பெற்றோர் மகிழுமாறு செய்ய வேண்டியவை யாவை

உன் பெற்றோர் மகிழுமாறு நீ செய்ய வேண்டியவை

பெற்றோர் மகிழுமாறு செய்ய வேண்டியவை யாவை

பத்து மாதம் வயிற்றிலும், வாழ்நாள் முழுவதும் தன் மனதிலும் நம்மை சுமப்பவள் தாய். நம் சிறுவயதில் தன் தோளிலும் வாழ்நாள் முழுவதும் தன் நெஞ்சிலும் நம்மை சுமப்பவர் தந்தை.

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல் தியாக உணர்வுடன் அர்ப்பணிப்புடன் தங்கள் குழந்தைகளை வளர்க்கின்றனர். தங்களது வாழ்நாள் முழுவதையும் தமது பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கின்றனர்.

இத்தகைய பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த முடியாவிட்டாலும் அவர்களுடைய இறுதி காலம் வரை அவர்களை கண்கலங்காமல் பார்க்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளினதும் தலையாய கடமை ஆகும்.

உன் பெற்றோர் மகிழுமாறு நீ செய்ய வேண்டியவை ஐந்து எழுதுக

  1. பிள்ளைகள் பெற்றோரின் சொல் கேட்டு வளர வேண்டும்.
  2. பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
  3. எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றவர்களின் சம்மதத்துடனும் ஆசியுடன் எந்த ஒரு முடிவையும்  எடுத்தல்.
  4. வயதான காலத்தில் பெற்றோரை பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளினதும் மிகப்பெரிய கடமையாகும்.
  5. வயோதிப காலத்தில் அன்புடனும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
  6. பெற்றோர்களுடன் நேரம் செலவிடுங்கள்.
  7. அனுப்புடனும் கனிவுடனும் பேசுங்கள்.
  8. எப்போதும் பெற்றோர்களை மரியாதையுடன் நடாத்துங்கள்.

பிள்ளைகள் பெற்றோரின் சொல் கேட்டு வளர வேண்டும்.

பிள்ளைகள் பிறந்தது முதல் தங்களது சொல் பேச்சைக் கேட்டு வளர வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோருடையதும் ஆசையாகும்.

பெற்றோர்களின் பேச்சை மறுக்காது எப்போதும் அவர்கள் நமது நலனுக்காகவே எல்லா அறிவுரைகளையும் கூறுவார்கள் என்று பிள்ளைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இளவயது கடந்தாலும் எப்போதும் பெற்றோருக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும்.

பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

பிள்ளைகள் விளையாட்டு, கல்வி, இசை, பேச்சு போன்ற ஏதாவது துறைகளில் சாதித்து சிறந்தவர் என்ற பெயரை தம்மை பெற்றவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.

எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றவர்களின் சம்மதத்துடனும் ஆசியுடன் எந்த ஒரு முடிவையும் எடுத்தல்.

பெற்றவர்களின் மனம் மகிழும் படியாக அவர்களின் முழு சம்மதத்துடன் எல்லா முடிவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மேற்படிப்பு, வேலை, வாழ்க்கை துணை, வியாபாரம் போன்றவற்றை தெரிவு செய்தல் போன்ற பல விடயங்களில் நிச்சயமாக பெற்றோரின் முடிவுடன் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பல பிள்ளைகள் இவ்வாறான முடிவுகளை எடுப்பதில் பெற்றோரை சிறிதேனும் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால் அவர்களது அனுபவம் நமக்கு மிக்க உறுதுணையாக இருக்கும்.

எனவே எந்த முடிவு எடுப்பதனாலும் அவர்களுடைய தீர்மானத்தையும் கேட்டுக் கொள்வது மிகச்சிறந்தது.

வயதான காலத்தில் பெற்றோரை பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளினதும் மிகப்பெரிய கடமையாகும்.

ஒரு பெற்றோருக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அத்தனை பிள்ளைகளும் தம்மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு ஆகும்.

பெற்றவர்கள் எவ்வாறு பிள்ளைகள் எல்லோரையும் சமமாக எண்ணுகிறார்களோ அதேபோல பிள்ளைகளும் எல்லோரும் சேர்ந்து பெற்றோர்களை அவர்களுடைய வயோதிப காலத்தில் பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக பெற்றோர்களுக்கு வயோதிப காலத்தில் அவர்களுடன் உடனிருந்து கவனிக்க முடியாவிட்டாலும் அவர்கள் இருப்பதற்கு இடம், உண்பதற்கு உணவு, உடுத்த உடை, ஆரோக்கிய தேவைகளுக்கான மருத்துவம் போன்ற அவர்களின் வாழ்வாதாரத்தை பொறுப்பேற்க வேண்டும்.

வயோதிப காலத்தில் அன்புடனும் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக நாம் நமது பெற்றோரில் ஒருவர் இல்லாமல் ஒருவர் மட்டுமே நம்முடன் இருக்கின்றார் எனில் அவர்கள் மீது இன்னும் மேலதிகமாக கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும்.

அவர்களது துணை இல்லாத குறை தெரியாத அளவிற்கு பிள்ளைகள் அன்பினை செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நோய்வாய்ப்படும் வேளைகளில் அவர்களை குழந்தைகள் போல பராமரிக்க வேண்டும்.

You May Also Like:

தாய் பற்றிய கட்டுரை

ஆசிரியர் பணியே அறப்பணி கட்டுரை