பொல்லான் வரலாறு

pollan history in tamil

இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக மாவீரன் பொல்லான் அவர்கள் காணப்படுகிறார்.

தீரன் சின்னமலையான் அவர்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பினும் அவரது படைத்தளபதியாக இருந்து பாரிய உதவிகளையும் அர்ப்பணிப்புகளையும் புரிந்த பொல்லான் பற்றி பல மக்கள் இன்றும் அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர்.

பல ஆங்கிலேய வீரர்களை எதிர்த்து புறமுதுகிட்டு ஓடச்செய்த மாவீரன் பொல்லான் பற்றி இக்கட்டுரையில் நோக்குவோம்.

பொல்லான் வரலாறு

ஆரம்ப வாழ்க்கை

ஈரோடு அரச்சலூர் பகுதியின் நல்லமங்காபாளையம் எனும் கிராமத்தில் பிறந்தார். இவர் சிறுவயது முதலே மற்போர், வாள், வில் பயிற்சிகளில் ஆர்வம் செலுத்தி அவற்றை சிறப்புற பயின்று அவ்வித்தைகளிலே கைதேர்ந்தவராக காணப்பட்டார்.

ஆறரை அடி உயரத்திற்கு மேலான கம்பீர தோற்றத்தின் உருவாக காணப்பட்டவர். அவரது வீரத்தையும், தோற்றத்தையும் கண்ணுற்ற தீரன் சின்னமலை பொல்லானை தனது படையில் சேர்த்துக் கொண்டார்.

பொல்லான் தனது திறமை ஆற்றல் என்பவற்றை மேலும் அதிகரிக்க செய்து அர்ப்பணிப்புடனும் அறிவுப் பூர்வமாகவும் செயலாற்றி வெகு விரைவில் படைத்தளபதியாகவும் தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராகவும், ஒற்றர்கள் படைத்தளபதியாகவும் ஆனார்.

போர்கள்

1801ம் வருடம் பாவானியில் நடைபெற்ற காவிரி கரையோர போர், 1802 ம் ஆண்டு நடைபெற்ற சென்னிமலை போர், 1803 ம் ஆண்டு நடைபெற்ற அரச்சலுார் போர் ஆகிய மூன்று போர்களிலும் ஆங்கிலேயரை எதிர்த்து தீரன் சின்னமலையான் பொல்லானின் போர் உத்திகளின் உதவியுடன் வெற்றி பெற்றார்.

தீரனது வெற்றிகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக இருந்தவர் தளபதி பொல்லான் ஆவார்.

இவர் ஒற்றனாக ஆங்கிலப்படைக்குள் ஊடுருவி ஆங்கிலேயர்களின் போர்த்தந்திரங்கள், அவர்கள் திட்டங்கள், அவர்களின் ஆயுத பலம் என அனைத்தையும் தீரன் சின்னமலைக்கு தெரிவித்தபடியால் எதிரிகளை எளிதில் களம் கண்டு தீரன் சின்னமலையான் வெற்றி பெற முடிந்தது.

பொல்லான் பற்றி அறிந்திராத பல வரலாற்று ஆய்வாளர்கள் எந்தவித பின்னனியும் இல்லாமல் தீரன் சின்னமலை அவ்வளவு பெரிய ஆங்கிலேயர் படையை வெற்றி பெற்றது எப்படி என்பதை இப்போதும் வியப்பதுடன் ஆராய்கின்றனர்.

ஒரு முறை கர்னல் ஹாரிஸ், ஒடாநிலை கோட்டையில் முகாமிட்டு தங்கியிருந்த தீரன் சின்னமலையானை சுற்றி வளைக்க திட்டமிட்டு தீரன் சின்னமலையான் எதிர்ப்பார்க்காத நிலையில் பெரும்படையுடன் முற்றுகையிட்டான்.

இந்த தகவலை பொல்லான் முன்கூட்டியே தீரன் சின்னமலைக்கு தெரிவித்தார். அத்துடன் இம்முறை கர்னல் ஹாரிசை எதிர்ப்பது என்பது நமக்குதான் அதிக உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் ஆகவே கோட்டையை விட்டு தப்பி விடுமாறு பொல்லான் எச்சரிக்கை செய்திருந்தார்.

தீரன் சின்னமலையானும் அப்படியே பொல்லானது கருத்தைக் கேட்டு செயல்பட்டு கோட்டையை விட்டுச் சென்றார்.

பொல்லான் ஆங்கிலேயரிடம் சிக்கியமை

கர்னல் ஹாரிஸ் கோட்டைக்குள் நுழையும் போது கோட்டை வெற்றிடமாக காணப்பட்டது. இதனை கண்டு வியப்படைந்த கர்னல் நாம் வருவது எப்படி தெரிந்தது எப்படி தீரன் சின்னமலையான் முன்னறிவித்தலோடு தப்பியோடினார் என்பது தெரியாமல் குழம்பிப் போனர் கர்னல்.

பின்னர் கோட்டையினுள் பொல்லான் தீரன் சின்னமலையானுக்கு அனுப்பிய துப்பு பற்றிய தடயம் கர்னலுக்கு கிடைத்தது. கடும் கோபமடைந்த கர்னல் பொல்லானை சுற்றி வளைத்துப் பிடிக்க ஆனையிட்டார்.

பொல்லானின் வாள் வீச்சுக்கு பலர் பலியானாலும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொல்லான் ஆங்கிலேய படையினரிடம் சிக்கினார்.

பொல்லானது மரணம்

பொல்லானது மீது கோபத்தின் உச்சத்தில் இருந்த கர்னல் பொல்லானை பலர் பார்க்க ஓடாநிலைக் கோட்டை அருகே உள்ள ஜெயராமபுரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

தனது தலைவரான வீரன் சின்னமலையான் ஆங்கிலேயரிடம் பிடிபடாது தப்பிவிட்டார் என்ற செய்தியே தனக்கு போதுமானது என்ற சந்தோஷத்துடன் தன்னை நோக்கி சராமரியாக வந்த துப்பாக்கி குண்டுகளை மார்பில் ஏந்தி 1805ம் ஆண்டு ஆடி மாதம் 1ஆம் திகதி பொல்லான் இறந்து போனார்.

நினைவு

பொல்லான் வீர வரலாறு மீட்புக் குழு பல ஆண்டுகளாக போராடியதன் விளைவாக முதல்வராக காணப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் வீரன் பொல்லானுக்கான முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஈரோடு அரச்சலூர் நல்லமங்காபாளையமான பொல்லானின் சொந்த ஊரில் கட்டப்பட்டுள்ளது.

You May Also Like:
குயிலி வரலாறு
தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு