கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

gautama buddha history in tamil

பௌத்த மதத்தின் தர்மகர்த்தாவாக விளங்குபவர் கௌதம புத்தர் ஆவார். ‘ஆசையே துன்பத்திற்கு அடிப்படை’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி,நல்ல தியானம் போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர்.

இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவராகவும், விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்படுகிறார். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, இவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது.

புத்தரின் போதனைகள் அனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. இவரது போதனைகள் யாவும் குரு – சீடர்கள் மூலம் கடத்தப்பட்டு, 100 ஆண்டுகளின் பின் திரிபிடகம் எனும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

இயற்பெயர்சித்தார்த்த கௌதமர்
வேறு பெயர்சாக்கிய முனி, புத்தர், ததாகர்
பிறப்புகி.மு 563, நேபாளம்
தாய்மாயா
தந்தைசுத்தோனார்
வாழ்க்கை துணைவியசோதரை
பிள்ளைராகுலன்
இறப்புகி.பி 483

ஆரம்ப வாழ்க்கை

சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாளே அவரது தாயார் இறந்துவிட்டார். அதனால், இவரை இவரது தாயாரின் தங்கையாரான, மகா பிரஜாபதி கௌதமியாரே வளர்த்தார். இவர் தனது 16 வயதில் யசோதரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராகுலன் என்ற ஆண் பிள்ளையும் உண்டு.

இவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் இவரது தந்தையார் ஏற்படுத்திக் கொடுத்து, வெளியுலகம் தெரியாமல் அரண்மனை வசதிகளை அனுபவிக்கும் ஒருவராக வளர்த்தார்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தன்மை கிடைத்தபோது, உதவியாளர் ஒருவருடன் வெளியே சென்று மனித வாழ்க்கையில் துன்பங்களை அறிந்தார்.

பின், வாழ்வின் இரகசியத்தை காண துறவறம் ஏதும் பூணாமல், கானகம் சென்றார். கானகத்தில் தவம் புரிந்த சித்தருக்கு பல சீடர்கள் கிடைத்தனர்.

பல நாட்கள் கழித்து அவ்வழியாக சென்ற இசைக்கலைஞன் ஒருவன், ” ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இறுக்கிக் கட்டினால் அழிந்துவிடும் என்றும் மிக தளர்வாக கட்டினால் அதை அசைக்க முடியாது” என்றும் கூறிக் கொண்டு சென்றார்.

இதனை செவிமடுத்த சித்தார்த்தர் தான் செய்யும் தவறை உணர்ந்து தவம் கலைந்து, நீராடிவிட்டு வந்து, பீகார் மாவட்டத்தின் “கயை” என்னும் இடத்தில் உள்ள போதி மரத்தடியில் அமர்ந்து, கவலைக்கும் துன்பத்திற்கான காரணங்களைக் கண்டு, புரிந்துணர்வு ஞானத்தின் முதல் அடிக்கல் என்பதை அவர் தனது 37 வயதில் உணர்ந்தார். அவ்விடம் இன்று “புத்தகயா” என்றுபௌத்த மக்களால் வழிபடப்படுகிறது.

புத்தரால் தோன்றிய புத்தமதம்

சித்தார்த்தர் தான் அறிந்த ஞானத்தினை மக்களுக்கு போதித்து அவர்களது வாழ்க்கையில் படும் துயர் மற்றும் கவலையினை கலைக்க நினைத்தார் . மக்களிடம் சென்று அவர்களுக்கு நல்வாழ்விற்கான தனது போதனைகளை அவர் போதித்தார்.

இவரது போதனையால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒரு சமூகத்தை கூடி அதற்கு புத்தமதம் என்று பெயர் வைத்து அவரின் கொள்கைவழி வாழ்க்கை நடைமுறையினை அமைக்கவேண்டும் என்று நினைத்தனர். அன்று உருவானதே இந்த புத்தமதம் இன்று வரை புத்தமதத்தினை உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

இந்த பௌத்த மதமானது தேரவாத புத்த மதம், மகாயான புத்த மதம் என இருவகையாகவும் காணப்படுகிறது. இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டிய சமய போதனைகளையும், உபதேசங்களையும் பல இடங்களில் சென்று போதித்தார்.

சாரணாத்தில் உள்ள மான் பூங்காவில், இவரது பிரபலமான ஓர் உபதேசம் நடைபெற்றது. அன்று அவரது உபதேச கருத்துக்களால் கவரப்பட்ட அடியவர்கள் இவரை “கௌதம புத்தர்” என்றும் “புத்தர்” என்றும் அழைத்தனர்.

புத்தர் தனது போதனைகளை போதிக்க உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார் எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து பின் அவரை பின்தொடர்ந்தனர் இவரது போதனைகள் சில, இந்து மதத்திற்கு எதிராக காணப்பட்டமையால், இவரது சில போதனைகளுக்கு இந்துக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புத்தரின் கூற்றுக்கள்

புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ கூறியது இல்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு சராசரி மனிதன் என்பதையும், உலகில் பிறந்த மனிதர்கள் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார்.

“ஆசையே துன்பத்திற்கு அடிப்படை” எனக் கூறினார். மற்றும் ஆன்மாவை புறந்தள்ளி அனாத்மா என்பது உலகிற்கு அதிகம் பொருள் தருகிறது என்றும் கூறினார். மேலும், வேதங்களையும் கடவுள் இருப்பு பொய் என்றும் ஏதும் கூறாமல் அவை குறித்து ஏதும் பேசாமல் விட்டு விட்டார்.

புத்தரின் கொள்கைகள்

பௌத்த சமய வாசகர்கள் பின்பற்ற வேண்டிய பஞ்சசீலக் கொள்கைகள், எண்வகை மார்க்கங்களையும் வகுத்து அவற்றைப் பின்பற்றி வாழும் படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களையும் துறவிகள் ஆகிய பிக்குகளும், பிணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்து அவர்களுக்கான சங்கங்களையும் உருவாக்கினார்.

புத்தமத பரவல்

கிமு மூன்றாம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா , ஸ்ரீலங்கா ஆகிய இடங்களிலும் புத்த மதத்தை பரப்பப்பட்டது. கிபி முதலாம் நூற்றாண்டு புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கும் கி. பி நூற்றாண்டில் அசோகர் ,கனிஷ்கர் முதலானோர் பேர் உதவியுடன் பரப்பப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு