நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை

Naan Oru Kathai Puthagam Katturai

இந்த பதிவில் “நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை” என்ற தலைப்ப்பில் இரண்டு (02) கட்டுரை பதிவை காணலாம்.

கதைப்புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் நான் ஒரு கதைப்புத்தகமாக இருந்தால் எப்படி இருக்கும் எனும் எண்ணம் எனக்குள் எழும். அந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரைகளை வடிமைத்துள்ளேன்.

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை – 1

நான் ஒரு கதை புத்தகம் இங்கே குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் கதை என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் என்னை நிச்சயமாக எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன். என்னை வாசிப்பதற்காக பலரும் நான் இருக்கும் நூலகங்களை நோக்கி ஆர்வத்தோடு வருவார்கள்.

அவர்கள் என்னை வாசிப்பதனால் பல புதுமையான அனுபவங்களை பெற்று கொள்ளுவார்கள். அவர்கள் எதிர்பார்க்கின்றதனை போலவே நானும் அவர்களை ஆச்சரியத்தில் மிதக்க வைக்கின்ற பல வினோதங்கள் நிறைந்த கதைகளை தாங்கி இருப்பேன்.

கதைப்புத்தகம் வாசிப்பது எவ்வளவு சுவாரஸ்யங்கள் நிறைந்தது என்பதனை என்னை வாசிப்பவர்கள் நன்கு அறிவார்கள். அதுமட்டுமின்றி அவர்களது வாழ்க்கைக்கு உதவ கூடிய பல சந்தர்ப்பங்களையும் செய்திகளையும் நான் அவர்களுக்கு வழங்குவேன்.

எல்லோரையும் எனது வசீகரமான தோற்றத்தினாலும் கதைகளினாலும் என்னை வாசிக்க ஆர்வமூட்டுவேன். என்னை வாசிக்கின்ற குழந்தைகள் சிறந்த கதை சொல்ல கூடியவர்களாக இருப்பார்கள்.

வாசிப்பவர்களை மெய் மறக்க செய்து அவர்களது வாழ்வை மாற்ற கூடிய கதைகளை நான் அவர்களுக்கு சொல்லுவேன். என்னை வாசிக்கின்றவர்கள் புதுமையாக சிந்திப்பார்கள் அழகான முறையில் எழுத்து ஆக்கங்களை செய்வார்கள் என்னை போலவே பல நல்ல கதை புத்தகங்களை தேடி வாசிக்க துவங்குவார்கள்.

நேரத்தை விரயமாக செலவழிக்கின்ற இந்த காலத்து குழந்தைகளை நான் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வகையில் வாசிப்பு பழக்கத்தை அவர்களுக்கு நான் உருவாக்குகிறேன். பல கதைகள் சொல்லும் என்னுடைய கதை என்னை எழுதியவரால் துவங்கியது. என்னுடைய கதைகள் பலரது மனதை தொடும் என்று நான் நம்புகிறேன்.

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை – 2

நான் ஒரு கதைப்புத்தகம் இன்று ஒரு தூசி படிந்த அறைக்குள் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடக்கின்றேன். முன்பு பல ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு சிறந்த ஆசிரியரின் வீட்டில் இருந்தேன் அவர் என்னை தனது மகனுக்காக ஆசையோடு வாங்கி அவனது பிறந்தநாள் பரிசாக என்னை அவனுக்கு கொடுத்தார்.

அவனும் என்னை மகிழ்ச்சியோடு வாங்கி வைத்து கொண்டான். மிகவும் ஆர்வமாக என்னை எடுத்து வாசிப்பான் நான் அவனுக்கு சிறந்த நண்பனாக மாறினேன். என்னை வாசிக்க வாசிக்க அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி பாடசாலைக்கு செல்கையில் என்னை தன்னோடு எடுத்து செல்வான் அங்கு இடைவேளை நேரங்களில் என்னை எடுத்து வாசிப்பான் தனது நண்பர்களுக்கும் எனது கதைகள் பற்றி மகிழ்ச்சியாக சொல்லி கொள்வான்.

என் மீது அவன் காட்டிய ஆர்வத்தை கண்டு எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை வாசிக்க வேண்டுமென விரும்பிய தனது நண்பனிடம் ஒரு நாள் அவன் என்னை விருப்பமின்றியே இரவலாக கொடுத்து விட்டான் எனது நண்பனை பிரிந்ததை நினைத்து நான் வருந்தினேன்.

என்னை எடுத்து சென்றவன் என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை ஒரு சில நாட்கள் வாசித்து விட்டு எங்கோ வெளியூர் தனது குடும்பத்துடன் போய்விட்டார்கள். என்னை அநாதரவாக இங்கே ஓர் அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். எனது நண்பனிடம் மீண்டும் என்னை ஒப்படைக்கவும் இல்லை.

எனது நிலை இன்று மிகவும் மோசாமாகி விட்டது. என்னை சுற்றி தூசுகளும் படிந்துவிட்டன. எலிகள் கறையான்கள் என்னை பதம் பார்க்கின்றன. எத்தனையோ அழகிய கதைகளை சொன்ன என்னுடைய கதை இன்று இவ்வாறு ஆகி விட்டதை எண்ணி நான் வருந்துகின்றேன். என்னுடைய நண்பன் என்னை தேடி வருவான் என நம்பி காத்துகொண்டிருக்கின்றேன்.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை