நீர் பாதுகாப்பு கட்டுரை

neer pathukappu katturai in tamil

இந்த பதிவில் “நீர் பாதுகாப்பு கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த பூமிக்கு தண்ணீர் கிடைக்கும் மூலங்களில் பிரதானமாக மழை காணப்படுகின்றது.

நீர் பாதுகாப்பு கட்டுரை

நீர் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நீர் மூலங்கள்
  • தண்ணீரின் முக்கியத்துவம்
  • நீர் மாசடைதல்
  • நீர் பாதுகாப்பு
  • முடிவுரை

முன்னுரை

இந்த புவியில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிர்களுக்கும் உயிர் நாடியாக விளங்குவது தண்ணீராகும். எமது பூமி 71 சதவீதம் நீரினால் சூழப்பட்டதாகும்.

இயற்கையின் வரமாக கிடைத்த நீர் வளம் இருப்பதனால் தான் இங்கே உயிர்கள் வாழ முடிகிறது. விவசாயம் எனும் அடிப்படை தொழில் நீரின்றி இடம்பெறாது. எனவே தான் நாம் தண்ணீரை பாதுகாக்க வேண்டும் இதன் வாயிலாக நாம் எமது வாழ்வை பாதுகாத்து கொள்ள முடியும்.

நீர் மூலங்கள்

இந்த பூமிக்கு தண்ணீர் கிடைக்கும் மூலங்களில் பிரதானமாக மழை காணப்படுகின்றது. இதனையே திருவள்ளுவர் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில் தெளிவாக விளக்குகின்றார். அதாவது,

“விசும்பிற்றுழி விழின் அல்லால்
பசும்புற்றலை காண்பதரிது” என்று விபரிக்கின்றார்.

இந்த பரந்த உலகில் சமுத்திரங்களிலும் ஆறுகளிலும் குளங்கள் மற்றும் ஏரிகளிலும் தண்ணீரானது நிறைந்துள்ளது. இவை தான் தண்ணீர் மூலமாக தொழிற்படுகின்றது.

தண்ணீரின் முக்கியத்துவம்

தண்ணீரின் முக்கியத்துவங்கள் எண்ணற்றவையாகும். மனித உடலில் தண்ணீர் இல்லாவிடில் நாம் இறக்க நேரிடும்.

அதுபோலவே தாவரங்களின் நிலவுகைக்கும் தண்ணீர் அவசியம். ஒளித்தொகுப்பு, ஆவியாதல், ஆவியுயிர்ப்பு ஆகியன இடம்பெற்று பூமியில் ஒரு நீரியல் வட்டம் செயற்படாவிடின் பூமியின் அனைத்து செயன்முறைகளும் பாதிக்கப்படும்.

அது மாத்திரமின்றி மனிதனின் அன்றாட தேவைகளான குடித்தல், குளித்தல், கழுவுதல், என பல தேவைகளை நிறைவேற்ற தண்ணீர் பிரதான மூலமாக தொழிற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீர் மாசடைதல்

இன்றைய காலகட்டத்தில் சனத்தொகை அதிகரிப்பு மற்றும் மனித அபிவிருத்தி நடவடிக்கைகளின் விளைவால் நீர் மாசடைதல் அதிகம் இடம்பெற்று வருகின்றது.

நகரங்களில் இருந்து அளவுக்கதிகமான குப்பைகள் அதிகம் நீர்நிலைகளில் கொட்டப்படுகின்றன.

குறிப்பாக நெகிழி கழிவுகள் அதிகம் கடலில் கொட்டப்படுவதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாரிய கழிவுகளை வெளியிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நச்சுப்பொருட்கள் நீரில் கலப்பதனால் நிலத்தடி நீர் கூட மாசடையும் நிலை காணப்படுகின்றது.

மேலும் விவசாய நடவடிக்கைகளில் அதிகளவான சேதன உரங்களை பாவிப்பதனால் நீர்நிலைகள் மாசடைகின்றன.

நீர் பாதுகாப்பு

இன்றைய காலத்தில் நீர்மாசடைதல் அதிகளவில் இடம் பெறுவதனால் இதனை பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலை மனிதர்களுக்கு காணப்படுகின்றது. அதாவது மனிதர்களின் நிலைத்திருப்புக்கு நீரை பாதுகாக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதனால் தான் வள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என்று கூறயுள்ளார். ஆகவே நாம் நீர் நிலைகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

குப்பைகளை நீர் நிலைகளில் போடுவதை தடுப்பதோடு கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முடிவுரை

தண்ணீர் சார்ந்த பிரச்சனைகள் இன்று உலகமெங்கும் ஏற்பட துவங்கியுள்ளன. உலகின் பல நாடுகளும் இன்று வரட்சியை எதிர்கொண்டு வருகின்றன. அவற்றிலும் சில நாடுகளில் குடிநீர் சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இடம்பெற்று வருகின்றன.

உலகில் பல நதிகள் இன்று மாசுக்களால் நிறைந்துள்ளன. ஆகவே நாம் இன்றே நீர் வளத்தை பாதுகாக்க எம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

You May Also Like :
தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கட்டுரை
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை