ஒலி மாசுபாடு பற்றிய கட்டுரை

Oli Masupadu Katturai

இந்த பதிவில் “ஒலி மாசுபாடு பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

ஒலி மாசடைதலானது மனித நலவாழ்வில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஒலி மாசுபாடு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. ஒலி மாசடைதல் எனப்படுவது
  3. உருவாகும் வழிகள்
  4. ஒலிமாசடைவின் பாதிப்புக்கள்
  5. மன அழுத்தமும் ஒலி மாசடைவுகளும்
  6. கட்டுப்படுத்தும் வழிகள்
  7. முடிவுரை

முன்னுரை

ஒலி மாசுபாடானது உலகின் மிகவும் ஆபத்தான மாசடைவாகும். இன்றைய நாட்களில் எமது பூமி அதிகளவில் ஒலி மாசடைதலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த ஒலி மாசடைதலானது ஏனைய மாசடைவுகளான காற்று மாசடைதல், நீர் மாசடைதல், நிலம் மாசடைதல் போன்றனவற்றை போலவே ஆபத்தானதாகும்.

இன்று பறவைகளின் கீச்சு குரல்கள் எல்லாம் ஓய்ந்து எங்கு பார்த்தாலும் பேரிரைச்சல் காணப்படுகிறது. இது பௌதீக சூழலை வெகுவாக பாதிக்கின்றது. இதனால் சூழல் சமநிலையும் பாதிக்கப்படுகிறது.

இக்கட்டுரையில் ஒலிமாசடைதல் எவ்வாறு உருவாகின்றது அதன் பாதிப்புக்கள் என்பன பற்றி நோக்கலாம்.

ஒலி மாசடைதல் எனப்படுவது

ஒலி மாசடைதல் எனப்படுவது பூமியில் இயற்கை தவிர்ந்து வேண்டப்படாத ஒலிகள் நமது சூழலில் அதிகரிப்பதை குறிக்கின்றது. இது மனிதர்களையும் விலங்குகளையும் அசௌகரியமடைய செய்கின்றது.

இந்த ஒலிகளின் அளவு சூழலில் அதிகரிக்கின்ற நிலையினை ஒலி மாசடைதல் என அழைக்கப்படுகின்றது.

மனித நடவடிக்கைகள் மற்றும் உரையாடல்கள் தூக்கம் போன்றவற்றை குழப்புகின்ற ஒரு விடயமாக ஒலி மாசடைதல் பார்க்கப்படுகின்றன. இது கண்ணால் பார்க்கவோ முகரவோ முடியாத ஒரு மாசடைவாகும்.

உருவாகும் வழிகள்

ஒலிமாசடைதல் ஆனது உருவாகும் வழிகளாவன. அதிகளவான போக்குவரத்தும் வாகனங்களது இரைச்சலும் இதனை ஒரு நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைகளின் அருகில் இருக்கும் போது உணர முடியும்.

அத்துடன் வேகமாக இயங்கும் ஆகாய விமானங்கள் இவையும் ஒலிமாசடைவினை ஏற்படுத்துகின்றன.

அவ்வாறே இடைவிடாது இயங்கி கொண்டிருக்கின்ற கைத்தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் இரைச்சல்கள், கட்டட வேலைகள், துளையிடுதல் மரம் அறுத்தல் போன்ற வேலைகளும் கனரக இயந்திரங்களால் உருவாகும் சத்தங்கள் ஒலி மாசடைவை ஏற்படுத்துகின்றன.

ஒலி மாசடைவின் பாதிப்புக்கள்

ஒலி மாசடைதலானது மனித நலவாழ்வில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது. இயற்கையாக இந்த சூழலில் இருக்கின்ற அமைதி கெடுகின்ற போது மனிதனுக்கு பல உடல் சார்ந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகின்றன.

கேட்டல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றும் உயர் குருதியமுக்கம், உயர்வான மனஅழுத்தம், சரியாக தூங்க முடியாத தன்மை, நிறக்குருடு போன்ற பிரச்சனைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. இதனால் தான் இரைச்சல் மிகுந்த நகர வாழ்க்கையை மனிதர்கள் விரும்புவதில்லை.

மன அழுத்தமும் ஒலி மாசடைவுகள்

உலகின் பெருநகரங்கள் அதிகம் மக்கள் நிறைந்த பொருளாதார நடவடிக்கைகள் கைத்தொழில்கள் நிறைந்த விரைவாக இயங்கும் பகுதிகளாக இருப்பதனால் அங்கு அதிகளவான ஒலி மாசடைதல் இடம்பெறுவதனால் அங்கு மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது கடினம்.

இந்த இயந்திர வாழ்க்கையில் மனிதர்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது நிம்மதியாக தூங்க முடியாது இதனால் அதிகளவான மக்கள் மனஅழுத்தம் சார் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கட்டுப்படுத்தும் வழிகள்

இந்த ஒலி மாசடைதல், வளி மாசடைதல் போன்றவற்றை தடுப்பதற்கு ஒரே வழி இந்த இயற்கை சூழலை பாதுகாப்பதும் மோசமான இயந்திர பாவனைகளை குறைத்து பசுமை நகரங்களை உருவாக்குதலும் ஆகும்.

வளர்ந்த நாடுகள் தமது நகரங்களை இயற்கையோடு கூடிய பசுமையாக அமைக்கின்றனர். இரைச்சல்கள் இல்லாத மிதி வண்டிகளில் பயணிக்க விரும்புகின்றனர். இயற்கையை மதித்து நடப்பதுவே ஒலி மாசடைதலை குறைக்க உதவும்.

முடிவுரை

பெரிய பெரிய நகரங்களில் வாழ்கின்ற மனிதர்கள் அங்கு உள்ள மாசடைவுகளை விரும்பாது அழகான இயற்கையுடன் கூடிய கிராமங்களுக்கு சென்று வாழ ஆசைபடுகின்றனர்.

மன அமைதியுடனும் நிம்மதியாகவும் வாழவே ஒவ்வொரு மனிதர்களும் விரும்புவார்கள் அதனை தான் இந்த இயற்கை எமக்கு வரமாக தந்தது.

அதனை நாகரீக வளர்ச்சி எனும் பெயரில் நாம் மாசடைய செய்வது நாம் செய்த பெரும் தவறாகும் இவற்றை இன்றாவது நாம் சரி செய்து கொண்டால் தான் நாம் இழந்த இயற்கை வாழ்வை மீள பெற்றுக் கொள்ள முடியும்.

You May Also Like:

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை