காமராஜர் வாழ்க்கை வரலாறு

kamarajar history in tamil

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தும், சாகும்வரை வாடகை வீட்டிலும் , ஒரு சில ஆடையினையும், தனது வங்கிக் கணக்கில் சொல்லிக் கொள்ளும் அளவில் கூட வைப்புத் தொகை இல்லாமல், தனது அரசியல் வாழ்க்கையை முழுமையாக மக்களுக்காக செலவளித்த தலைவராக கர்மராஜர் காணப்படுகிறார்.

இவரது ஆட்சிக்காலம் இந்திய மக்களது பொற்காலமாக திகழ்ந்தது. பாடசாலையில் மதிய உணவுத் திட்டம், மக்களுக்கான தொழில்முறை வேலைவாய்ப்பு என பல நன்மைகளை வாரி வழங்கிய கல்விக் கண் திறந்த ஆட்சியாளராக காணப்படுகிறார்.

இயற்பெயர்காமாட்சி
மருவிய பெயர்காமராஜர்
பிறப்பு1903 ஜூலை 15
பிறந்த இடம்விருதுநகர், தமிழ்நாடு
தாய்சிவகாமி அம்பாள்
தந்தைகுமாரசாமி நாடார்
விருதுபாரத ரத்னா (1976)
சிறப்பு பெயர்கள்தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கர்மவீரர், பெருந்தலைவர்
இறப்பு1975 அக்டோபர் 2

கல்வியும் ஆரம்ப வாழ்க்கையும்

காமராஜர் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை அவரது சொந்த ஊரான விருதுநகரில் உள்ள “சத்ரிய வித்யா சாலா” என்ற பள்ளியில் பயின்றார். இவர் படிக்கும் போதிருந்தே விட்டுக் கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோரிடமும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களுடன் காணப்பட்டார்.

இவர் பள்ளி செல்ல ஆரம்பித்த சிறிது காலத்திலேயே இவரது தந்தை மரணத்தினால் இவரது பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போனது. இருப்பினும், இவரது தாயார் இவரை கஷ்டப்பட்டு வளர்த்தார்.

அவரது தாயார் படும் கஷ்டங்களைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் கல்வி படிப்பை நிறுத்திவிட்டு, தனது மாமாவின் துணிக்கடைக்கு வேலைக்கு சென்றார்.

சிறை வாழ்க்கை

தனது மாமாவின் துணிக்கடையில் வேலை புரிந்து கொண்டிருந்த காமராஜர், அங்கிருக்கும்போது, “பெ.வரதராசுலு நாயுடு” போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார்.

தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரஸின் உறுப்பினராக மாறினார். ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார் அதற்காக காமராஜர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்த ஆண்டே காந்தி உட்பட அனைவரும் “இர்வின்” ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் 1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார்.

சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார். ஒன்பது மாதங்களுக்குப் பின், விடுதலை பெற்று வெளியே வந்ததும் நேராக சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

பதவிக்கு நேர்மையாகவும், முழுமையாகவும் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

மொத்தமாக இவரது வாழ்நாளில் 9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகிறது.

தேசிய தலைவர்

இவர் 1953 இல் தமிழ் புத்தாண்டு அன்று முதன் முதலில் தனது முதல்வர் பதவியை ஏற்றார். மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த இவர் பதவியை விட மக்களின் முன்னேற்றமும் மற்றும் கட்சியின் முன்னேற்றத்தின் வளர்ச்சியையும் மனதில் வைத்துக் கொண்டு தனது முதல்வர் பதவியினை சிறப்புற மேற்கொண்டார்.

மதிய உணவு திட்டம்

ஒருமுறை தனது அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் மாணவர் வரவு எண்ணிக்கை வீழ்ச்சி குறித்து அமைச்சர்களிடம் பேசினார். அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார்.

மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் மதிய உணவு அளித்தால், கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார்.

அத்துடன் குலக்கல்வி திட்டத்தை கைவிட்டார். தமிழகத்தில் மூடியிருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கிராமங்களில் ஆரம்பிக்கப் செய்து, அவரே சென்று திறந்து வைத்தார்.

தொழில்துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டு இளைஞர்கள் படித்து முடித்தபின் வேலை செய்ய வேண்டும் என்ற தனது முற்போக்கு சிந்தனைகளின் படி பல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்தார்.

அந்த வகையில், நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், கல்பாக்கம் அணு மின் நிலையம், ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, சேலம் இரும்பு உருக்கு ஆலை, பாரத மிகு மின் நிறுவனம், ரயில் பெட்டி தொழிற்சாலை நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.

தமிழக அணைகள்

மின்சாரம் மற்றும் நீர்வளத்துறைகள் மீது நாட்டம் கொண்டிருந்த காமராஜர் அந்தத் துறையிலும் பல வியக்கத்தக்க திட்டங்களை கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

அதில் சில திட்டங்கள் மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானித்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களை சரிவர செய்துள்ளார்.

You May Also Like:
வாணிதாசன் வாழ்க்கை வரலாறு
பாரதியார் பற்றிய கட்டுரை தமிழ்