நீர் ஆதாரங்கள் யாவை

neer atharangal

நீர் ஆதாரங்கள் யாவை

“நீரின்றி அமையாது உலகு” என்றார் வள்ளுவர். இந்த உலகத்தில் நீர் இல்லாமல் மனிதனால் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மனிதர்கள் மட்டுமன்றி தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இவை அனைத்திற்கும் நீரானது மிகவும் அவசியம் ஆகும்.

நீரின் முக்கியத்துவம் மற்றும் நீர் ஆதாரங்கள்

ஒரு மனிதன் உயிர் வாழ தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய அவனுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 20 தொடக்கம் 30 லீட்டர் நீர் தேவைப்படுகின்றது.

மனிதனுடைய உடலில் நீர் மூலக்கூறானது 70% உள்ளது. நாம் வாழக்கூடிய பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளது.

விவசாயம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தொழில் மற்றும் மனிதனுக்கு தேவையான மின்சார சக்தியை உருவாக்கவும் நீர் பயன்படுகின்றது.

நீரின் ஆதாரங்களை நாம் 5 வகைகளில் வகைப்படுத்தலாம்.

  1. ஆற்று நீர் மற்றும் ஏரி நீர்
  2. கடல் நீர்
  3. நிலத்தடி நீர்
  4. கிணற்று நீர்
  5. ஊற்று நீர்

ஆற்று நீர் மற்றும் ஏரிகள்

ஆற்றில் எப்பொழுதும் நன்னீரே காணப்படும். நன்னீர் ஓடும் பாதையே ஆறு எனப்படும். பொதுவாக இந்த ஆறுகள் மலைப்பகுதிகளில் இருந்தும் குன்றுகளில் இருந்தும் உருவாகின்றன.

இறுதியில் இந்த ஆறு கடலில் சங்கமம் ஆகின்றது. மனிதர்கள் தங்களது பயன்பாட்டிற்காக அந்த நீரைத் தேக்கி வைத்து விவசாயத் தேவைகளுக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

கடல் நீர்

மலைக்குன்றில் உருவாகும் ஆற்று நீர் இறுதியாக கடலினுள் சங்கமம் ஆகின்றது. இந்தக் கடல் நீரானது பொதுவாக மனித தேவைகளுக்கு பயன்பாடு அற்றது. ஏனெனில் இந்த நீரானது முற்றிலும் உப்புத் தன்மையானதாக காணப்படும்.

நிலத்தடி நீர்

வேகமாக மழை பெய்யும் போது அந்த மழை நீரானது பள்ளமான இடங்களில் தேங்கி நிற்கும் சில நேரங்களில் பள்ளமான இடங்களை நோக்கி வழிந்தோடும். ஓடமுடியாத மழை நீர் அந்த இடத்திலேயே நிலத்தின் கீழ் நோக்கி ஈர்ப்பு சக்தியால் கீழ் உறிஞ்சப்படுகின்றது.

நாம் வாழும் நிலமானது மண் அடுக்குகளால் ஆனது. அடுக்குகளுக்கு இடையில் உள்ள பாறை இடுக்குகளில் இந்த கீழிறங்கிய மழை நீர் சேகரிக்கப்படுகின்றது. இந்த இடங்களுக்கு நேரே இருக்கும் மரங்கள் மிகுந்த செழிப்புடன் வளரும்.

கிணற்று நீர்

நாம் ஒரு கிணற்றினை வெட்டும் போது நிலத்தடியில் சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீர் கிணற்றின் சுவர் வழியே வந்து சேரும். நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீர் போன்றன எப்போதும் சுத்தமானதாகவே காணப்படும்.

இந்த நீர் எப்போதும் மண்ணினால் வடி கட்டப்பட்டு சுத்தமானதாகவே காணப்படும். இந்த நீர் குடிப்பதற்கு மிக மிக ஏற்றதாகும். இவை தவிர விவசாயத்தேவைகள், வீட்டுத் தேவைகளுக்கு பயன் மிக்கதாக அமையும்.

ஊற்று நீர்

பெரிய மழை பெய்யும் போது பாறைகளிற்கு இடையில் தேங்கி நிற்கும் இந்த தண்ணீரானது நாளுக்கு நாள் பாறைகள் அழுத்தம் கொடுக்கும் போது அந்தப் பாறைகளுக்கு இடையில் இருந்து ஊற்றெடுக்க ஆரம்பிக்கும். இந்த ஊற்று நீரில் அதிக தாது உப்புக்கள் நிறைந்து இருக்கும்.

நீர் பாதுகாக்கும் முறைகள்

தொழிற்சாலைகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்றவற்றை நீர் நிலைகளில் கலக்க விடாமல் மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல்.

மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்த நீர்ப் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்குதல்.

You May Also Like :

மழை நீர் உயிர் நீர் கட்டுரை

நீர் மேலாண்மை கட்டுரை