வாய்ச்சொல்

திருக்குறளின் சிறப்புகள்

திருக்குறள் தன்னகத்தே பல சிறப்புகளைக் கொண்டு காணப்படுகின்றது. திருக்குறள் மனிதவள மேம்பாட்டுக்கு தேவையான அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை உணர்த்துவதுடன் அதில் உள்ள குறை நிறைகளை நிதானமாகச் சுட்டிக்காட்டி மனித இனத்தை திருத்த முற்படுகின்றது.

திருக்குறள் அனைத்துமே குறள் வெண்பா எனும் வெண்பா வகையைச் சார்ந்தவையாகும். உலகத்திலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்றாகும்.

திருக்குறளுக்கு முதலில் வைத்த பெயர் முப்பால் ஆகும். உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கூறுவதால் இது உலகப் பொது மறை எனப்படுகிறது.

முடிவுரை

திருக்குறளானது தமிழினத்தின் சொத்தாகும். இதனைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்து விட்டால் வானில் உறையும் தெய்வத்திற்கு இணையான நிலையைப் பெற்று விடலாம் என்கின்றது திருக்குறள். திருக்குறள் கூறும் அறக் கருத்துக்களை வாழ்வில் பின்பற்றி உயர்வோமாக.

You May Also Like:
தமிழ் மொழியின் பெருமைகள் கட்டுரை
திருவள்ளுவர் பற்றிய கட்டுரை
காப்பியத்தின் தோற்றம் வளர்ச்சி கட்டுரை