கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

kannadasan history in tamil

இந்த பதிவில் “கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு” கட்டுரை பதிவை காணலாம்.

கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

அறிமுகம்

காலத்தால் அழியாத⸴ அழிக்க முடியாத பாடல்களையும்⸴ கவிதைகளையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் ஆவார். பாடல்கள் மட்டுமன்றி பல புத்தகங்களையும் நமக்காக அளித்தவர்.

ஜேசு காவியத்தையும் படைத்தவர். அதுமட்டுமல்லாது அர்த்தமுள்ள இந்து மதம் என்கின்ற ஒரு மாபெரும் படைப்பையும் படைத்தவர் ஆவார். திறந்த புத்தகத்தை போல் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன்.

சரியெனப் பட்டதைச் செய்யத் தயங்கியதும் இல்லை அதேபோல் தவறெனப் பட்டதை ஒப்புக்கொள்ளவும் தயங்கியதுமில்லை.

வாழ்க்கைக் குறிப்பு

சிறுகூடல் பட்டியில் 1927ஆம் ஆண்டில் சாத்தப்பன் செட்டியார்⸴ விசாலாட்சி தம்பதியினருக்கு எட்டாவது மகனாக தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி எனும் ஊரில் பிறந்தார்.

இந்து மதத்தில் வணிகர் செட்டியார் மரபில் பிறந்தவராவார். இவரது இயற்பெயர் முத்தையா. சிறுவயதிலேயே பழனியப்பன்⸴ செட்டியார் எனும் தம்பதியினர் 7000 ரூபாவிற்கு தத்தெடுத்துக் கொண்டனர்.

இங்கு இவருக்கு சூட்டப்பட்ட பெயர் நாராயணன் ஆகும். கண்ணதாசன் என்ற பெயர் இடையிட்டு வந்த பெயராகும்.

ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியில் பயின்றார். இவர் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். ஆனால் சிறு வயதிலேயே எழுத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார்.

கண்ணதாசன் அவ்வப்போது கவிதைகள் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சினிமாத் துறையில் ஆர்வமும் இவருக்கு வந்தது. 16 ஆவது வயதில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார்.

ஆனால் பல கசப்பான அனுபவங்கயே சினிமா அவருக்கு தந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் உதவியாளராகச் சேர்ந்து கதை எழுதத் துவங்கினார்.

கண்ணதாசனின் முதற் கவிதையான “நிலவொளியில் தென்றல்ˮ என்ற கவிதை கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவர் 3மனைவிகள் மற்றும் 15குழந்தைகள் என வாழ்ந்தவர் ஆவார்.

இலக்கியப் படைப்புக்கள்

காப்பியங்கள்

  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • இயேசு காவியம்
  • ஐங்குறுங்காப்பியம்
  • கல்லக்குடி மகா காவியம்
  • கிழவன் சேதுபதி
  • பாண்டிமாதேவி
  • பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை -14
  • மலர்கள்
  • மாங்கனி
  • முற்றுப்பெறாத காவியங்கள்

தொகுப்புகள்

  • கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968
  • கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள்
  • கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை.
  • கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை.
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்

சிற்றிலக்கியங்கள்

  • அம்பிகை அழகுதரிசனம்
  • கிருஷ்ண அந்தாதி
  • கிருஷ்ண கானம்
  • கிருஷ்ண மணிமாலை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி
  • ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம்
  • தைப்பாவை

மொழிபெயர்ப்பு

  • தொகு பொன்மழை
  • பஜகோவிந்தம்

புதினங்கள்

  • அவளுக்காக ஒரு பாடல்
  • அவள் ஒரு இந்துப் பெண்
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • அதைவிட ரகசியம்⸴ ஆச்சி⸴

சிறுகதைகள்

  • ஒரு நதியின் கதை
  • கண்ணதாசன் கதைகள்
  • காதல் பலவிதம் – காதலிகள் பலரகம்
  • குட்டிக்கதைகள்
  • பேனா நாட்டியம்
  • மனசுக்குத் தூக்கமில்லை
  • செண்பகத்தம்மன் கதை
  • செய்திக்கதைகள்
  • தர்மரின் வனவாசம்

தன்வரலாறு

  • எனது வசந்த காலங்கள்
  • வனவாசம்
  • எனது சுயசரிதம்
  • மனவாசம்

சமயம்

  • அர்த்தமுள்ள இந்து மதம் 1 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
  • அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
  • அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
  • அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
  • அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.

கண்ணதாசனின் சிறப்புகள்

எட்டாம் வகுப்பு வரை படித்து இருந்தாலும் இவர் செய்த சாதனைகள் பலவாகும். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்⸴ ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்கள்⸴ நவீனங்கள்⸴ கட்டுரைகள் எனப் பலவற்றையும் படைத்துள்ளார்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்த இவர் “சேரமான் காதலிˮ என்ற சிறந்த வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் “சாகித்திய அகடமிˮ விருது கிடைத்தது.

கவிஞராக மட்டுமன்றி தென்றல்⸴ தென்றல்திரை⸴ முல்லை⸴ கண்ணதாசன் முதலான இதழ்களின் ஆசிரியர் என்ற சிறப்பையும் பெறுகின்றார்.

கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும்⸴ வர்ணிக்கப்பட்டதை படைப்பதிலும் ஆசை அதிகம் என்பதால் தான் இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன்ˮ என்று அவரே விளக்கம் தந்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரால் “காட்டுக்குத் தலைவன் சிங்கம்⸴ கவிதைக்கு தலைவன் கண்ணதாசன்ˮ எனப் போற்றப்பட்டவர் ஆவார்.

கண்ணதாசன் தான் செய்யும் தொழிலைத் தெய்வமாய் மதித்தார். இதனால் தான் கவிதைகளை கூறும் போது காலணிகளை அணிய மாட்டாராம்.

தான் பாடல் இயற்றும் சக்தியை கம்பராமாயணத்திலிருந்து பெற்றேன் என்று கூறுவார். இதுவே இவருக்குப் பிடித்த இலக்கியமாகும்.

இறுதிக்காலம்

தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அவரே உணர்ந்தார். மரணத்தை ரகசியமாய் இறைவன் வைத்திருந்ததால் தான் மனிதன் ஓரளவிற்காவது மனித நேயத்துடன் நடக்கின்றான் என்றார்.

இந்த கவிஞர் வாழ்வில் மிகவும் முக்கியமானது “கˮ என்ற எழுத்துத்தாகும். தான் எழுதிய முதல் வரியில் “கலங்காதே…ˮ என்று “கˮ என்ற எழுத்தில் தொடங்கி “கண்ணே கலை மானே..ˮ என்ற பாடல் “கˮஎன்ற எழுத்தை உபயோகித்துத் தன் கவிதைப் பயணத்தில் முடித்தார்.

உடல்நிலை சுகயீனம் காரணமாக 1986ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24ம் திகதி இவர் மரித்தாலும் இவர் விட்டுச் சென்ற பாடல்களும்⸴ கவிதைகளும் இன்று வரை நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

மணி மண்டபம்

தமிழ்நாடு அரசு காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு கவியரசர் கண்ணதாசனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 நூல்களுடன் ஓர் நூலகமும் இயங்கி வருகின்றது. இவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

கவியரசு கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகள் மூலம் அனைவர் மனதிலும் இன்றளவும் வாழ்ந்து வருகின்றார்.

You May Also Like :
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு
ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு